English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cressy
a. காரச்சத்துள்ள இலைகளையுடைய செடிகள் நிறைந்த.
crest
n. தலைச்சூட்டு, கொண்டை, சிகையணி இறகு, மயிர் முடி, தலைக்கவசத்தின் உச்சி, கவச முடிச்சூட்டு, மலைக்குடுமி, மலைச்சிகரம், அலைமுகடு, உச்சி, முகடு, குதிரை முதலிய விலங்குகளின் பிடரி, மாலை-கவசம்-பட்டயங்களில் தனிச்சின்னமாக வழங்கப்படும் அணியுருச்சிலை, (உள்.) எலும்பின்மீதுள்ள வரைமுகடு, (கட்.) கேடயச் சின்னம், (வி.) கொண்டை பொருத்து, சூட்டு ஆகப் பயன்படு, முகடு அளாவு, அலைகள் வகையில் முகடெழ எழு.
crest-fallen
a. கிளர்ச்சியிழந்த, சோர்வுள்ள, அவமதிப்படைந்த, தலைகுனிவு எய்தியுள்ள.
crested
a. சூட்டு உடைய, முகடாக உடைய, உச்சியிற் கொண்ட, (தாவ.) தலைச்சூட்டுபோன்ற கிளர்ந்த அமைவு இணைக்கப்பட்டுள்ள.
crestless
a. சூட்டிழந்த, கொண்டை அற்ற, உயர்குடி உரிமையற்ற.
cretaceous
a. சீமைச் சுண்ணாம்பினாலான, சீமைச் சுண்ணாம்பின் இயல்பு வாய்ந்த.
Cretic
n. பண்டைய கிரீட் நாட்டவர், (பெ.) கிரீட் நாட்டுக்குரிய.
cretic,
n. -1 (இலக்.) இரண்டு நெடிற்சீர்களுக்கிடையில் ஒரு குறுஞ்சீர் கொண்ட வரி.
cretify
v. சீமைச் சுண்ண உப்புச்செறியவை, சீமைச் சுண்ணமாக மாற்று.
cretin
n. ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் காணப்படும் அங்கக்கோணலுடைய குறையறிவு மக்கள் வகையினர், கேடயச் சுரப்பிக் கோளாறினால் உடல்வளர்ச்சி அறிவுவளர்ச்சி தடைப்பட்ட மனிதர்.
cretinism
n. கேடயச் சுரப்பி சுரப்பாற்றலிழந்து போவது காரணமாக அங்கக் கோணல் அல்லது தடைப்பட்ட வளர்ச்சியுடன் அறிவு மந்தம் ஏற்படும் நிலை.
cretonne
n. சலவையற்ற முரட்டு அச்சடித்த துணி வகை.
crevasse
n. பனிப்பாறைப் பிளவு, (வி.) பனிப்பாறைகளாகப் பிளவு செய்.
crevice
n. கீறல், பிளவு, வெடிப்பு, சிறு இடைவெளி.
crew
n. படகோட்டிகளின் தொகுதி, கப்பலோட்டிகளின் தொகுதி, கும்பல், கூட்டம்.
crew, v. crow
என்பதன் இறந்தகால வடிவம்.
crewel
n. திரைச் சித்திர வேலைக்குரிய முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுல், பின்னல் சித்திர வேலைப்பாட்டுக்குரிய கம்பிளி இழை, முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணிமீது செய்யப்படும் சித்திர வேலை, (வி.) முறுக்கப்பட்ட மெல்லிய கம்பளி நுலைக்கொண்டு துணி மீது சித்திர வேலை செய்.
crewman
n. பணிமக்கள் குழுவில் ஒருவர்.
crib
n. மாட்டுத்தொழு, தீவன அழிஅடைப்பு, தீனித் தொட்டி, கூலப்பெட்டி, உப்புக்குடுவை, குப்பைத்தொட்டி, மட்பாண்ட முதலிய வற்றுக்கான கூடை, மீன் கூடை, தொட்டில், சிறு அறை, குடில், குச்சு வீடு, இடுக்கமான இடம், சிறு அடைப்பு, மணற்பாங்கான இடத்தில் அணை கடைக்கால்களுக்கு இடையே கல்-மண்ணிட்டு நிரப்புவதற்குரிய மரத்தாலான பணிச்சட்டம், சுரங்க வழியமைப்பு ஆதாரப் பணிச்சட்டம், சிறு திருட்டு, திருடிய சிறு பொருள், நுற் கருத்துத் திருட்டு, திருட்டு ஏட்டு வெளியீடு, மாணவர் திருட்டுப் பாடற்குறிப்பு, மறைமொழி பெயர்ப்பு, சீட்டாட்ட வகையில் ஆட்டக்காரர் பயன்படுத்தவல்ல கழி சீட்டு, (வி.) கொட்டிலில் தீவனமிடு, தொட்டியில் இடு, கூடையில் வை, தொட்டிலில் கிடத்து, இடுக்கமான இடத்தில் அடைத்து வை, சிறு திருட்டுச் செய், கருத்துத் திருடு, உரிமையின்றி வெளியிடு, இசைவின்றிப் படிசெய்.