English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
curvature
n. வளைவு, தொய்வு, நேர்க்கோட்டிலிருந்து கோடிய கோட்டம், தொய்வின் நேர்நிலை திறம்பிய அளவு, வட்டத்தின் ஆர எதிர் கூற்றளவு.
curve
n. வளைவு, வளைகோடு, வளைபொருள், வளைவடிவம், வளைபரப்பு, (க-க.) வளைமுகடு, மாறுபாடு அல்லது இயக்கப்போக்குக் காட்டும் அளவு கட்டச் சாய்வரை, சமநிலைக் குறிக்கோடு, (வி.) வளைவாக்கு, வளைவாகு, வளைந்து செல், வளை.
curvesome
a. வடிவழகுடைய, வளைவுகளையுடைய.
curvet
n. குதிரையின் மென் பாய்ச்சல், முன்கால்கள் முதலிலும் அவை நிலம் பாவுமுன் பின் கால்களும் ஒருங்கு தாவும் இயக்கம், துள்ளிக் குதித்தல், குதியாட்டம், (வி.) துள்ளிப்பாய், குதித்து மகிழ்.
curvicaudate
a. கோணலான வாலுள்ள, வளைந்த வாலுடைய.
curvicostate
a. வளைந்த விலா எலும்புகளுள்ள.
curvidentate
a. வளை பல்லுள்ள.
curvifoliate
a. வளைந்த இலைகளையுடைய.
curviform
a. வளை வடிவுள்ள.
curvilineal, curvilinear
a. வளை கோடுகளை வரம்புகளாகக் கொண்ட, கோணல் வரைகளைக் கொண்ட.
curvinervate
a. இலைகளில் கிளைநரம்புகள் நடு நரம்பிலிருந்து பிரிவுற்று ஓரத்தை நோக்கிக் குவிந்து செல்கிற.
curvirostral
a. கீழ்நோக்கி வளைந்த அலகுள்ள.
curvital
a. வளைவு சார்ந்த.
cuscsu
-3 n. வெட்டி வேர்.
cuscus
-1 n. கசகசா, ஆப்பிரிக்கத் தினைவகையின் கூலமணி.
cusec
n. நொடிக்கு ஒரு கண அடி வீதம் ஓடும் நீரளவு அலகு.
cushion
n. மெத்தை, திண்டு, தலையணை, பஞ்சு திணித்த இருக்கை, வில் வைத்த இருக்கை, பஞ்சடை கைத்திண்டு, திண்டுறை, துள்ளல் பஞ்சுறை, செதுக்குவேலை அடித்திண்டு, மின்பொறியின் தொய்வகக் காப்பு, பெண்டிர் மயிர் ஒப்பனை வட்டு, பெண்டிர் பாவாடை புடைக்கட்டு, மேடைக்கோற்பந்தாட்ட மேசை உள்வரிக் கட்டு, வளைவு மையக்கட்டு, நீராவிப் பொறியில் உந்துகோலுக்கு அணையுறையாக விடப்படும் நீராவி எச்சம், அடிதாங்கும் தடையுறை, பன்றி முதலிய விலங்குகளின் பிட்டப்பக்கச் சதைப்பற்று, குதிரைக் கால்குளம்புச் சதை, மென்பஞ்சு போன்ற தின்பண்ட வகை, மிதிவண்டிச் சக்கரத்தின் புறவுறை, (வி.) பஞ்சுறை இணை, மெத்தைமீது அமர்த்து, திண்டுறைமீது வை, மெல்லணையாய் உதவு, மோதல் தடுத்துதவு.