English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cursive
a. கையெழுத்து வகையில் எளிதாக ஓடும் போக்குடைய, நேரொழுக்கான, ஒழுகலான.
cursor
n. கருவியின் சறுக்குறுப்பு, கணிப்பளவுகோலின் கணிப்புக் கூறாக நுண்ணிழை வரையிட்ட பளிங்கியலான சறுக்குச் சட்டம்.
cursores
n. pl. ஓடும் பறவைகள்.
cursorial
a. ஓடுவதற்கு ஏற்றதாக அமைக்கப்பட்ட, ஓடும் செயலுக்கேற்ற உறுப்புள்ள.
cursory
a. மேலோட்டமான, மிகு விரைந்தியன்ற, நன்கு ஆராயாத, ஆழமில்லாத, மேலீடான.
curt
a. சுருக்கமான, குறுகலான, சுருக்கென்ற, மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்ற.
curtail
v. வெட்டிக்குறை, குறுகலாக்கு, சுருக்கு, உரிமை இழக்கச்செய்.
curtail-step
n. விளிம்புகள் வட்டமாக வளைவாக்கப்பட்ட ஏணிப்படிக்கட்டின் கடைசிக் கீழ்ப்படி.
curtain
n. திரை, திரைச்சீலை, துணியாலான மறைப்பு, பலகணித் திரை, படுக்கையைச் சுற்றித் தொங்கும் மூடுதிரை, ஞாயில்களின் இடைமதில், மேற்கூரையற்ற இடைச்சுவர், நாடக மறைப்புத்திரை, தீப்பாதுகாப்புக்கான நாடக இரும்புத்தட்டி, திரைவீழ்ச்சி, காட்சி முடிவு, அனல் கக்கும் பீரங்கிகளாலான தடைகாப்பு வேலி, (வி.) திரை மறைப்பு அமை, திரையால் மூடு, திரையிட்டுத் தடு.
curtain-call
n. காட்சி முடிவில் மேடையில் தோன்றும்படி அவையோரின் அழைப்பு.
curtain-lecture
n. தலையணைமந்திரம், பள்ளியறையில் கணவனிடம் மனைவியின் பேச்சு, மனைவியின் படுக்கையறை இடித்துரை.
curtain-raiser
n. முக்கிய நாடக ஆட்டத்திற்கு முன் நிகழ்த்தப்படும் சிறு நாடகம்.
curtain-speech
n. நடிகரோ நாடக நுலாசிரியோ மேலாளரோ திரைக்குமுன் வந்து நின்று நிகழ்த்தும் உரை.
curtain-wall
n. இடநிரப்புச்சுவர்.
curtana
n. முடிசூட்டு விழாவில் கருணைப்பண்பின் அறிகுறியாகக் கொண்டு செல்லப்படும் முனையற்ற வாள்.
curtate
a. குறுக்கப்பட்ட, குறைக்கப்பட்ட, நிலவுலகம் அல்லது கதிரவனிடமிருந்து கோளுக்குள்ள தொலைவு வகையில் கோளெறிமீது படிவான.
curtilage
n. மனைவியளாவிய வெளிநிலம்.
curtsey, curtsy
வணக்கம், முழங்காலை வளைத்து பெண்கள் செய்யும் வணக்கம், (வி.) முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் செய்.
curule
a. வளைகாலுள்ள முக்காலி போன்ற, ரோம உயர்நீதி நடுவரின் வளைநாற்காலி இருக்கைக்குரிய.
curvate, curvated
ஒழுங்காக வளைந்துள்ள, ஒழுங்காக வளைவாக்கப்பட்ட.