English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
currant
n. விதையற்ற உலர்ந்த கருமுந்திரிப்பழம்.
currant-bread
n. உலர்ந்த முந்திரிப்பழம் உள்ளீடாய் அமைந்த அப்பம்.
currant-bun
n. உலர்ந்த முந்திரிப்பழங்கள் நிரம்பச் சேர்க்கப்பட்ட மணமுள்ள கருநிற மெல்லப்ப வகை.
currant-cake
n. உலர் முந்திரிப்பழங்கள் உள்ளீடாக வைக்கப்பட்ட மென் மாவடை.
currant-jelly
n. உலர்ந்த சிவப்பு அல்லது கறுப்பு முந்திரிப்பழப் பாகு.
curranty
a. முந்திரிப்பழங்கள் நிறைந்துள்ள.
currency
n. நடப்பு நாணயம், செலவாணி, செலவாணியிலுள்ள பணம், செலவாணியிலுள்ள தாள் நாணயம், நடப்பு, நடைமுறைப் போக்கு, சுற்றோட்டம், கருத்து நிலவரத்திலிருத்தல், சொல் வழக்காறுடைமை, செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
current
n. ஒழுக்கு, நடப்பு, போக்கு, நிலவரம், நீரோட்டம், காற்றுவீச்சு, மின்னோட்டம், (பெ.) ஓடுகிற, வழக்காற்றிலுள்ள, நிகழ்கிற, நடப்பிலுள்ள, நடைமுறைக்குரிய, நிகழ்காலத்துக்குரிய, இன்றைய, நாளது, மக்களிடையே ஊடாடுகிற, உலவுகிற, பலராலும் ஏற்கப்படுகிற, ஏற்றமைந்ததான.
current-bedding
n. (மண்.) பொய்ப்படுகை.
curricle
n. இரு சக்கரங்களும் இரு குதிரைகளுமுள்ள திறந்த வண்டி, இரதம், தேர்.
curriculum
n. பல்கலைக்கழகப் பாடத்தொகுதி, பாடத்திட்டம்.
currier
n. பதப்படுத்தப்பட்ட தோலை நிறமூட்டி ஒழுங்கு செய்பவர்.
currish
a. இழிந்த நாய் போன்ற, வெடுவெடுப்பான, உறுமுகிற, அற்பகுணமுள்ள, இழிந்த உணர்ச்சியுள்ள.
curry
n. (த.) கறி-குழம்பு-கூட்டுவகை, துணை உணவு, (வி.) கறி கூட்டு, குழம்புப்பொடி கலந்து சுவையூட்டு, துணை உணவு ஆக்கு.
curry-comb
n. குதிரைச் சீப்பு, குதிரையைத் தேய்த்துத் துப்புரவாக்க உதவும் இரும்புக்கருவி.
curry-leaf
n. கருவேப்பிலை.
curry-paste, curry-powder
n. கறிகளுக்கு இடும் கூட்டு அரைப்பு.
curse
n. தெறுமொழி, வசைமொழி, பழிப்பாணை, சாபம், சாப விளைவு, வெம்பழி, தீம்பு, வேதனை, படுதுயர், சமூக விலக்கீடு, சமுதாயக் கட்டு, பழிக்கப்பட்ட பொருள், தெய்வப்பழிப்பு, (வி.) தெறுமொழி கூறு, பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய், மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து, கட்டுச் செய், விலக்கீடு செய், தெய்வம் பழி, பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
cursed
a. பழிப்புரைக்கு ஆட்பட்ட, தெறுமொழியால் அழிக்கப்பட்ட, பழிப்புக்குரிய, வெறுக்கத்தக்க.
cursed, v. curse
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.