English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
curio, n. pl. curios.
விந்தைப்பொருள், அருங்கலைப்பொருள்.
curiosity
n. அறிய ஆர்வமுள்ள இயல்பு, பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம், புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள், அரும்பொருள், வழக்கத்திற்கு மாறான பொருள்.
curious
a. அறிய ஆர்வமுள்ள, அறிவார்வ மிக்க, கூரிய நுண்ணுணர்வுள்ள, பிறர் காரியங்களில் தலையிடுகிற, மிகு அக்கறையுள்ள, அரிய வேலைப்பாடுடைய, தனித்திறம் வாய்ந்த, அரிதான, நடை நயமற்ற.
curl
n. சுருளுதல், சுருள்வு, சுருண்ட நிலை, அலை வளைவு, சுழி, சுழல், திருகு சுருள், சுரிகுழல், சுரிமயிர்க்குழல், பனிச்சை, இலைகள் சுருள வைக்கும் செடிநோய் வகை, உருளைக்கிழங்குச் செடி நோய்வகை, (வி.) சுரிமயிர்க் குழலாக்கு, திருக்கு, சுருட்டு, வளைந்து செல்லச் செய், அலையதிர்வுறுத்து, சுரி, சுருண்டு சுருங்கு, நௌி, அலையுதிர்வுறு, சுழி, சுழல், பனித்தளத்தில் கற் சறுக்காட்டமாடு.
curl-paper
n. முடியைச் சுருட்டுவதற்காக முறுக்கி முடிக்குள் செலுத்தப்பட்ட தாள்.
curler
n. சுருட்டுபவர், சுருட்டுவது, சுருளுவது, பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டில் ஈடுபடுபவர்.
curlew
n. அழுகுரலெழுப்பும் வளைமூக்குள்ள பறவை வகை.
curlicue
n. வேடிக்கை விசித்திரமான சுருள்.
curling
n. பனிக்கல் சறுக்காட்டம், ஸ்காத்லாந்தில் பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டு வகை.
curling-irons
n. pl. தலைமூடியைச் சுருட்டையாக்கும் இருப்புக் கருவி.
curling-pins
n. கொண்டை ஊசி, சுருளாக்கப்பட்ட முடியைப் பாதுகாக்கும் ஊக்கு.
curling-pond
n. பனிப்பரப்பில் வழவழப்பான கற்களை நழுவவிடும் விளையாட்டுக்குரிய நீர் நிலை.
curling-stone
n. பனிப்பரப்பில் நழுவ விட்டு விளையாடுவதற்கான கைப்பிடியுள்ள கனத்த கல்.
curly
a. சுருளுள்ள, சுருள் சுருளான, சுருள் நிறைந்த.
curly-greens
n. சுருண்ட இலைகளுள்ள கோசுக்கீரை வகை.
curmudgeon
n. கஞ்சன், கருமி, உலோபி, பேராவற்காரன், சிடுசிடுப்புடையவன்.
curmurring
n. குமுறல், வயிற்றிரைச்சல், வயிற்றுப்பொருமல்.
curney, curny
சிறு துணுக்குகளாகவுள்ள, சிறு மணிகளாகவுள்ள.
currach, curragh
பரிசல், ஓடம், சிறு படகு.
curragh
n. தரிசான சதுப்பு நிலம்.