English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cupidinous
a. சின்றின்ப அவா நிரம்பிய.
cupman
n. மனத்திற்குகந்த தோழன்.
cupodity
n. ஆதாய ஆர்வம், பொருட் பேரவா, பிறர் பொருள் கவரும் ஆசை.
cupola
n. தூபி மாடம், வில்மச்சு மண்டபம், குவி மாடத்தின் உட்பகுதி, குவி மாடம், தூங்கானை மாடவிளக்கு, துப்பாக்கி வைக்கும் பாதுகாப்பு மாடம், இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பு, (வி.) வளைமாடம் அமை, காப்புமாடம் நிறுவு.
cupper
n. விருந்தில் குடிகலம் பரிமாறும் பணியாள், குழிவுறிஞ்சிமூலம் குருதி வாங்குபவர்.
cupping
n. காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் உதவியால் குருதி வாங்குதல்.
cupping-glass
n. குருதி உறிஞ்சு கருவி, காற்று நீக்கப்பட்ட கண்ணாடிக்குமிழ் மூலம் குருதி உறிஞ்சும் அமைவு.
cupreous
a. செம்புக்குரிய, செம்பு அடங்கிய, தாமிரம் போன்ற, ஓரிணைதிறத் தாமிரத்துக்குரிய, ஓரிணைதிறத் தாமிரம் அடங்கிய.
cupric
a. ஈரிணைதிறச் செம்பாலான, ஈரிணைதிறச் செம்பைச் சார்ந்த.
cupriferous
a. செம்பு விளைவிக்கின்ற, செம்பு தருகின்ற.
cuprite
n. சிவந்த செம்பு கனி உலோகக்கலவை, செம்பியல் உயிரகை.
cupro-nickel
n. செம்பும் நிக்கலும் சேர்ந்த கலவை.
cupular, cupulate
கிண்ணம் போன்ற, கிண்ண வடிவக் காய் வகைகளின் உறை சார்ந்த, தனிச் செடியாக வளரும் சிறு இலைமொட்டைச் சார்ந்த.
cupule
n. (தாவ., வில.) கிண்ண வடிவ உறுப்பு, கல்லீரல் நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் செடிவகையின் இலையில் உள்ள தனிச் செடியாக வளரத்தக்க கிண்ண வடிவ மொட்டு, காய் வகைகளின் கிண்ணம் போன்ற மேலுறை.
cupuliferous
a. கிண்ண வடிவ மேலுறையையுடைய கனிகளேந்திய மர இனப்பிரிவு சார்ந்த.
cur
n. கீழின நாய், வெறுக்கத் தகுந்த கயவன், இழிஞன், போக்கிரி.
curacao, curacoa
கசப்பு ஆரஞ்சுத் தோலினால் மண மூட்டப்பட்ட தேறல்.
curacy
n. சிற்றுர்த் துணைமைநிலைச் சமயகுரு நிலை, துணை நிலைச் சமயகுருவின் வேலை, துணைநிலைச் சமயகுருவின் மானியம்.
curara, curare, curari
அரளி போன்ற தென் அமெரிக்க செடியின் வேர் வகையிலிருந்து எடுக்கப்படும் ஊக்க அழிவு செய்யும் நஞ்சு வகை.
curarine
n. வேர் வகையிலிருந்து எடுத்து அறுவை மருத்துவத்தில் தசைகளுக்கு அயர்வு அகற்றப் பயன்படுத்தப்படும் கொடிய நச்சு மருந்து.