English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cunning
n. சூழ்ச்சி, தந்திரம், வஞ்சகம், திறமை, கைத்திறம், அறிவு, (பெ.) சூழ்ச்சித் திறமுடைய, தந்திரமுடைய, இரண்டகமுடைய, வஞ்சகமான, திறமையுடைய, கைத்திறமிக்க, அறிவார்ந்த.
cunningness
n. தந்திரமுள்ள தன்மை, சூழ்ச்சி குணம், வஞ்சகக் குணம், சூதுள்ள தன்மை.
cup
n. குடிகலம், கிண்ணம், குவளை, பரிசுக்கலம், குழிவு, பள்ளம், கிண்ணம் போன்ற அமைவு, குழிவுடைய பகுதி, குவளை நிறை அளவு, கிண்ண நீர்மம், குடிகலத்திலுள்ள பொருள், குடிகலவை, ஊழின் பங்கு, வரற்பாலது, இன்ப அளவு, துன்ப அளவு, (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு, குவளையில் வை, குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை, குழிவாகு.
cup-and-ball
n. குதைகுழிப் பொருத்து, பிணிப்புற்ற பந்தைக் கழியின் நுனியிலுள்ள குழிவில் பிடிக்கும் விளையாட்டுவகை.
cup-and-ring
n. பாறைகளில் கிண்ணவடிவைச் சுற்றி வளையங்களாக அமைந்த வரலாற்றுக்கு முற்பட்ட குறி.
cup-coral
n. கிண்ண வடிவமுள்ள பவளம்.
cup-gall
n. மரவகையின் இலைகளில் கிண்ண வடிவமுள்ள புடைப்புக் கோளாறு.
cup-lichen
n. கிண்ணம் போன்ற அமைப்புடைய காளான் வகை.
cup-mark
n. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்துக்குரிய கிண்ண வடிவான குகைப்பாறைப் பள்ள அடையாளம்.
cup-shake
n. வெட்டு மரத்தில் இருவளையங்களினிடையே காணப்படும் பிளவு.
cup-tie
n. பரிசுக்கோப்பை ஆட்டம், பரிசுக்கோப்பைப் போட்டியில் வெற்றி பெறுபவர்களைத் தீர்மானிப்பதற்கான தொடர் ஆட்டங்களில் ஒன்று.
cupbearer
n. விருந்தில் குடிகலம் பரிமாறுபவர்.
cupboard
n. அடுக்குப்பலகை, அடுக்களைத் தட்டுமுட்டுக்களை வைக்க உதவும் நிலையடுக்கு, (வி.) சேமித்து வை.
cupboard-faith
n. பொருளியல் நோக்குடைய சமயப்பற்று.
cupboard-love
n. பொருளியல் நோக்குடைய பற்று.
cupel
n. பொற்கொல்லர் மாற்றுப்பார்க்கப் பயன்படுத்தும் சிறுகலம், புடைபெயர்க்கத் தக்கதாய்ப் புடமிடப் பயன்படுத்தப்படும் எறிகனல் அடுப்பு, (வி.) எறிகனல் அடுப்பு மூலம் மாற்றுப்பார்.
cupellation
n. புடமிட்டு மாற்றுப்பார்ப்பதன் மூலமே உயர் உலோகங்களை மீட்டுப்பெறுதல்.
cupful
n. கிண்ண நிறையளவு.
cuphead
n. பாதி உருண்டை வடிவமுள்ள தாழின் சுரைத் தலை, குமிழ் வடிவ ஆணித்தலை.
Cupid
n. மேலையுலகின் வேள்மதன், ரோமரின் காதல் தெய்வம்.