English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
culmination
n. உச்சநிலை அடைதல், உச்சநிலை, முகடு, உச்சநிலைப்புள்ளி, (வான்.) வானுச்சம், வானிலை உச்சத்தைக் கடக்கும் நிலை.
culpability, culpableness
n. குறைகூறத்தக்க நிலை.
culpable
a. குற்றமுடைய, குற்றத்துக்குரிய, குறைகூறத்தக்க.
culparory
a. குற்றச்சாட்டுத் தெரிவிக்கிற.
culprit
n. குற்றவாளி, தவறிழைத்தவர், குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படாமலிருப்பவர்.
cult
n. வழிபாட்டு மரபு, சமயக் கோட்பாட்டுமுறை, வெறி ஈடுபாடு, பற்றீடுபாடு.
cultivable, cultivatable
a. பயிர் செய்யத்தக்க, பண்படுத்துவதற்குரிய.
cultivate
v. பயிர் செய், பயிர்களுக்காக நிலத்தைப் பண்படுத்து, கவனம் செலுத்திப் பேணு, நாகரிகப்படுத்து, நயமாக்கு, திருத்து, பேணி வளர்த்து உருவாக்கு, மேன்மைப்படுத்து.
cultivation
n. பயிர் செய்தல், பயிர்த்தொழில், வேளாண்மை, நிலத்தைப் பண்படுத்தும் கலை, நாகரிகம், திருத்தம், நய மேம்பாடு.
cultivator
n. பயிரிடுபவர், உழவர், பண்படுத்துபவர், நிலங்கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி.
culture
n. பயிர் செய்தல், பண்படுத்துதல், பண்படு நிலை, பண்பட்ட நிலை, உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம், மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம், அறிவு வளர்ச்சி, நாகரிகமான தன்மை, நாகரிகத்தின் பயனான நயம், மேன்மை, நாகரிக வகை, நாகரிகப் படிவம், செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி, (வி.) பயிர் செய், பண்படுத்து, சீர்படுத்து.
cultured
a. பண்பட்ட, கல்வியால் மேம்பட்ட, நாகரிக நயமுள்ள, மேன்மையாக்கப்பட்ட.
cultus
n. சமயக் கொள்கை அமைப்பு, கோட்பாடு, வழிபாடு, செயற்கைப் பற்று வெறி.
culver-key
n. காட்டுமலர்ச் செடிவகை, தேக்கு இன மரத்தின் இறகுடைய பழவகை.
culverin
n. (வர.) 1க்ஷ் பவுண்டு குண்டு வெடிக்கும் நீளமான பழைய பீரங்கி வகை, சிறு வெடிகலத் தொகுதி.
culvert
n. பாலம், கால்வாயின் கீழ்ச்செல்லும் மதகு, மின் கம்பி வடத்துக்குரிய நெறி.
culvertage
n. பண்ணையாளை அடிமையாகும்படி இழிவுபடுத்துதல்.
cum
prep. உடனாக, கூட, உடன்கலந்து.
cumber
n. வீண்சுமை, வில்லங்கம், தடை, தொந்தரவு, (வி.) வீண்சுமையாயிரு, குறுக்கிடு, வழியடை, தடங்கலாயிரு, முட்டுக்கட்டை இடு.