English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
curassow
n. வான்கோழி இனப் பறவை.
curate
n. ஆன்ம மருத்துவர், சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு, அப்பம் வைக்கும் நிலைதாங்கி.
curative
a. நோய் குணப்படுத்தும் இயல்புடைய, நிவாரணமான.
curator
n. பொறுப்பாளர், காப்பாளர், மேற்பார்வையாளர், காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர், பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர், சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
curb
n. கடிவாள வார், கடிவாளச் சங்கிலி, அடுப்பில் சாம்பலைத் தடுத்து வைக்கும் முன்தட்டு, தள விளிம்பு வரிசைக்கல், விளிம்புக் கட்டை, ஓரப்பலகை, நடைபாதைக்கடை, தடை, தடைகாப்பு, குதிரைக் கால்காய்ப்பு நோய், கிணற்றுத் தோவளம், மரம் அல்லது இரும்பாலான வட்ட அழி, (வி.) தடு, தடுத்து நிறுத்து, கடிவாளமிடு, கடிவாளமிட்டு இயக்கு.
curb-roof
n. இருபக்கச் சரிவுகளிலும் மேல்பகுதிச் சாய்வை விடக் கீழ்ப்பகுதிச் சாய்வு கீழ்நோக்கிச் செங்குத்தாகச் சரிந்திருக்கும்படி அமைக்கப்பட்ட மோடு.
curbstone
n. விளிம்பு வரம்புக்கல், தள ஓரங்களைப் பாதுகாக்கும் செங்குத்தான கல்.
curcuma
n. மஞ்சள், மஞ்சள் செடி.
curd
n. தயிர், பாலேட்டில் பாலடைக்கட்டிப்பகுதி, தயிரைப் போன்ற பொருள், சவுக்காரத் தொழிலில் காரக் கரைசலில் மிதக்கும் மணிச்சக்கை, மீன்வகையின் தசைச்சுளைகளுக்கிடையிலுள்ள கொழுப்புப் பொருள்.
curdle
v. தயிராகு, உறை, கெட்டியாகு.
curdy
a. தயிர் போன்ற, கெட்டியான, தயிர் நிறைந்த.
cure
-1 n. குணமடைவு, பிணிநீக்கம், நலிவு நீக்கம், நோய் நீக்க மருந்து, பிணி நீக்கும் பொருள், பிணிநீக்கு முறை, பண்டுவம், மருத்துவக் கவனிப்பு, நிவாரணம், தீங்கு தவிர்க்குமுறை, தணிக்கு முறை, ஆன்மநலக்காப்பு, பதன முறை, பதனம் செய்யப்பட்ட மொத்த அளவு, வன்கந்தக ஆக்கமுறை, (வி.) குணப்படுத்து, நோய் நீக்கு, பண்டுவம் செய், குணப்படுத்துமுறை மேற்கொள், ஆன்மநலம் செய், பதனப்படுத்து, கந்தகத்தை வன்கந்தகமாக்கி வலிவூட்டு.
cure-all
n. சஞ்சீவி, குருமருந்து, அனைத்துநோய்மருந்து, முப்பூ.
cureless
a. குணமாக்க முடியாத, தீராத.
curer
n. குணமாக்குபவர், நோய் நீக்குபவர், மருத்துவர்.
curette
n. அறுவை மருத்துவரின் சுரண்டும் சிறுகருவி, (வி.) இக்கருவியால் சுரண்டு.
curfew
n. இடைநிலக் காலத்தில் நடைமுறையிலிருந்த மாலைநேர விளக்கணைப்புக் கட்டுப்பாடு, விளக்கணைப்புக் கட்டுப்பாட்டு நேரம், பொது அறிவிப்பு மணி, மாலைநேர மணி, பொதுக்கட்டுப்பாட்டு முறை, ஊரடங்கு ஆணை.
curia
n. ரோமரின் குலமரபுகள் மூன்றன் பத்துக் கிளைக் குலமரபுகளுள் ஒன்று, கிளைக் குலமரபின் தொழுகை இடம், ரோமர் ஆட்சிமன்றக் கூடம், பண்டை இத்தாலிய நகர ஆட்சிமன்றம், மாகாண ஆட்சிமன்றம், சட்ட முறை மன்றம், நீதி மன்றம், போப்பாண்டவரின் தனி ஆட்சி மன்றம்.
curia regis
n. மன்னர் உயர்பேரவை, மன்னுரிமை உயர் முறைமன்றம், பண்ணைநில முகவர் பேரவை.
curing-house
n. பொருள்களைப் பதப்படுத்திப் பாதுகாக்கும் இடம் மேலை இந்தியத் தீவுகளில் சர்க்கரையை வடித்தெடுக்கும் கட்டிடம்.