English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
catamountain
n. சிறுத்தை, மலைவாழ் முரடர், (பெ.) மூர்க்கமான.
catane
n. நிலஎண்ணெயில் கண்டெடுக்கப்படும் மெழுகயலான நீர்க்கரியப் பொருள்.
cataphonics
n. எதிரொலிகளைப் பற்றிக் கூறும் ஓசையிற் பிரிவு.
cataphractic
a. முழுப் போர்க்கவசத்துக்குரிய.
cataphyll
n. இலையின் முதன் மூலப்படிவம், இலைமுதல்.
cataplasm
n. வீக்கத்திற்குக் கட்டுகிற மாப்பசை.
cataplectic
a. உணர்வயர்வுக்குரிய, விலங்குகளின் உறக்கம் போன்ற நிலைக்குரிய.
cataplexy
n. உணர்ச்சியால் விளைந்த அசைவற்ற நிலை, விலங்குகளுக்கு இரைப்புப் போன்ற விறைப்புண்டாக்கும் நோய் வகை.
catapult
n. கவண், விசை வில்பொறி, எறிபடை வீச்சுப்பொறி, சிறுவர் பறவையடிப்பதற்காகப் பயன்படுத்தும் உண்டைவில், கப்பல் தளத்திலிருந்து ஆகாய விமானத்தைப் பறக்கச் செய்வதற்கான பொறியமைப்பு, (வி.) கவண் எறி, எறிந்து தாக்கு, விசையுடன் பாய், விமானத்தைப் பறக்க விடு.
catapultier
n. கவண்கொண்டு எறிபஹ்ர்.
cataract
n. நீர்வீழ்ச்சி, பீற்றுநீர்த் தாரை, சோணைமாரி, கொட்டும் மழை, கண்படலம், திமிரம், (பொறி.) தண்ணீர் பாய்வதனால் இயங்கும் நீராவிப் பொறியாட்சி உறுப்பு.
catarrh
n. மூக்கடைப்பு, தடுமல், நீர்க்கோப்பு.
catarrhal
a. சளிச்சவ்வு அழற்சிக்குரிய, நீர்க்கோப்பினால் விளைந்த, நீர்க்கோப்பின் இயல்புடைய.
catarrhine
n. (வில.) குரங்கினத்தையும் மனித இனத்தையும் உட்கொண்ட நிமிர் உடல் உயிரினங்களில் முற்பிரிவாகிய குரங்கினம், (பெ.) குரங்கினம்போல இருமூக்குத் தொளைகளையும் மிக நெருக்கமாகக் கொண்ட.
catasta
n. அடிமைகளின் விலைக்கள மேடை, குற்றவாளிகளின் சித்திரவதைக் களரி.
catastasis
n. நாடகத்தின் நிகழ்ச்சி உச்சநிலை அடைந்துள்ள கட்டம்.
catastrophe
n. தலைதடுமாற்றம், அழிவி, கேடான முடிவு, திடீரென நேரிடும் விபத்து, கவிழ்வு, நாடக முகடு, கதையின் உச்ச உணர்ச்சிநிலைக் கட்டம், (மண்.) பொருள்களின் அமைப்பைத் தலைகீழாக்கும் நிகழ்ச்சி.
catastrophic, catastrophical
a. தலைதடுமாற்றமான, அழிவுக்குரிய, பெருங்கேட்டின் இயல்பு வாய்ந்த.
catastrophism
n. (மண்.) எங்கணும் திடீரென நேரிடும் நிகழ்ச்சிகளால் மண்ணியல் மாறுதல் ஏற்படுகிறதென்னும் பழங்கொள்கை.
catastrophist
n. திடீர் நிகழ்ச்சிகளால் மண்ணில் மாறுதல் நேரிடுகிறதென்னும் கோட்பாட்டாளர்.