English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
catatonia
n. நினைவு சொல் செயல் மாறாட்டக் கோளாறு, அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய பித்தநோய் வகை.
catatonic
a. அடிக்கடி உணர்விழப்புடன் கூடிய உன்மைத்த நோய் வகை.
Catawba
n. அமெரிக்கக் கொடிமுந்திரிப் பழவகை, அமெரிக்கக் கொடிமுந்திப் பழவகையினின்றும் செய்யப்படும் சிவப்புநிற இன்தேறல்.
catboat
n. முன்புறம் அமைந்துள்ள ஒரே பாய்மரத்தோடு கூடிய படகு.
catcaustic
a. (வடி.) ஒளி முட்டி மீள்வதானால் உண்டாகும் கோட்ட வரைகளுக்குரிய.
catch
n. பற்று, பிடிப்பு, பற்றிப்பிடித்தல், கவ்வுதல், கைப்பற்றுதல், மட்டைப்பந்து முதலிய ஆட்டங்களில் பந்தினைப் பிடித்தல், பற்றிறுக்கி, பற்றுக்கொளுவி, பிடிக்கப்பட்ட பொருள், பிடிக்கப்பட்ட மீனின் அளவு, பிடிக்கத்தக்க பொருள், திடீரென எய்தப்பெற்ற நன்மை, மறை இடர், சிக்கல், சிறு தடை, கொன்னல், திக்கல், கதவு முதலியவற்றின் அசைவை நிறுத்துவதற்கான தடுக்கு அமைப்பு, தந்திரமான கேள்வி, ஏமாற்றம், வியப்புத்தரும் செய்தி, (இசை.) சிலேடைப்பொருள் தோன்றும் வண்ணம் மூவர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட இசைப்பாடல், (வி.) கைப்பற்று, இயக்கம் தடைசெய்து பிடி, தடுத்துவை, நிறுத்து, மட்டைப்பந்தாட்டத்தில் மட்டைக்காரர்களால் அடிக்கப்பட்டுத் தரையினைத் தொடுவதற்குமுன் பந்தைப்பிடி, பந்தைப் பிடித்து மட்டைக்காரரை ஆட்டமிழக்கச் செய், அறி, தெரிந்து கொள், துரத்திப்பிடி, சிக்கவை, மயக்கி அகப்படுத்து, தடைப்படு, சிக்கு, வரப்பெறு, உரியகாலத்தில் எய்தப்பெறு, மேவு, நோய்த்தொற்றுக்கு ஆளாக்கு, நோய்போலப் பற்றிக்கொள், தொற்றிக்கொள், தீப்பற்று, புலன்களினால் அல்லது மனத்தினால் உணர், செயல் பின்பற்று, தவறு செய்கையில் கண்டுபிடி.
catch-as-catch-can
n. எவ்விதமான பிடிக்கும் இசைவளிக்கப்படும் மற்போர் வகை, லங்காஷைர் மற்போர் வகை, (பெ.) லங்காஷைர் மற்போர்ப் பணி சார்ந்த, (வினையடை) லங்காஷைர் மற்போர்ப்பாணியின்படி.
catch-basin
n. சாக்கடையில் கசடு பிரிந்து நிறுத்தும் குழியமைவு.
catch-drain
n. மேற்பரப்பிலுள்ள தண்ணீரைப் பிடிப்பதற்கான மலைப்பக்கத்து வடிகால்.
catch-the-ten
n. துருப்புச் சீட்டின் பத்தினைக் கைப்பற்றுவதே நோக்கமாயுள்ள சீட்டாட்ட வகை.
catch-weed
n. முரட்டுத் தண்டினையுடைய செடிவகை.
catchfly
n. பசைப்பொருள் கசியும் தண்டினையுடைய செடிவகை.
catching
n. பிடித்தல், (பெ.) பிடிக்கிற, தொற்றிக் கொள்ளத்தக்க, தொற்றிப் பரவுகிற, கவர்ச்சியுடைய, மயக்குகிற.
catchment
n. ஆற்றுநீர் வடிகால் அமைப்பு.
catchment-area, catchment-basin
n. நீர்வரும் பரப்பு, நீர்வாங்கு தளம்.
catchpenny
n. வெறும் பகட்டுப் பொருள், விற்பனைக்காக மட்டும் செய்யப்படும் பயனற்ற பொருள், (பெ.) வெறும்பகட்டான.
catchphrase
n. கவர்மொழி, சுலோகம், கருத்தைக் கவரும் சொற்றொடர்.
catchpole, catch-poll
n. ஏவலர், நீதித்துறை அலுவலர்.
catchword
n. கொளுச்சொல், நடிகரின் தூண்டு சொல், அகராதியின் அல்லது கலைக்களஞ்சியத்தின் ஒரு பக்கத்திலுள்ள தலைப்புச் சொல், ஒரு பக்கத்தின் அடியில் தந்துள்ள அடுத்த பக்கத்தின் முதற்சொல், அரசியல் முதலிய கட்சிகளின் இலக்குச் சொல்.
catchy
a. கவர்ச்சியுள்ள, எளிதில் உளங்கொள்ளத்தக்க, மருட்சி தருகிற, விட்டுவிட்டு நடைபெறுகிற.