English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
cathodography
n. (இய.) ஊடு கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நிழற்படம்.
catholic
n. ரோமன் கத்தோலிக்கர், ரோமன் கத்தோலிக்கச் சமயச் சார்புடையவர், (பெ.) எல்லாவற்றையும் அகப்படுத்திய, முழுநிறைவான, அகல்விரிவான, பொதுவான, கிறித்தவர்கள் எல்லோரும் உள்ளிட்ட, முதுமுறைச்சார்பான, மரபறாத, நீண்மரபுத் தொடர்புடைய, தாராளமாக, விரிந்த மனப்பான்மையுள்ள, சமயப் பொறுமைவாய்ந்த, பெருமனம் உடைய, கீழைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் மேலைக் கிறித்தவ சமயத்தவர்க்கும் உண்டான பெரும் பிளவுக்கு முன்னிருந்த மரபு சார்ந்த, ரோமன் கத்தோலிக்கர்களுக்குரிய.
Catholicism
n. ரோமன் கத்தோலிக்க சமயக்கோட்பாடுகள்.
catholicity
n. எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை, விரிந்த உளப்பாங்கு, அகவெறுப்பின்மை, காழ்ப்பின்மை, கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
catholicize
v. கத்தோலிக்கர் ஆக்கு, கத்தோலிக்க மயமாக்கு, கத்தோலிக்கர் ஆகு.
catholicon
n. பலநோய் மருந்து, சஞ்சீவி.
catilinarian
a. துணிகரச் சதிகாரத் தன்மையுடைய.
Catiline
n. துணிகரச் சதிகாரன், கி.மு. 63-இல் ரோமாபுரிஅரசைக் கவிழ்க்க முயன்று தோல்வியுற்ற செர்கியஸ் கேட்டிலினா என்பவன்.
catkin
n. மஞ்சரி, வளைமலர்க்கொம்பு, ஒருபால் மலரிழைச் சிதற் குஞ்சம்.
catling
n. சிறுபூனை, பூனைக்குட்டி, நேர்த்தியான நரம்புத் தந்தி, உறுப்பினை அறுத்தெடுப்பதற்கான கூர்ங்கத்தி.
catmint
n. நீலமலருடைய நறுமணச்செடி.
Catonian
a. ரோமாபுரியைச் சார்ந்த சீர்மையர் கேட்டோ(கி.மு. 224-14ஹீ) அல்லது கேட்டோ உடிசென்சிஸ் (கி.மு. 55-46) போன்ற, வீறார்ந்த, கண்டிப்பான, முடிவணங்காத.
catopric
a. பளிங்குக்குரிய, உருநிழல் சார்ந்த, எதிர் ஒளிக்கோட்டத்துக்குரிய.
catoptrics,
n. pl. நிழலுருவியல், இயற்பியலின் ஒளியியற் கூறான எதிர் ஒளிக்கோட்ட இயல் துறை.
cats-cradle
n. ஒருவர் கைவிரல்களில் உருவம் அமையும்புடி கயிறு கோத்துக்கொண்டு மற்றவருக்கு அதனை மாற்றி மாற்றி ஆடும் குழந்தை விளையாட்டு வகை.
cats-ear
n. மஞ்சள் மலர்களையும் பூனைக்காவது போன்ற இலைகளையும் உடைய ஐரோப்பியப் பூண்டு வகை.
cats-eye
n. வைடூரியம், சாலை நிலத்தளத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒளி பிறக்கும் கண்ணாடிச் சில்லு.
cats-foot
n. நிலத்திற் படரும் கொடிவகை.
cats-meat
n. பூனைத்தீனிக்காகவென்று விற்கப்படும் குதிரை இறைச்சி முதலியவை.
cats-paw
n. நீரின் மேற்பரப்பில் சிற்றலைகளை எழுப்பிம் மென்காற்று, கொக்கிக்கொளுவுவதற்கு இரண்டு குழைகளையுடைய முடிச்சு வகை, மற்றொருவர் கைக்கருவி, ஏமாளி.