English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
doubloon
n. முற்கால ஸ்பானிய பொன் நாணயம்.
doubt
n. ஐயுறவு, ஐயப்பாட்டு நிலை, மனவுறுதியின்மை, தயக்கம், நம்பிக்கைக்கேடு, உறுதியற்ற நிலை, தௌிவான சான்றின்மை, (வினை)மூ ஐயுறவுகொள்,. கருத்து வகையில் தள்ளாடு, முடிவுக்கு வராமல் ஊசலாட்டம் கொள், தயக்கம் காட்டு, அவநம்பிக்கைகொள், ஏற்கத்தயங்கு, ஐயுறவு எழுப்பு மாறான முடிபுபற்றி அச்சங்கொள்.
doubtful
n. ஐயத்துக்கிடன்ன, ஐயப்பாட்டுக்குரிய செய்தி, (பெயரடை) ஐயத்துக்கிடமான, உறுதியற்ற, உறுதிப்படாத, பொருள் உறுதிப்பாடற்ற, இருபொருள் தரத்தக்க, தயக்கத்துக்குரிய, ஐயப்பாடு நிரம்பிய, தௌிவற்ற, நம்பத்தகாத, காப்புறுதியில்லாத, ஐயுறுகிற, தன்னம்பிக்கையற்ற.
doubtless
a. ஐயத்துக்கிடமில்லாத, (வினையடை) தவறாமல், ஐயத்துக்கிடமில்லாமல், உறுதியாக, மறுப்பின்றி.
douceur
n. அன்பளிப்பு, கைக்கூலி.
douche
n. நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை, மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை, பீச்சாங்குழல், (வினை) நீர்த்தாரையைச் செலுத்து, துருத்தி நீர் படிவித்துக்கொள்.
doucine
n. மேற்பகுதி குழிவாகவும் கீழ்ப்பகுதி குவிவாகவும் உள்ள பிழம்புரு.
dough
n. பிசைந்த மாவு, அப்ப மாவு, கூழ்மொத்தை.
dough-baked
a. பாதி வெந்த, அறிவுக் குறைபாடுள்ள.
dough-boy
n. பொதியப்பம், பழம் பொதிமா வேவல், வெந்த மாவருண்டை.
doughnut
n. கொழுப்பில் வழ்க்கியெடுத்த இனிப்புக்கலந்த மாவு,
doughty
a. உரமிக்க, வீரமுள்ள, ஊற்றமுள்ள, வலிவுடைய, அஞ்சத்தக்க, வெல்லமுடியாத.
doughy
a. பிசைந்த மாப்பபோன்ற, மென்மையான,.
Doukhobors
n. pl. படைப் பணியிற் சேரமறுத்தனால் துன்புறுத்தப்பட்டமை காரணமாக ருசியாவிலிருந்து கனடாவுக்குப் பெருவாரியாகக் குடியேறிய சமயப்பிரிவினர்.
doum;, doum-palm
எகிப்திய பனைமர வகை.
douse
-1 n. பலத்த அடி, (வினை) அடி, தாக்கு.
douser
n. திரைப்படம் காட்டும் கருவியில் ஒளியை ஊடறுப்பதற்கான அடைப்பு.
dove
n. புறா (கிறித்தவம்) தூய ஆவி, மனப் புனிதத்தின் சின்னம், பணிவிணக்கத்தின் திருவுரு, நற்செய்தி கொண்டு வருபவர், அமைதித்தூதர், அன்புக்குரியவர், (வினை) புறாவைப் போல் நடத்து.
dove-eyed
a. அமர்ந்த பார்வையுள்ள.