Word |
English & Tamil Meaning |
---|---|
பாசாங்குக்காரன் | pācāṅku-k-kāraṉ n. <>id.+. Hypocrite, dissembler; பாசாங்குசெய்வோன். |
பாசாங்குக்காரி | pācāṅku-k-kāri n. Fem. of பாசாங்குக்காரன். A hypocritical woman; பாசாங்கு செய்பவள். |
பாசாங்குசதரன் | pācāṅkuca-taraṉ n. <>pāšāṅkuša+. Gaṇēša, armed with a noose and an elephant-goad; [பாசத்தையும் அங்குசத்தையும் தாங்கியிருப்பவன்] கணபதி. (பிங்.) |
பாசாண்டி | pācāṇṭi n. <>pāṣaṇdika. Person versed in heretical doctrines; புறச்சமய நூல்வல்லோன். பிறபாசாண்டிகளும் (தொல். பொ. 649, உரை). |
பாசாணபேதி | pācāṇapēti n. cf. pāṣāṇabhēdin. (மலை.) 1. Cow's thorn; See நெருஞ்சி. . 2. Red cow thorn; See சிறுநெருஞ்சி. |
பாசி 1 | pāci n. <>பசு-மை. [K. pāci.] 1. That which is green; பசுமையுடையது. பாசிப் பாசத்து (சீவக. 1649). 2. [T. K. pāci, M. pāyi, Tu. pāje.] Moss, lichen, duckweed, musci; 3. Seaweed; 4. Sola pith. 5. [T. K. pāci, M. pāyi.] Saprophyte, mouldiness due to dampness; 6. Green gram. 7. [M. Tu. pāṣi.] Variegatd glassbeads or green earthen beads for children's necklaces; 8. Cloud; 9. cf. pāja. (Puṟap.) |
பாசி 2 | pāci n. <>pāšin. 1. Varuṇa; வருணன். (யாழ். அக.) 2. Yama, God of death 3. Soul; 4. Dog; |
பாசி 3 | pāci n. <>prācī. East; கிழக்கு பாசிச்செல்லாது (புறநா.229). |
பாசி 4 | pāci n. <>pāsī. Cooking; சமைக்கை. (யாழ். அக.) |
பாசி 5 | pāci n. <>U. pāsī. 1. Fishery; மீன்பிடிப்பு. 2. Fish; |
பாசிக்குத்தகை | pāci-k-kuttakai n. <>பாசி+. Fishing lease; மீன்குத்தகை. |
பாசிகட்டி | pāci-kaṭṭi n. perh. id.+. A sub-division of the Valaiyar caste; வலைச்சாதியாரில் ஒரு வகுப்பினர். (E. T. vii, 274). |
பாசித்தீர்வை | pāci-t-tīrvai n. <>id.+. See பாசிவரி. (W.) . |
பாசிதம் | pācitam n. <>bhājita. 1. That which is divided; a portion, a share; பிரிக்கப்பட்ட பங்கு. 2. (Math.) Quotient; |
பாசிதூர்த்துக்கிட - த்தல் | pāci-tūrttu-k-kiṭa- v. intr. <>பாசி+. To be overspread with dirt; அழுக்குப்பிடித்துக் கிடத்தல். பாசி தூர்த்துக்கிடந்த பார்மகட்கு (திவ். நாய்ச். 11, 8). |
பாசிநிலை | pāci-nilai n. <>id.+. (Puṟap.) A theme describing the crushing defeat of an enemy in an action at the moat of his fortress, inflicted by an invading army; பகைவருடைய வலிகெட அவருடைய அகழிடத்துப் பொருதலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 6, 17, கொளு.) |
பாசிநீக்கம் | pāci-nīkkam n. <>id.+. A mode of construction of a stanza by which a number of independent sentences are held together by a central idea running through the whole; சொற்றோறும் அடிதோறும் பொருளேற்று வரும் பொருள்கோள் (இறை, 56, உரை.) |
பாசிநீக்கு | pāci-nīkku n. <>id.+. See பாசிநீக்கம். (இறை. 56, உரை.) . |
பாசிப்படை 1 | pāci-p-paṭai n. prob. id.+. 1. Storming army; திடீரென்று தாக்கும். சேனை. 2. Strong army; |
பாசிப்படை 2 | pācippaṭai n. Forlorn hope; கைவிட்ட நம்பிக்கை. (W.) |
பாசிப்பயற்றம்மை | pāci-p-payaṟṟammai n. <>பாசிப்பயறு+. Chicken-pox; வைசூரிவகை. (M. L.) |
பாசிப்பயறு | pāci-p-payaṟu n. <>பாசி1+. Green gram. See சிறுபயறு. Colloq. |
பாசிப்பருவம் | pāci-p-paruvam n. <>id.+. Initial stage in the growth of moustache; மீசையினிளம்பருவம். பாசிப்பருவமுள்ள மீசையுந் திருத்தி (சீதக். 30). |
பாசிப்பாட்டம் | pāci-p-pāṭṭam n. <>பாசி+. Tax on fishing; மீன்பிடிப்பதற்கு இடும் வரி. (I. M. P. Mr. 327.) |
பாசிபந்து | pācipantu n. <>U. bāzūband. An armlet; தோளணிவகை. கட்டழகன் பாசிபந்து கட்டினான் (விறலிவிடு.1117). |
பாசிபற்றினபல் | pāci-paṟṟiṉa-pal n. <>பாசி+. Foul tooth; ஊத்தையும் பசுமை நிறமும் பிடித்த பல். (W.) |