English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Langue doil
n. (பிர.) லாயில் ஆற்றிற்கு வடக்கே பேசப்பட்ட தற்காலப் பிரஞ்சு மொழிக்கு மூல அடிப்படையான முற்கால மொழிவகை.
Languid
a. தளர்ச்சிவாய்ந்த, ஊக்கமிழந்த, களைப்புற்ற, எழுச்சி குன்றிய, கிளர்ச்சியற்ற, தளர்வான, சோர்வான, ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள, தளரவிட்ட, மெலிந்த, நலிவுற்ற, மடிவார்ந்த, பெருந்தயக்க நிலையுடைய.
Languish
v. சோர்வடை, ஊக்கங்குறை,வலுக்குறைவாகு, குறைபடு, தளர்வுறு, நலிவுறு, மெலிவுறு, சோர்வூட்டும் சூழ்நிலையின்கீழ் வாழ், சோர்வுற்ற தோற்றத்தை மேற்கொள், மேலீடான மெல்லுணர்ச்சி உடையதாகப் நிலையுடைய.
Languor
n. சேர்வு, தளர்ச்சி,. கவனக்குறைவு, கிளர்ச்சியின்மை, மென்கனிவு, மடிமை, அரைத்துயில், வாட்டநிலை, உணர்வற்ற கனவுபோன்ற நிலை.
Langur
n. நீண்ட வாலுடைய குரங்கு வகை.
Laniary
n. கோரைப்பல், கடித்துக்கிழிக்கும் நாய்ப்பல், (பெ.) கடித்துக் கிழிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிற.
Laniferous, lanigerous
a. கம்பளி மயிருள்ள.
Lank
a. மெலிந்த, வதங்கிய, ஒட்டி ஒடுங்கிய, சுரித்த, சோர்வான, தொங்கலான, படிந்துகிடக்கிற, தொய்வான, கம்பிபோன்ற நௌதவு வளைவற்ற, நெட்டிய.
Lanky
a. அருவருப்பாக மெலிந்து நீண்ட, கோரமான முறையில் நெட்டையான.
Lanner
n. வேட்டைப்பருந்தில் பெண்வகை.
Lanneret
n. வேட்டைப்பருந்தில் ஆண்வகை.
Lanolin
n. தைல வகை மூலப்பொருளான ஆட்டுக்கம்பளச் சத்து.
Lansquent
n. செர்மனியில் பிறப்புற்ற சீட்டாட்ட வகை.
Lantern
n. ஔதக்கூண்டு, விளாந்தர், கண்ணாடிக்கூட்டு விளக்கு, கலங்கரைவிளக்க ஔதமாடம், மோட்டு ஔதப்புழை மாடம், மின்மினிப்பூச்சியின் ஔதயிழைக் கை.
Lanthanum
n. (வேதி.) 1க்ஷ்3ஹீ-41 ஆம் ஆண்டுக்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அலுமினிய உலோகக் குழுவினர் சார்ந்த அரிய தனிமப்பொருள்.
Lanthorn
n. ஔதக்கூண்டு, விளக்கு.
Lanyard
n. (கப்.) பற்றுவடம், கட்டுவதற்கு அல்லது கைப்பிடியாகப் பயன்படுவதற்கான சிறு கயிறு அல்லது கம்பி.
Laodicean
n. சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடையவர், (பெ.) சமயம் அல்லது அரசியலில் அரைகுறை ஆர்வமுடைய.
Lap
-1 n. தொங்கல், சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி, காதின்மடல், மடிப்பு, முன்தானை, பாவாடையின் முன்பகுதி, மடி, முன்துடை, மேற்பகுதி, பள்ளத்தாக்கு, மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு, (வினை) மடியில் வை, துடைமீது வைத்துக்கொள்.
Lap
-2 n. மேற்கவிதலின் அளவு, மேற்கவிவான பகுதி, இழைக்கூண்டின் வரிந்து கட்டிய பாளம், வட்டுருளையில் நீராவி இயந்திரத்தில் நீராவியை முற்றும் ஒழிப்பதற்குத் திறப்பிதழ் மையம் விரிய வேண்டிய அளவு, பொறிச் சீட்டாட்டத்தில் மறு ஆட்டத்துக்குக் கொண்டுசெல்லும் மிசச்ம், (வினை)