English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Leading-business
n. முதன்மையான நடிகர் ஏற்றுநடிக்கும் பாகங்களின் தொகுதி.
Leading-rein
n. குதிரையை இட்டுச் செல்வதற்கான கடி வாள வார்.
Leading-staff
n. எருதின் மூக்கு வளையத்துடன் இணைக்கப் படுந்தடி.
Leading-strings
n. குழந்தைகளுக்கு நடை பயிலக் கற்பிப்பதற்காக முன்பு பயன்படுத்தப்பட்ட கயிறுகள்.
Lead-poisoning
n. ஈய நச்சூட்டு, வங்க தோசம்,
Leads
n. pl. கூரை வேய்வதற்கான ஈயத் தகடுகள், ஈயத்தகடுகள் வேய்ந்த கூரைப்பகுதி, சாளரத்தின் கண்ணாடியைத் தாங்கும் ஈயச் சட்டங்கள்.
Leadsman
n. நீராழம் பார்ப்பதற்கான ஈய நுற்குண்டினை இயக்குகிற கப்பலோட்டி.
Lead-work
n. ஈயத்தினால் செய்யப்பட்ட பொருள், ஈய வேலைப்பாடு.
Lead-works
n. ஈயச்சுரங்க உலோகக்கலவை உருக்கப்படும் இடம்.
Leaf
n. இலை, இலைத்தொகுதி, பூவிதழ், தழை, புகையிலை, தேயிலை, சுவடித்தாள், தாளின் இரண்டு பக்கங்கள், பொன்-வௌளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு, சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு, மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு, நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி, இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு, கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை, பற்சக்தரத்தின் பல்.
Leaf-lard
n. பன்றியன் குண்டிக்காய்களைச் சுற்றியுள்ள கொழுப்புப் படலங்களிலிருந்து செய்யப்படும் இடைக் கூட்டுக் கறியுணவு.
Leaflet
n. (தாவ.) இலையின் பகுதியான சிற்றிலை, குருத்திலை, துண்டுப் பத்திரிகை.
Leaf-mould
n. அழுகும் இலைகளையே பெரும்பாலும் கொண்டுள்ள மண், தழைமக்கிய மண்.
Leafy
a. இலைமயமான, இலைகள் நிறைந்த, தழைவான, இலைபோன்ற.
League
-1 n. ஏறத்தாழ மூன்று மைல் தொலைவு.
League
-2 n. கூட்டிணைவு, இணைகுழு, ஒப்பந்தக்குழு, காப்பிணைவுக் கூட்டுறவு,நாட்டுக் கூட்டிணைவு, கூட்டிணைவு நாடுகளின் குழுமம், கூட்டுக்காப்புக் கழகம், சங்கம், கூட்டிணைவுக் கழகம், விளையாட்டுக் குழுக்களின் கூட்டிணைவுக் கழகம், விளையாட்டுக் குழுக்களின் கூட்டிணைப்புச் சங
Leaguer
-1 n. முற்றுகையிடும் சேனையின் பாசறை, முற்றுகை, அமைச்சு நிலைஅயல்நாட்டுத்து தூதர், வண்டிகள் சூழநிறுத்தப்பட்ட காப்பு அரண் பாசறை, கவசவிசைக்கலஞ்களுக்கான நிறுவுதுறை, (வினை) முற்றுகையிடு, வண்டிகளைக் காப்பரண் பாசறையாகநிறுத்து, வண்டிக்காப்பரண் கூடாரத்தில் தங்க வை,
Leaguer
-2 n. கூட்டிணைவுக் குழுவின் உறுப்பினர்.
Leak
n. ஒழுக்கு, கசிவு, இல்லி, பொத்தல், கலத்தில் உள்ளிருந்து வௌதயிலோ வௌதயிலிருந்து உள்ளாகவோ நீர்மம் ஊறுவதற்குரிய சிறு பிளவு அல்லது துளை, தகா நுழைவழி, தகாச் செல்வழி, மின்மிகை அடர்ப்பிடம், (வினை) கல வகையில் புறத்தே ஒழுகவிடு, உள்ளே கசியவிடு, ஒழுகச்செய், நீர்ம வகையில் புறத்தே ஒழுகு, உட்கசி, மறைசெய்தி வகையில் வௌதவரப் பெறு, மெல்லப் புறஞ்சென்றுவிடு, வௌதப்பட்டுப் பரவு.