English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Laze
n. (பே-வ.) சோம்பற் காலம் (வினை) சோம்பலாயிரு, சோம்பிக் காலத்தைக்கழி, வீண்பொழுது போக்கு.
Lazy
a. சோம்பலான, மந்தமான, மடிமை வாய்ந்த, வேலை செய்ய மனமில்லாத, சோம்பலுக்கேற்ற, சோம்பலைத் தூண்டுகின்ற, (வினை) சோம்பலாயிரு.
Lazy-bed
n. ஆறடி அகலமும் இருபுறங்களிலும் நீண்ட பள்ளமுமுள்ள உருளைக்கிழங்குப் பயிர்ப்படுகை.
Lazy-bones
n. சோம்பேறி, மந்தமானவர்.
Lazy-tongs
n. தூரத்திலுள்ள பொருட்களைப் பற்றியப்பதற்குரிய பல்திசை வளைவுகளையுடைய நெம்புகோல் அமைவு.
Lazzarone
n. (இத்.) நேபில்ஸ் நகரத்தில் பலதிறச்சிறு தொழிலும் செய்து பிழைக்கும் தெருச்சுற்றி.
Lea
-1 n. (செய்.) பசும்புல் தரை, திறந்த வௌத நிலம்.
Lea
-2 n. இடத்துக்கு இடம் மாறுபட்டு வழங்கும் நுலின் நிட்டலளவை வகை.
Leach
v. நீர்மம் கசியவிடு, மரம்-பட்டை-களிமண் ஆகியவற்றைக் கசிவூறலக்கு உட்படுத்து, கசிவூறல்மூலம் உள்மாசு வௌதயேற்று.
Lead
-1 n. ஈயம், வங்கம், நீராழம் பார்ப்தற்கான ஈய நுல் குண்டு, அச்சுவேலை வகையில் இடைவரிக் கட்டை, வரிகளின் இடைவௌதயை அகலமாக்குவதற்கான உலோகத்தகட்டுப்பாளம், (வினை) ஈயம் பூசு, ஈயம் பொதி, ஈயத்தைக் கொண்டு பளுவேற்று, கண்ணாடித்தகடுகளுக்கு ஈயச் சட்டமிடு, அச்சவேலையில் வரி
Lead
-2 n. வழித்துணை முதன்மை, வழிகாட்டு முதன்மை, முந்துநிலை, முனைப்பு, முதன்மை, தலைமை, முந்துநிலை அளவு, முன்னீடு, முன்னோடி, மாதிரி, முன்மாதிரி, முன்மாதிரிப் பண்பு, ஊக்காதரவு, ஊக்கு முனைவு, முதன்மை, தலைமை, முனைப்பு, முதலிடம், தலைமைப்பண்பு, செயற்கை நீர்க்கால், ஆ
Lead one a. dance
தொடர்ந்த ஏன்ற்றங்களுக்கும் குழப்பங்களுக்கும் உட்படுத்து.
Lead, enhall
லண்டனில் உள்ள இறைச்சி-கோழி முதலிய பறவைகள் விற்கப்படும் அங்காடி.
Leaden
a. ஈயம்சார்ந்த, ஈயத்தினால் செய்த, ஈயத்தினால் செய்ததைப்போன்ற, கனத்த, மழுங்கச் செய்கிற, மந்தமான, அசைவற்ற, சுமையுள்ள, ஈயத்தின் நிறம் வாய்ந்த.
Leader
n..தலைவர், முதல்வர், வழிகாட்டிக்கொண்டு முன்னால் செல்பவர், நடத்திச்செல்பவர், வழக்கில் முதன்மையான வழக்கறிஞர், மந்தையில் முதன்மையான குதிரை, மரத்தில் மேல்நோக்கி வளரும் முதன்மையான கவை, சதைப்பற்றை இயக்கும் தசைநார், செய்தித்தாளின் தலையங்கம், (அச்சு.) விழிக்கு வழிகாட்டும் புள்ளிகளால் அல்லது கோடுகளால் ஆன வரை.
Leaderette
n. செய்தித்தாளில் சிறு தலையங்கம், துணைத் தலையங்கம்.
Leadership
n. தலைமை, முதன்மை, தலைமைப்பதவி, தலைமையேற்று நடத்தும் அற்றல்.
Lead-in
n. வானொலப் பெட்டியையும் வௌதப்புறத்து அலை வாங்கியையும் இணைக்கும் கடத்துகம்பி.
Leading
n. வழிகாட்டுதல், வழிகாட்டும் பண்பு, தலைமை, ஆன்மிகத் துணை, பயிர் வளைவைக் களஞ்சியஞ்கொண்டு சேர்ப்பு, (பெ.) தலைவராகச் செயலாற்றுகிற, செயலாட்சி செய்கிற, கட்டுப்படுததியான்கிற,. முனைப்பான, முதன்மையான, முந்திச்செல்கிற, முனைத்த, முன்னேற்றம் வாய்ந்த.