English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Liegeman
n. கொத்தடிமை, பற்றுறுதியுள்ள ஏவலாள்.
Lien
n. கடன் கொடுத்தவர் பற்றூன்றுரிமை, உடைமையின் மேலுள்ள கடன் தீர்க்கப்படுகிற வரையில் அதை வைத்திருப்பதற்கான உரிமை, பணித்துறை மீள்வுரிமை.
Lierne
n. வில்வளைவுக் கூரையிலுள்ள குறுக்குக் கிளைச்சட்டம்.
Lieu
n. மாற்று, பதிலிடம்.
Lieutenant-governor
n. துணைநிலை ஆளுநர்.
Lieutenant-governorship
n. துணைநிலை ஆளுநர் பதவி.
Life
n. உயர், உயிருடனிருத்தல், உயர்நீட்டிப்பு, பிழைப்பு, பிழைத்திருத்தல், உயர்ப்பொருள், உயிரி, சிற்றுயரிர்த்தொகுதி, வாழ்நாள், வாழ்க்கை வரலாறு, வாழ்வு, உயிர்ப்பு, உயிரியக்கம், உயரித்துடிப்பு, உயிராற்றல், ஊக்கம், எழுச்சி, உள்ளக்கிளர்ச்சி, புதுத்தூண்டுதல், உயிர்க்களை, உயிர்த்தோற்றம், உயிர்த்தடம், உயிர்ததிறம், உயிர் மெய்ம்மை, மெய்த்திறம், எழுச்சியூட்டுஞ் செய்தி, அரும்பொருள், அரும் பேறு, வாழ்க்கை வாய்ப்பு, உயிர் நீட்டிப்பு, புது வாழ்வு, புது வாழ்வு வாய்ப்பு, மறுவாழ்வு, இன்பம், நிலையான இன்பம், மேல்நிலை வாழ்வு, வாழ்க்கை முறை, உணர்ச்சிச்செறிவு, செயல்செறிவு, ஈடுபாடு, ஈடுபாட்டுச்செறிவு, வாழக்கையில் செயல்மிக்க பகுதி, செயல் வாழ்வு, வாழ்க்கையனுபவம், வாழ்வின் இன்ப துன்பத் தொகுதி.
Lifebelt
n..மிதவைக் கச்சை,இடர்காலத்தில் கடலில் நீந்தி மிதக்க உதவும் மிதவைப்பொருளாலான அரைக்கச்சை.
Life-blood
n. உயிர்க்குருதி, உயிர் வாழ்வதற்கு வேண்டிய இரத்தம், வலிவு அல்லது உயிர்ப்புத் தரும் பொருள், உதடு அல்லது கண்மடல் தானாகவே துடித்தல்.
Life-breath
n. ஊக்கமூட்டுங் கூறு, வலிமையளிக்குங் கோட்பாடு.
Lifebuoy
n. மிதப்புக் காப்பமைவு, காப்பாற்றப்படுகிறவரை ஆளை நீரில் மிதக்க வைக்கும் அமைவு.
Life-giving
a. உயிர்ப்பூட்டுகிற, ஊக்கந்தருகிற.
Life-guadsman
n. பிரிட்டிஷ் படையிலுள்ள இரண்டு குதிரைப்படைப் பகுதிகளைச் சேர்ந்த வீரர்.
Life-guard
n. மெய்க்காப்பாளர்.
Life-jacket
n. நீரில் ஆழாமல் மிதக்க வைக்கும் சட்டை அமைவு.
Lifeless
a. உயிரற்ற, செத்த, உணர்ச்சியற்ற, மரத்துப் போன, ஊக்கமிழந்த, கவர்ச்சியற்ற, சப்பையான.
Lifelike
a. உயிரோட்டமுடைய, உயிர்க்களைதயுள்ள, மூலத்தையொத்த, மூலத்தின் உயிர்ப்பண்பை அப்படியே எடுத்துக்காட்டுகிற.
Lifeline
n. உயிர்ப்பாதை, உயிர்போன்ற முக்கியத்துவம் உடைய போக்குவரவு நெறி, உயிர்க்காப்பதற்காக வென்று மிதவைப் பொருளுடன் கட்டப்பட்டுள்ள கயிறு, நீர்முழ்கி சைகை காட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு, கைவரை நுல் வகையில் ஆயுள்வரை.
Lifelong
a. வாழ்நாள் முழுதும் நீடித்திருக்கிற, நீடித்த காலப் பழக்கமுடைய.
Life-office
n. உயிர்க்காப்பீட்டு அலுவலகம்.