English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Licentiousness
n. இழிகாமம், தூர்த்தத்தன்மை.
Lichen
n. மரப்பாசி, கற்பாசி, சிவப்புப் பருக்களுடன் கூடிய தோல் நோய் வகை.
Lichgate
n. பிணப்பெட்டியை வைத்திருப்பதற்கான திருக்கோயில் முற்றத்தின் வாயிற்படிநிலை.
Lich-house
n. பிணமனை, சாவுக்கிடங்கு.
Lich-ow
n. சாக்குறியெனக் கருதப்படும் கிறீச் சொலியுடைய ஆந்தை வகை.
Lichstone
n. திருக்கோயில் வாயிற்படியில் பிணப்பெட்டியை வைப்பதற்கான கற்பீடம்.
Licit
a. கள்ளத்தனமானதாயிராத, முறையான.
Lick
n. நக்குதல், நாவினால் துழாவுதல், விலங்குகள் உப்பினை நக்குமிடம், சுரீரென்ற அடி, நாக்கு உறிஞ்சிய அளவு, மேலீடான பூச்சு, (வினை) நக்கு, சுவைக்காக நாவினைத் துழாவு, நக்கி ஈரமாக்கு, நக்கித் துப்புரவு செய், நக்கிக்குடி, உறிஞ்சு, துடை, அலைகள்-தீநா முதலியவை வகையில் மேலே லேசாகத் தொட்டுக்கொண்டு செல், தீநா வகையில் ஊர்ந்துசென்று விழுங்கிவிடு, சண்டையில் அல்லது போட்டியில் தோல்வி உறச் செய், விஞ்சு.
Lickerish
a. நற்சுவைப்பொருள் நாடுகிற, சுவையான உணவில் விருப்பமுள்ள, பேராசையுள்ள, அங்கலாய்ப்பான, கயமைத்தனமுள்ள.
Lickspittle
n. அண்டிப்பிழைப்பவர், இச்சகம்பேசி வாழ்பவர்.
Lictor
n. பண்டைய ரோமன் குற்ற நடுவருடன் சென்று பணி செய்த நடவடிக்கை அலுவலர்.
Lid
n. கலம், ஏனம் முதலியவற்றின் மூடி, அடைக்கும் பகுதி, கண்மடல், சங்கின் நுழைவாயிலை மூடும் கதவு போன்ற அமைவு, (தாவ.) தடுக்கிதழ், மூடி போன்ற அமைவு.
Lido
n. பொதுவான திறந்தவௌத நீச்சல் குளம்.
Lie
-1 n. பொய், நெஞ்சறிந்த மறைப்புரை, வஞ்சனை, கரவடம், போலி நம்பிக்கை, குருட்டு மரபு, (வினை.) திரித்துக் கூறு, பொய் பேசு, நற்பெயரைக் கெடு, பொய்பேசி அகப்பட்டுக் கொள், பொய்பேசி மீள், பொய்பேசி மீட்டு, பொருள்கள் வகையில் ஏமாறச் செய், ஏய்த்துவிடு.
Lie
-2 n. கிடை, கிடப்பு, கிடக்கும் திசை, கிடக்கும் நிலை, இட அமைவு, விலங்கின் முழை, பறவைகளின் தங்கிடம், மீன்களின் ஒதுங்கிடம், (வினை.) படு, விலங்குகள் வகையில் கிட, கிடக்கை கொள், படுக்கை நிலைகொள், இருக்கைகொள், கடப்புறு, அமைந்திரு, பரந்து காணப்பெறு, நங்கூரமிட்டுத
Lie-abed
n. நேரங்கழித்து எழுந்திருப்பவர்.
Liebig
n. வெண்சத்தோ கொழுப்போ பசையோ இல்லாதபடி பிரித்தெடுக்கப்பட்ட மாட்டிறைச்சிச் சாறு.
Lied
n. செர்மன் நாட்டுப்பாடல், நாட்டுப்பாடல் வகையைச் சேர்ந்த செர்மன் கவிதை.
Lief
adv. விருப்பமுடன், மகிழ்ச்சியாக.
Liege
n. பண்ணையுரிமை மேலாள், தலைவர், வாரக்குடியாள், (பெ.) நிலமானியப் பணிபெற உரிமையுள்ள, நிலமானியப் பணி செய்யக் கடமைப்பட்டுள்ள.