English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Likewise
adv. இதுபோலாவே, மேலும், இன்னும்.
Likin
n. சீனாவில் மாவட்ட இடப்பெயர்வு வரி.
Liking
n. விருப்பம், தனிப்பற்று, பற்றவா, நாட்டம், மகிழ்வு ஈடுபாடு, சுவைத்திறப்பற்று.
Lilac
n. நறுமண மலர்ப்புதர்ச் செடிவகை, இளஞ்சிவப்பு நிறம், (பெ.) இளஞ்சிவப்பான.
Liliacious
a. அல்லிமலர்ச் செடியினஞ் சார்ந்த.
Lilkeness
n. போன்றிருக்கும் தன்மை, ஒத்ததன்மை, ஒப்பு, ஒப்புமை, ஒத்தபடிவம், ஒப்புரு, ஒத்த தோற்றம், சாயல், உருவொத்த படம், ஓவியப்படம்.
Lilliputtian
n. லிலிபுட் என்ற கற்பனை நாடு சார்ந்தவர், குள்ளர், (பெ.) லிலிவுட் என்ற கற்பனை நாடு சார்ந்த, மிகு குள்ளமான, மிகச் சிற்றுருவுடைய.
Lilnguafranca
n. கீழை நடுகிலக்கடற் பகுதியில் வழங்கும் கலப்பு மொழி, இடையீட்டுப் பொதுமொழி, இடையீட்டுப் பொதுக்கருத்துப் பண்பு.
Lilt
n. சந்தப்பாடல், இசைப்பாடல், (வினை) இசைத்துப் பாடு, சந்தமுடன் பாடு.
Lily
n. அல்லிமலர், தூவெண் மேனியர், தூவெண்ணிற முடையது, தூய்மையுடைவர், தூய்மையுடையது, வெண்ணிற மரபுரிமை மலர்ச்சின்னம், மென்மையான வௌளை நிறம்.
Lily-iron
n. கழற்றக்கூடிய முகப்புடைய மினெறி வேல், சுழலும் எறி ஈட்டி வகை.
Lilylivered
a. கோழைத்தனமான.
Lily-white
a. அல்லிமலர் போன்ற தூய வெண்ணிறமுடைய.
Limb
-1 n. சினை, பக்க உறுப்பு,கைகால் அல்லது சிறகு, கொப்பு, பெருங்கிளை, சிலுவைக் கை, வாசகக் கூறு, மலையின் பக்கக்கிளை, (வினை) உறுப்பு அகற்று, உடல் முண்டமாக்கு, முடமாக்கு, செயலற்றவராக்கு.
Limb
-2 n. மேற்பரப்பின் விளிம்பு, கோணமானி முதலியவற்றின் அளவு குறிக்கப்பட்ட ஓரம், வெங்கதிர் தண்கதிர் மண்டிலங்களின் ஓரம், அல்லிவட்டம் புல்லிவட்டம் இலை ஆகியவற்றின் இதழ்ப்பகுதி.
Limbate
a. (உயி., தாவ.) தௌதவாக வேறுபடுத்தப்பட்ட ஓர எல்லைகளையுடைய, வண்ண வேறுபாடுடைய விளிம்பெண்களையுடைய.
Limber
-1 n. பீரங்கி வண்டியின் கழற்றக்கூடிய முன்பகுதி, (வினை) பீரங்கி வண்டியின் முன்பகுதியைப் பீரங்கியோடு சேர், பீரங்கி வண்டியின் இரு பகுதிகளையும் இணைத்துப் பூட்டு.
Limber
-2 n. (கப்.) இறைப்புக்குழாய்க் கிடங்குக்குக் கழிவு நீர் செல்வதற்காக தளக்கட்டைப் பலகையில் வெட்டப்பட்ட துளைகளுள் ஒன்று.
Limber
-3 a. எளிதில் வளையக்கூடிய, துவளத்தக்க, (வினை) வளையும்படி செய், துவளச்செய், இளக்கமாகும்படி செய்.
Limbo
n. புறநரகு, இயேசுநாதர் பிறப்புக்கு முன் வாழ்ந்த நல்லோரும் ஞானஸ்நானம் பெறாத குழந்தைகளும் செல்லுவதாகக் கூறப்படும் நரகச் சுற்றுப்புறப்பகுதி, சிறைச்சாலை, சிறைக்காவல், புறக்கணிக்கப்பட்ட நிலை, மறக்கப்பட்ட நிலை, முழுமறதி.