English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lime
-1 n. சுண்ணாம்பு, சுண்ணாநீறு, சுண்ணக உயிரகை, பறவைகளைப் பிடிப்பவர் பயன்படுத்தும் பட்டைப்பசை, (வினை) தோலைச் சுண்ணநீரில் இட்டு ஊறுபதஞ் செய், கிளைகளில் பட்டைப் பசைவைத்துப் பறவைகளைப்பிடி, பட்டைப்பசை தேய்.
Lime
-2 n. எலுமிச்சம் பழம், எலுமிச்சை.
Lime
-3 n. அழகொப்பனைக்குரிய இருதய வடிவ இலைகளும் சிறு நறுமண இளமஞ்சள் வண்ண மலர்களுமுள்ள மரவகை.
Lime-burner
n. சுண்ணம் செய்பவர், சுண்ணாம்புக்கல்லை எரித்துச் சுண்ணம் உண்டாக்குபவர்.
Lime-cast
n. கட்டிடத்தின் சுண்ண மேற்பூச்சுப் பாளம்.
Lime-juice
n. எலுமிச்சம்பழப்பிழிவு, எலுமிச்சைச் சாற்றுக்குடிமம், சொறி-கரப்பான் மருந்தாகப் பயன்படும் எலுமிச்சம் பழச்சாறு.
Limekiln
n. சுண்ணாம்புக் காளவாய், சுண்ணாம்புச் சூளை.
Limelight
n. வௌளொளி, தீயகமும் நீரசமும் கலந்துருவாக சுடரொளி.
Limen
n. (உள.) தூண்டுதலுணர்ச்சி புலப்படாக் கீழ் எல்லை, உணர்ச்சியைத் தோற்றுவிப்பதற்குத் தேவையான நரம்புக்கிளர்ச்சியின் மிகக் குறைந்த அளவு.
Lime-pit
n. மயிரை நீக்குவதற்காக விலங்கின் தோல்களை ஊறவைக்கும் குழி.
Limerick
n. வெற்று வேடிக்கைப்பாட்டு.
Lime-stone
n. சுண்ணாம்புக் கற்பாறை வகை, சுண்ணாம்புக்கல், உரமாகப் பயன்படும் சுண்ணக் கரியகை.
Lime-twig
n. பறவைப்பிடிப்புப் பசை பூசப்பட்ட கிளை.
Limewort, n..
மூலிகைச் செடிவகை.
Limit
n. வரம்பு, எல்லைக்கோடு, எல்லைக்கோடிமுனை, கடத்தலாகாத எல்லை, கடக்கக்கூடாத வரம்பு, (வினை) வரம்புக் குட்படுத்து, வரையறு, கட்டுப்படுத்து, எல்லை ஏற்படுத்து, மட்டுப்படுத்து.
Limitarian
n. மனித இனத்தில் வரையறை செய்யப்பட்ட ஒருபகுதி மட்டும் மீடபுப் பெறும் என்னும் கோட்பாட்டாளர்.
Limitary
a. கட்டுப்பாட்டுக்குட்படுத்தப்பட்ட, எல்லை சார்ந்த, எல்லைக்குட்பட்டுள்ள, எல்லைகாளகச் செயற்படுகிற, வரம்பாகப்பயன்படுகிற.
Limitation
n. கட்டுப்படுத்தல், கட்டுப்பாடு, கட்டுப்பாட்டு விதி, குறைபாடு, எல்லை வரையறை, சூழல் கட்டுப்பாடு, சட்டக்கால எல்லை, உரிமைத்தவணை எல்லை.
Limitrophe
a. எல்லையை அடுத்துள்ள.
Limn
v. வண்ணப்படம் எழுது, தீட்டு வரை.