English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Linoleum
n. மெருகிட்ட மெழுகுத்துணிவகை.
Linotype
n. வரி உருக்கச்சுப் வொறி, அச்சுருக் கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை வரிப்பாளங்களாக உருக்கிவார்த்து அடிக்கும் அச்சுப் பொறி.
Linsang
n. கிழக்கிந்திய தீவுகளிலுள்ள புனுகுப்பூனை வகை.
Linsey-woolsey
n. கம்பளியும் நுலும் சேர்த்து நெய்த பருக்கன் ஆடைத்துணி வகை.
Linstock
n. (வர.) பழைய பீரங்கிகளுக்கு நெருப்புவைக்கும் எரிகொள்ளி இணைத்த நீண்ட கோல்.
Lint
n. காயங்களுக்கும் புண்களுக்கும் கட்டும் பஞ்சுத்துணி வகை, கட்டுத்துணி.
Lintel
n. வாயில்-பலகணி ஆகியவற்றின் மேற்சட்டை.
Liny
a. கோடுகளால் ஆன, வரிவரியான, சுரிப்புள்ள, மடிப்புள்ள.
Lion
-2 n. சிங்கம், ஆண்மையுள்ளவர், வீரர், நெஞ்சுரமுடையவர், கூட்டங்களில் சிறப்பாக அறிமுகம்செய்துவைக்கப்படும் புகழ்பெற்ற கல்வியறிவுடையோர், பிரிட்டன் நாட்டுச்சின்னம்.
Lionize
v. அருங்காட்சி காண், சுற்றிப்பார், அருங்காட்சி காட்டு, அருங்காட்சியாகக் காட்டு, புகழ்வீரராக நடத்து, புகழ்வீரராக்கு.
Lions
n. pl. அருங்காட்சிகள், நகரத்திற் காணவேண்டிய பகுதிகள், காட்சிச் சிறப்புடைய பகுதிகள்.
Lip
n. உதடு, இதழ், உதடுபோன்ற உறுப்பு, இதழ்போன்ற பகுதி, கிண்ணத்தின் வளைவிளிம்பு, துளையின் பக்க விளிம்பு, புண்ணின் வாயலகு, மலரின் இதழலகு, துடுக்கான பேச்சு, துடுக்குத்தனம், (வினை) உதட்டால் தொடு, இதழ் பொருத்து, அலை வகையில் மேவி மீள், தொட்டுவிலகு, உதட்டுக்குள்ளாக முனகு, குழிப்பந்தாட்டப் பந்து வகையில் பந்தினைக் குழிவிளிம்பு மேவும் படி செய்.
Lip-deep
a. உதடடளவான, மனமேவாத, உள்ளார்ந்த வாய்மையற்ற.
Lip-language
n. இதழியக்கப் பேச்சுமுறை, உதட்டசை வினைப் பயன்படுத்திச் செவிடர்களுக்கும் ஊமைகளுக்கும் கற்பிக்கும் முறை.
Lipper
n. (கப்.) அலையதிர்வியக்கம், கடற்பரப்பின் திரைப்பு.
Lip-reading
n. உதட்டசைவால் செவிடர்களும் ஊமையும் பேச்சுப் பொருளறியும் முறை.
Lipsalve
n. உதட்டுப் புண் களிம்பு, முகப்புகழ்ச்சி, போலிப் புகழ்ச்சி.