English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Litmus
n. கற்பாசி வகையிலிருந்து கிடைக்கும் வேதியியல் நிறமாற்ற இயல்புடைய வண்ணப்பொருள்.
Litmus-paper n.
வேதியியல் நிறமாற்ற வண்ணப்பொருள் தோய்ந்த நீலத்தாள்.
Litotes
n. குறைவு நவிற்சி.
Litre
n. பதின்மான முகத்தலளவை அலகு, 'லிட்டர்' பத்துசெண்டிமீட்டர் பக்கமுள்ள கன சதுரத்தின் பரிமாணம்.
Litter
n. சிவிகை, நோயாளிகளுக்கான தூக்கு கட்டில், சேக்கை, சிறு விலங்குகளின் வைக்கோற் படுக்கை, ஓரீற்றக் குட்டிகளின் தொகுதி, சருகு சாணக்கூளம், குப்பை கூளம், தாள் செத்தை சவறு, துண்டுதூசுக் குவை, துப்புரவற்ற நிலை, (வினை) வைக்கோல் சேக்கையிடு, வைக்கோல் கூளம் தூவிப் பரப்பு, இடத்தை ஒழுங்கின்றி வைத்திரு, பொருளைத் தாறுமாறாகப் போட்டுவைத்திரு, தாறுமாறான தோற்றமளி, பரவலாகச் சிதறியிடு, குட்டிகளை ஈனு.
Little
n. சிறிது, சிறிதளவு, சிறிதளவானது, சிறிதுதொலை, சிறிதுநேரம், அற்பம், சிறுதிறமானது, (பெ.) சிறிய பெரிதல்லாத, சிற்றளவான, மிகுதியல்லாத, சிற்றுருவுடைய, இளைய, குழந்தையாயிருக்கிற, குழந்தைபோன்ற மென்னயம் வாய்ந்த, குழந்தைபோன்று மென்னய உணர்ச்சி தூண்டுகிற, குழந்தைபோன்று மெல்லாதரவுக்குரிய, குழந்தைபோன்று அருமையான, அரிய விருப்பத்துக்குரிய, குற்றுருவுடைய, இழிந்த கீழ்த்தரமான, சிறப்பற்ற, முக்கியத்துவமற்ற, அவலமான, சிறுதிறமான, புறக்கணிக்கத் தக்க, அற்பமான, (வினையடை) மிகச்சிறிய அளவில் மட்டுமே, ஒரு சிறிதே, அரிதே, கிட்டத்தட்ட இல்லை என்று சொல்லும் அளவில்.
Little-case
n. (வர.) சிறைக்கூட முடக்க அறை.
Little-Englander
n. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டுமென்னும் கோட்பாட்டாளர்.
Little-Englandism
n. பிரிட்டன் தன் குடியேற்ற நாட்டுப் பொறுப்புக்களையும் கடமைகளையும் குறைத்துக் கொள்ளவேண்டுமென்னும் கோட்பாடு.
Littoral
n. கடலோரப் பகுதி, (பெ.) கடலோரத்திலுள்ள.
Liturgy
n. கிழக்கிந்திய திருக்கோயில்களின் நற்கருணை அலுவலகம், பொதுவழிபாட்டுமுறை வாசகச்சுவடி, பொது அருள் முறையீட்டுத் தொகுதி, பண்டைக் கிரேக்க நாட்டில் நகரச் செல்வர்கள் காசின்றிச் செய்யும் பொதுத் தொண்டு.
Liutenant
n. அணுக்க முதன்மையர், ஆட்பேர்.
Livable
a. வீட்டு அறை வகையில் குடியிருக்கத்தக்க, இடச் சூழல் வகையில் தங்கிவாழ் வதற்கிசைவான, தட்பவெப்பநிலை வகையில் மனித வாழ்வுக்குகந்த, வாழ்வு வகையில் வாழத்தக்க, ஆள்வகையில் உடன் வாழ்வதற்கியைந்த, தோழமைக்குகந்த.
Live
-1 a. உயிருள்ள, உயிரோடிருக்கிற, வாழ்நிலையிலிருக்கிற, மெய்யாகவுள்ள, கற்பனையல்லாத, ஓவிய உருவாயில்லாத, நடைமுறை வினைக்குரிய, வினையாட்டுப் பொருளாயில்லாத, நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற, வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமா
Live
-2 v. உயிருடனிரு, வாழ்ந்திரு, பிழைத்திரு, சார்ந்து பிழை, சார்ந்து வாழ்வுபெறு, வாழ், வாழ்க்கையில் நடந்து கொள், வாழ்க்கை நடத்து, வாழ்க்கைமுறை மேற்கொள், வாழ்நாள் கழி, குறிக்கோள் வழி நில், வாழ்க்கை நடந்து காட்டு, வாழ்வுமூலங் காட்டு, வாழ்வாகக் கொள், வாழ்க்கை ந
Live bait
தூண்டில் இரையாகப் பயன்படுத்தப்படும் சிறுமீன்.
Live-bait
n. தூண்டில் இரையாக வைக்கப்பட்ட உயிருள்ள மீன் அல்லது புழு.
Livelihood
n. வாழ்க்கைத் தொழில், பிழைப்பு.
Livelong
a. நெடு நீளமான, நெடுநீளமாக நீடித்த, விடாது நீண்ட.
Lively
a. உயிர்த்தன்மையுள்ள, உயிராற்றலுடைய, உயிர்த்துடிப்புடைய, உயிர்த்தோற்றமுடைய, மெய்ப்பாடுடைய, முனைப்பான விளக்கம் வாய்ந்த, சுறுசுறுப்பான, கிளர்ச்சி வாய்ந்த, எழுச்சிதருகிற, உவகையூட்டுகிற, சுவையார்ந்த, நிறவகையில் பளபளப்பான, படகு வகையில் அலைமீது எழுந்தெழுந்து செல்கிற, துள்ளிசையான, இக்கட்டார்ந்த, நெருக்கடியான.