English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Lixiviate
v. கரையும் பொருளையும் கரயாப் பொருளையும் வடித்திறுத்துப் பிரித்தெடு.
Lizard
n. பல்லி, பாடும் அழிகய பறவை வகை.
Llama
n. தென் அமெரிக்காவில் கம்பளி போன்ற மயிரடர்ந்த குட்டையான திமிலற்ற பொதிசுமக்கும் ஒட்டக இன விலங்கு வகை, ஒட்டக இன விலங்கின் கம்பளி மயிர்.
Llanero
n. மரங்களற்ற தென் அமெரிக்க சமவௌதயில் வாழ்பவர்.
Lloylds
n. கப்பற்பிணைக் காப்பீடேற்பவர்களின் சங்கம்.
Lo
int. அதோ காண், அந்தோ, ஐயோ.
Lo
n. மஞ்சள் வெண்மை சிவப்பு முதலிய கலப்பு மஞ்சரிப் பூக்களையும் கொத்தான இலைத்தொகுதியையும் கொண்ட மலர்ச்செடிவகை.
Lo,ndon smoke, n.,
மங்கிய சாம்பல் நிறம், வௌதறிய ஈய நிறம்.
Loach
n. உணவாகப் பயன்படும் நன்னீர்வாழ் சிறு மீன் வகை.
Load
n. சுமை, பளு, தூக்கிச் செல்லும் பொருள், கண்டி, பார அளவை, எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வௌதயேற்றப்படும் மின்னோட்ட அளவு, மனச்சுமை, கவலை பொறுப்பு, அக்கறை, (வினை) சுமைஏற்று, பாரமேற்று, பளுவால் அழுத்து, ஈயம் வைத்துப் பளுவாக்கு, கப்பல் வகையில் எடையேற்றுக்கொள், பளுத்தாங்கு, எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய், இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல, தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு, துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி, பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு, வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
Load-displacement, load-draught
n. எடைமான மூழ்கு வரை, ஏற்றிய எடையால் கப்பல் அமிழும் வரைமட்டம்.
Loaded
a. வாதீட்டில் ஒருதிசைச் சார்புமிக்க, வாத வகையில் போராட்டச் செய்திகளை உட்கொண்ட.
Loader
n. வேட்டையாட்களின் துப்பாக்கிகளுக்கு மருந்து திணிக்கும் பணியாள், பளுவேற்றம் பொறி.
Load-lilne
n. பாரவரை, அளவுசுமை ஏற்றப்பட்டதைக் காட்டுங் கோடு.
Loads
n. pl. (பே-வ.) ஏராளம், பெரிய அளவு,கழிமிகை.
Loadstone
n. காந்தக்கல், காந்தம்.
Loaf
n. ரொட்டித் துண்டு, ஊதப்ப அளவுக்கூறு, பொங்கப்ப அளவுக்கூறு, கூம்பு வெல்லக்கட்டி, அச்சுவெல்லத் துண்டு, கோசுக்கீரை வகைகளின் உருள் தலைப்பகுதி.
Loaf
-2 n. போம்பித்திரிதல், (வினை) சோம்பித்திரி, காலத்தை வீணில் கழி, உலாவு, மெல்ல நட.
Loafiing
n. சோம்பித்திரிதல், காலத்தை வீணிற் கழித்தல்.
Loam
n. களிச்சேற்று வண்டல், செங்கல் செய்வதற்கான களிமணல் செத்தைக் கலவை, மக்கிய பொருள் கலந்த வளமிக்க வண்டல் உரம்.