Word |
English & Tamil Meaning |
---|---|
குறைபடு - தல் | kuṟai-paṭu-, v. intr. <>id. +. 1. To be wanting; to diminish; to become scarce; குறைவாதல். 2. To be broken in pieces; to be shivered into fragments; |
குறைபடு - த்தல் | kuṟai-paṭu-, v. Caus. of குறைபடு1-. intr. 1. To fail in rendering what is due; to cause deficiency; குறைவுண்டாக்குதல்.--tr. 2. To draw up, as water by the clouds; 3. To put one to shame; |
குறைபாடு | kuṟai-pāṭu, n. <>குறைபடு1-. 1. Deficiency, defect; குறைவு. ஈசன்பூசை யியற்றினேன் குறைபாடின்ந்றி (பிரமோத். 17, 19). 2. Want, need, discontent; |
குறைமகன் | kuṟai-makaṉ, n. <>குறை+. One who has lost his status in life; நிலைமை யிழந்தவன். செல்வநீத்த குறைமகன் (பெருங். இலாவாண. 8, 32.) |
குறைமதி | kuṟai-mati, n. <>குறை1-+. Waning moon; தேய்பிறை, குறைமதிநீரோ நின்பேராற்றல் (கந்தபு. அசமுகிபு. 11). |
குறைமாதக்காரி | kuṟai-māta-k-kāri, n. <>id. +. Woman who has given birth to a child permaturely; மாதவளவு நிரம்புமுன் பிரசவித்தவள். |
குறைமாதபிள்ளை | kuṟai-māta-p-iḷḷai, n. <>id.+. Child born prematurely; மாதவளவு நிரம்புமுன் பிறந்த பிள்ளை. |
குறைமாதம் | kuṟai-mātam, n. ஈid. +. 1. Remaining part of the month; மாதத்தின் மிச்சம். 2. Deficiency in the period required for the full development of foetus, as in premature delivery; |
குறையணிகொள்(ளு) - தல் | kuṟai-y-aṇi-koḷ-, v. intr. <>குறை+. To be imperfectly dressed or adorned; அரைகுறையாக அலங்கரித்துக்கொள்ளுதல். குறையணி கொண்டவாறே (சீவக. 2537). |
குறையரவு | kuṟai-y-aravu, n. <>குறை1-+அரவு. A kind of serpent, as being shrot. See குக்குடசர்ப்பம். குறையரவு தீண்டி (சீவக. 1271). |
குறையலாளி | kuṟaiyal-āḷi, n. <>குறையல்+ஆள்-. Tirumaṅkai-y-āḻvār, as the chief of Kuṟaiyal. See திருமங்கைமன்னன். மங்கையர்கோன் குறையலாளி (திவ். பெரியதி. 4, 4, 10). |
குறையவை | kuṟai-y-avai, n. <>குறை1- + அவை. Assembly of inferiors, opp. to niṟai-y-avai; அறிவுகுணங்களாற் குறைவுபட்டார் கூடியசபை. (யாப். வி. 96, 515.) |
குறையறு - தல் | kuṟai-y-aṟu-, v. intr. <>குறை+. To bestow liberaly and free one from wants, anxiety, etc.; மனக்குறை நீங்குதல். |
குறையறு - த்தல் | kuṟai-y-aṟu-, v. tr. Caus. of குறையறு1-. 1. To bestow liberally and free one from wants, anxiety, etc.; குறைநீங்கக் கொடுத்தல். சோறுந் தண்ணீருங் குறையறுத்துக்கொண்டிருக்குமா போலே (ஈடு, 9, 3, 1). |
குறையாக்கேள்வி | kuṟaiyā-k-kēḷvi, n. <>குறை-+ஆ neg.+. Perfect learning, sound erudition; நிரம்பிய ஞானம். குறையாக்கேள்வி மாடலன் (சிலப், 287, 111). |
குறையிர - த்தல் | kuṟai-y-ira-, v. tr. <>குறை +. To beg, supplicate, petition for one's wants; தன்குறைகூறி வேண்டுதல். மாலைக் குரையிரந்து (திவ். இயற். 2, 17). |
குறையுடல் | kuṟai-y-uṭal, n. <>குறை1-+. Headless body believed to dance on the battlefield; தலையிலாத உடல். குறையுடலுங் கும்பிட்டு நிற்குமாலோ (கலிங். 97). |
குறையுறவு | kuṟai-y-uṟavu, n. <>குறை+உறு-. Being in distress; மனக்குறை கொண்டிருக்கை. தோழியிடைச் சென்று . . . பின்னுங் குறையுறவு தோன்றநின்று (திருக்கோ. 90, அவ.). |
குறையுறு - தல் | kuṟai-y-uṟu-, v. tr. <>id. +. To beg, entreat, supplicate for one's wants; குறைகூறி வேண்டுதல். இரந்து குறையுற்ற கிழவனை (தொல். பொ. 237). |
குறைவயிறு | kuṟai-vayiṟu, n. <>குறை1-+. Stomach inadequately fed; குறையாக உண்டவயிறு. அரைவயிறு குறைவயிறாக உண்பவன். Colloq. |
குறைவாளர் | kuṟai-vāḷar, n. <>குறைவு+ஆள்-. Persons in want; குறைவுடையவர். மாதபிதாக்கள் ப்ரனஜகளில் குறைவாளர்பக்கலிலேயிறே இரங்குவது (ஈடு, 4, 5, 8). |
குறைவில் | kuṟai-vil, n. <>குறை+. Rainbow; வானவில். வானத்துக் குறைவி லேய்ப்ப (பெரும்பாண். 292). |
குறைவிலறிவுடைமை | kuṟaivil-aṟivuṭai-mai, n. <>குறை1-. [M. kuṟavu.] Possession of unlimited wisdom, one of iṟaivaṉ-eṇ-kuṇam, q.v.; குறைவில்லாத அறிவைக் கொண்டிருக்கையாகிய இறைவனெண்குணத்துள் ஒன்று. (பிங்.) |
குறைவு | kuṟaivu, n. <>குறை1-. [M. kuṟavu.] 1. Lack, want, deficiency, dearth, limit; குறைபாடு. நாடக நடித்ததோ குறைவில்லை (தாயு. எங்குநிறை. 5). 2. Defect; default; 3. Little, small quantity; 4. Indigence, poverty; 5. Use, value profit; |