Word |
English & Tamil Meaning |
|---|---|
| சமி 5 - த்தல் | cami-, 11 v. tr. <>kṣam. To endure; to forgive; பொறுத்தல். (பிங்.) |
| சமி 6 - த்தல் | cami-, 11 v. intr. prob. šavor gam. To go, walk; நடத்தல். (பிங்.) |
| சமிக்கை | Camikkai, n. <>sam-jā. 1. Signal, hint, gesture, as winking of the eyes; சைகை. Colloq. 2. Technical term in art or science; |
| சமிஞ்ஞாட்சரம் | camiāṭcaram, n. <>id. + akṣara. A letter, often an initial, denoting name of a person or thing; இயற்பெயர் தந்தை பெயர் ஊர்ப்பெயர் குடிப்பெயர்களைக் குறிக்கவழங்கும் முதற்குறிப்பெழுத்து. |
| சமிஞ்ஞை | camiai, n. <>samjā. 1. See சமிக்கை, . 2. Name, appellation; |
| சமித்தம் | Camittam, n. cf. sam-iddha. Sacrificial hall; வேள்விமண்டபம். நின்றதோர் சமித்தங் கண்டான் (கம்பரா. பொழிலிறுத்த. 49). |
| சமித்து 1 | camittu, n. <>Samidh. Sacrificial fuel. See சமிதை. சமித்தேந்திய காவன் மன்னன் (பாரத. சம்பவ. 57). |
| சமித்து 2 | camittu, n. Ganja. See கஞ்சா. (மலை.) . |
| சமிதம் | camitam, n. <>šami-tā. Calmness, equanimity; அமைதி. உள்ளார்வம் பொறை சமிதம் (குற்றா. தல. வடவருவி. 50). |
| சமிதி | camiti, n. <>samiti. 1. Association, conference; சபைக்கூட்டம். 2. (Jaina.) Restraints observed for arresting the inflow of karma; 3. See சமீகம். (யாழ். அக.) |
| சமிதை | Camitai, n. <>samidhā. Sacrificial fuel, of which there are nine kinds viz., āl, aracu, atti, itti, mā, palācu, vaṉṉi, nāyuruvi, karuṇkāli; யாகத்திற்குரிய ஆல் அரசு அத்தி இத்தி மா பலாசு வன்னி நாயுருவி கருங்காலி என்பவற்றின் சுள்ளி. புண்ணியப் பலாசின் கண்ணிறை சமிதை (பெருங். இலாவாண. 3, 14). |
| சமிதைக்கிரிகை | Camitai-k-kirikai, n. <>id. + kriyā. Act of kindling sacred fire by throwing camitai into sacrificial pit with appropriate mantras; மந்திரபூர்வமாகச் சமித்துக்களை அக்கினியிலிட்டு வேள்வி செய்யுஞ் செயல். சமிதைக்கிரிகை சால் புளிக் கழிப்பி (பெருங். இலாவாண. 3, 81). |
| சமிப்பாகம் | camippākam, n. See சமிபாகம் (யாழ். அக.) . |
| சமிபாகம் | camipākam, n. <>šampāka. Laburnum. See கொன்றை. (மலை.) . |
| சமிபாடு | camipāṭu, n. <>சமி- +. (J.) 1. Time required for digestion; சீரணிக்குங்காலம். 2. Digestion; |
| சமிர்த்தி | camirtti, n. <>samṟaam. Fulness; abundance; நிறைவு. அன்னசமிர்த்தி (குற்றா. தல. சிவபூசை. 46). |
| சமிரணன் | camiraṇaṉ, n. See சமீரணன். சமிரணன்றன் மதலை (சேதுபு. இராமதீர். 68). . |
| சமிராட்டு | Camirāṭṭu, n. <>sam-rāṭ. See சம்மிராட்டு. சுராட்டுமச் சமிராட்டு மானானே (சேதுபு. கோடிதீர். 48). . |
| சமிலாகி | camilāki, n. cf. capalā . Long pepper; திப்பலி. (மலை.) |
| சமீகம் | Camīkam n. <>samīka. War, battle, fight போர். (ஆ.நி.) |
| சமீந்தார் | camīntar, n. <>U. zamīn-dār. Zemindar, landed proprietor paying land-tax to Government; குடிகளிடம் தாமே வரி வசூலித்துக் கொண்டு சர்க்காருக்கு மொத்தவரி செலுத்திப் பூமியை ஆள்வோர். |
| சமீந்தாரி | camīntari, n. <>id. 1. Estate of a Zemindar; ஜமீன்கிராமம்; 2. See சமீந்தார். |
| சமீபம் | camīpam, n. <>sam-īpa. Nearness, proximity; அண்மை. நஞ்சமீபத்தில் வாவென்று (மச்சபு. ஆதிசி. 8). |
| சமீபலக்கணை | camīpa-lakkaṇai, n. See சமீபலக்ஷணை. . |
| சமீபலக்ஷணை | camīpa-lakṣaṇai, <>Samīpa + lakṣaṇā. (Log) Variety of ilakkaṇai in which a word denotes an object which is in the vicinity of what it normally signifies, as கங்கைக்கண் இடைச்சேரி; ஒரு பொருளை உணர்த்துஞ்சொல் அப்பொருளினை அடுத்துள்ள பிறிதொரு பொருளை உணர்த்துவதாகிய இலக்கணை. (சி. சி. 4, 28, சிவாக்.) |
| சமீபவிலக்கணை | camīpa-v-ilakkaṇai, n. See சமீபலக்ஷணை. . |
| சமீபி - த்தல் | camīpi-, 11 v. tr. <>Samīpa. [M. Samīpikka.] To approach, come close; கிட்டுதல். |
| சமீரணம் | camīraṇam, n. <>Sam-īraṇa. 1. Seville orange. See கிடாரை. (மலை.) . 2. Bergamotte orange. See எலுமிச்சை. |
