Word |
English & Tamil Meaning |
---|---|
சுவேதசாரம் | cuvēta-cāram, n. <>švēta + sāra. Kaus, a large and coarse grass. See நாணல். (மலை) . |
சுவேதத்துவீபம் | cuvēta-t-tuvīpam, n. <>id. +. White island believed to be the world, of enjoyment; வெண்ணிறவுலகெனக் கருதப்படும் போகபூமி. |
சுவேதநீர் | cuvēta-nīr, id. +. Semen; வீரியம். (நன்.268, உரை.) |
சுவேதபித்தம் | cuvēta-pittam, n. <>svēda +. A disease causing excessive perspiration; உடல்முழுதும் வியர்வை உண்டாக்கும் ஒருவகை நோய். (சீவரட்.184.) |
சுவேதம் 1 | cuvētam, n. <>švēta. 1. Whiteness; வெண்மை. (சூடா.) 2. Quicksilver; 3. Venus; |
சுவேதம் 2 | cuvētam, n. <>svēda. Perspiration; வியர்வை. (சூடா.) |
சுவேதம் 3 | cuvētam, n. perh. švēta-kāṇda. 1. Four seeded willow. See நீர்வஞ்சி. (மூ. அ.) . 2. Rattan-palm. See வஞ்சிக்கொடி. 3. Holygarlic pear. See மாவிலிங்கை. (மலை.) 4. See சுவேதசாரம். |
சுவேதமூலம் | cuvēta-mūlam, n. <>švēta +. Purslane-leaved trianthema. See சாரணை. (மலை) . |
சுவேதமூலி | cuvēta-mūli, n. <>id. +. Humble plant. See தொட்டால்வாடி. (மலை) . |
சுவேதமூலை | cuvēta-mūlai, n. <>id. +. See சுவேதமூலம். (தைலவ.தைல.93.) . |
சுவேதரசம் | cuvēta-racam, n. <>id. +. Pancreatic juice; சீரணத்துக்கு ஏற்றதும் வயிற்றில் உண்டாவதுமான ஒருவகை நீர். (C. G.) |
சுவேதராசாவர்த்தம் | cuvēta-rācāvarttam, n. <>id. +. A white species of lapislazuli; வெண்ணிறமுள்ள மணிவகை. (W.) |
சுவேதவராககற்பம் | cuvēta-varāka-kaṟpam, n. <>id. +. The current age, being the 8th day of the 51st year of Brahmā, called after the white-boar incarnation of Viṣṇu who assuming that form rescued the world from the deluge that ended the 7th day; பிரமனது 51-ஆம் ஆண்டின் 7-ஆம் நாளிறுதியில் உலகைப் பிரளயத்தினின்று காத்த திருமாலின் வெள்ளைவராகாவதாரத்தாற் பெயர்பெற்றதும், அப்பிரமனது 51-ஆம் ஆண்டின் 8-ஆம் நாளுமாகிய நடப்புக்காலம். |
சுவேதவராகம் | cuvēta-varākam, n. <>id. +. Viṣṇu in His white-boar incarnation; திருமாலின் வராகாவதாரம். |
சுவேதவனப்பெருமாள் | cuvēta-vaṉa-p-perumāḷ, n. <>சுவேதவனம் +. Meykaṇṭa-tēvar. See மெய்கண்டதேவர் . |
சுவேதவனம் | cuvēta-vaṉam, n. <>švētavana. A šiva shrine near shiyali in Tanjore district; தஞ்சை ஜில்லாவில் சீகாழிக்கருகிலுள்ள திருவெண்காடு என்னுஞ் சிவதலம் |
சுவேதவாகன் | cuvēta-vākaṉ n. <>švētavāha. See சுவேதவாகனன். சுவேதவாகனெனு நாமம் படைத்த பிரான். (பாரத.அருச்சுனன்றீர்.44) |
சுவேதவாகனன் | cuvēta-vākaṉan, n. <>švēta-vāhana. Arjuna, as riding on a white horse; [வெள்ளைக் குதிரையை ஊர்தியாக உடையவன்] அருச்சுனன். (பிங்.) |
சுவேதன் | cuvētaṉ, n. <>švēta. 1. A Rudra; உருத்திரருள் ஒருவன். (சி. போ. பா. 2, 3, பக். 212.) 2. Whiteman, European; |
சுவேதனை | cuvētaṉai, n. <>sva + vēdanā. Self-perception, self-knowledge; தன்னிறிவு. (W.) |
சுவேதனைக்காட்சி | cuvētaṉai-k-kāṭci, n. <>சுவேதனை +. Knowledge gained from one's own experience; அபரோட்சஞானம். (W.) |
சுவேதாச்சுவதரம் | cuvētāccuvataram, n. <>švētāšvatara. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
சுவேதாம்பரர் | cuvētāmparar, n. <>švēta + ambara. Jaina mendicants clad in white, opp. to tikamparar; வெள்ளாடை தரித்த சைனமுனிவர். |
சுவேலம் | cuvēlam, n. <>su-vēla. A mountain in Ceylon; இலங்கையிலுள்ள ஒரு மலை. இடையுவாவினிற் சுவேலம் வந்திறுத்து (கம்பரா.மீட்சிப்.139) |
சுவேலை | cuvēlai, . See சுவேலம். சுவேலை நெடுஞ் சிலம்பின் (சேதுபு.இராமனருச்.9) |
சுவை 1 - த்தல் | cuvai, 11 v. cf. svādu. [K. savi, M. cuvekka.] tr. 1. To taste; 1. உருசிபார்த்தல். 2. To eat, chew, suck; 3. (Erot.) To kiss; 4. To experience, enjoy; To be palatable, agreeable, pleasing; |