Word |
English & Tamil Meaning |
---|---|
சுழிக்காற்று | cuḻi-kāṟṟu n. <>சுழி +. [K. suḷigāḷi.] See சுழல்காற்று. . |
சுழிக்குணம் | cuḻi-k-kuṇam, n. <>id. +. See சுழிப்புத்தி. (J.) . |
சுழிகணம் | cuḻi-kaṇam, n. <>சுழி2-+. A variety of Taber mesenterica causing twitching of the sides, in children; குழந்தைகளின் விலாவைச் சுழிக்கச் செய்யும் கணைநோய். (பாலவா.40.) |
சுழிகுளம் | cuḻi-kuḷam, n. <>id. +. A four lined stanza of eight letters each, so composed that the letters are arranged in a series of incurving loops, one within another; எவ்வெட்டெழுத்துக்கொண்ட நான்கடியாய், மேனின்று கீழிழிந்தும் கீழ்நின்று மேலேறியும் புறஞ்சென்று உண்முடியப் பாடப்படும் மிறைக்கவி. (தண்டி.95.) |
சுழிகுற்றி | cuḻi-kuṟṟi, n. <>சுழி+. See சுழியாணிக்கட்டை. Nā. . |
சுழிச்சக்கரம் | cuḻi-c-cakkaram, n. <>id. +. An ancient gold coin of madura; மதுரையில் வழங்கிய பழைய பொன்னாணயவகை. |
சுழிசுத்தம்பார் - த்-தல் | cuḻi-cuttam-pār-, v intr. <>id. + சுத்தம் +. To test or examine a horse with reference to the curl-marks on its body; குதிரையின் சுழிமுதலியவற்றைச் சோதித்தறிதல். colloq. |
சுழித்தனம் | cuḻi-t-taṉam, n. <>id. +. See சுழிப்புத்தி. (J.) . |
சுழித்துவலி - த்தல் | cuḻittu-vali-, v. intr. <>சுழி2-+. To have stitches or spasms in breathing; முச்சுவிவட வருந்துதல். |
சுழித்துவாங்கு - தல் | cuḻittu-vāṅku-, v. <>id. +. (w.) intr. To be spasmodic, as breath at the dying moment; சுவாசம் கஷ்டத்துடன் வெளிவருதல். மரணகாலத்தில் மூச்சுச் சுழித்து வாங்குகிறது. -tr. 1. To draw in, as whirlpool, eddy; to engulf; 2. To overthrow prostrate; |
சுழிப்பணம் | cuḻi-p-paṇam, n. <>சுழி+. An ancient coin=2 annas; இரண்டணாவை ஒத்த பழைய நாணயவகை. |
சுழிப்பிழையன் | cuḻi-p-piḻaiyaṉ n. <>id. +. (சங். அக.) 1. Any domestic animal having unlucky curl-marks; தீய சுழியுள்ள மிருகம். 2. III-fated person; |
சுழிப்புத்தி | cuḻi-p-putti, n. <>id. +. Wickedness, knavery; தீக்குணம். (J.) |
சுழிபேதம் | cuḻi-pētam, n <>id. +. Cheating, fraud; மோசம். அவன் என்னைச் சுழிபேதம் பண்ணிவிட்டான். |
சுழிமாந்தம் | cuḻi-māntam, n. <>id. +. Colic attended with rolling of the eyes, one of eight Māntam q.v.; கண்களின் சுழற்சியோடு கூடிய மாந்தவகை. Loc. |
சுழிமின்னல் | cuḻi-miṉṉal, n. <>id. +. [K. suḷimicu.] Forked lightning; கவருள்ள மின்னல் (யாழ்.அக.) |
சுழிமுனை | cuḻimuṉai, n. See சுழமுனை. (திருப்பு.732.) . |
சுழியச்சு | cuḻi-y-accu, n. <>சுழி+. Gold smith's matrix; பொன்னை உருக்கிவார்க்கும் அச்சு. (யாழ்.அக.) |
சுழியப்பேசு - தல் | cuḻiya-p-pēcu-, v tr. <>சுழி1- +. To speak wounding words; வருந்தச்சொல்லுதல். (J.) |
சுழியம் | cuḻiym, n. <>சுழி1-. A kind of ornament worn by women on the head; மகளிர் தலையணிவகையு ளொன்று. சுழியஞ் சூடி (கம்பரா.கடிமணப்.52). |
சுழியல் | cuḻiyal, n. <>சுழி-. (சங். அக.) 1. Curling, as of hair; சுழிந்திருக்கை. 2. A mode of dressing the hair; |
சுழியன் | cuḻiyaṉ, n. <>சுழி. 1. Cunning schemer, deceitful person; வஞ்சகன் (யாழ்.அக.) 2. Intelligent person; 3. Irritable man; 4. Wicked, mischievous man; 5. Whirlwind; |
சுழியாணி | cuḻi-y-āṇi, n. <>id. +. Projecting-pin of a door serving as pivot to move on; கதவுக்குடுமியின் முள்ளாணி. |
சுழியாணிக்கட்டை | cuḻi-y-āṇi-k-kaṭṭai, n. <>id. +. Block or stone to receive the projecting pin of a door; குடுமிக்கதவின் முள்ளாணியைத் தாங்குங் கட்டை. |