Word |
English & Tamil Meaning |
---|---|
செங்குரங்கு | ceṅ-kuraṅku, n. <>id.+. Red monkey, opp. to karu-ṅ-kuraṅku; செந்நிறமுள்ள குரங்குவகை. Colloq. |
செங்குலிகம் | ceṅ-kulikam, n. <>id.+. Vermilion. See இங்குலிகம். அரக்குறு நறுநீ ரஞ்செங்குலிகம். (பெருங்.உஞ்சைக்.41. 16). . |
செங்குவளை | ceṅ-kuvaḷai, n. <>id.+. See செங்கழநீர். (பிங்.) . |
செங்குளவி | ceṅ-kuḷavi, n. <>id.+. Bright yellow hornet, opp. to karu-ṅ-kuḷavi; மஞ்சள் நிறமுள்ள குளவிவகை. (w.) |
செங்குறிஞ்சி | ceṅ-kuṟici, n. <>id.+. Travancore red-wood, l.tr., Gluta travancorica; மரவகை. செங்குறிஞ்சித் தாரார் நறுமாலை (திவ்.இயற்.சிறியதிரு.16). |
செங்குன்றி | ceṅ-kuṉṟi, n. <>id.+. Crab's eye; குன்றி. (மூ.அ.) |
செங்கை | ceṅ-kai, n. <>id.+. 1. Fair, liberal hand; கொடுக்குந்தன்மையுள்ள கை. செங்கையோன் றங்கை (கம்பரா. சூர்ப்ப. 39). The 6th nakṣatra. See திருவாதிரை. (சூடா.) |
செங்கையான் | ceṅ-kaiyāṉ, n. <>id.+. A herb; ஒருவகைப் பூடு. (J.) |
செங்கொடிவேலி | ceṅ-koṭi-vēli, n. <>id.+. Rosy-flowered leadwort, m.cl., Plumbago rosea; ரோஜாநிறப் பூவுள்ள கொடிவகை. (யாழ்.அக.) |
செங்கொடுவேரி | ceṅ-koṭu-vēri, n. <>id.+. See செங்கொடிவேலி. குறிஞ்சி வெட்சி செங்கொடுவேரி (குறிஞ்சிப்.64). . |
செங்கொடுவேலி | ceṅ-koṭu-vēli, n. <>id.+. See செங்கொடிவேலி. (w.) . |
செங்கொய்யா | ceṅ-koyyā, n. <>id.+. Red guava, l.tr., Psidium guyava pomiferum; கொய்யாவகை. (M. M. 333.) |
செங்கொல் | ceṅ-kol, n. <>id.+கொல்-. Pure gold; செம்பொன் (பிங்.) |
செங்கொல்லர் | ceṅ-kollar, n. <>id.+. Goldsmiths; தட்டார். (பிங்.) |
செங்கொள் | ceṅ-koḷ, n. <>id.+. Madras horse-gram, Dolichos uniflorus; கொள்ளுவகை. கருங்கொள்ளுஞ் செங்கொள்ளுந் துணிப் பதக்கென்று (நாலடி, 387). |
செங்கொன்றை | ceṅ-koṉṟai, n. <>id.+. Red Indian laburnum, m.tr., Cassia marginata; ஒருவகை மரம். (L.) |
செங்கோட்டம் | ceṅ-kōṭṭam, n. <>id.+ kuṣṭha. Red Arabian costum; செந்நிறமுள்ள கோட்டவகை. (w.) |
செங்கோட்டியாழ் | ceṅ-kōṭṭiyāḻ, n. <>id.+. A kind of stringed musical instrument, one of four kinds of yāḻ, q.v.; நால்வகை யாழ்களுள் ஒன்று. அங்கோற் றீந் தொடைச் செங்கோட்டி யாழின் (பெருங்.உஞ்சைக்.40, 269). |
செங்கோடு | ceṅ-kōṭu, n. <>id.+. 1. Steep precipice, precipitous cliff; செங்குத்தான மலை. செங்கோடு பாய்துமே யென்றாள் மன் (நாலடி, 372). 2. A šiva shrine in salem district; 3. Panicled golden blossomed pear tree. See செருந்தி. (சூடா.) |
செங்கோல் | ceṅ-kōl, n. <>id.+. [M. ceṅkōl.] 1. Sceptre, a symbol of sovereignty; அரசாட்சிச் சின்னமாகிய நேர்கோல். சேயுயர் விற்கொடிச் செங்கோல் வேந்தே (சிலப்.26, 139). 2. Kingly justice, impartial administration of justice, one of six nāṭṭamaiti, q.v., opp. to koṭuṅ-kōl; 3. Red-hot rod; |
செங்கோல்கோடு - தல் | ceṅ-kōl-kōṭu-, v. intr. <>id.+. To fail in justice, rule unrighteously, as the sceptre slanting; அரசநீதி தவறுதல். செங்கோல் கோடியோ செய்தவம் பிழைத்தோ (மணி.28, 188). |
செங்கோலம் | ceṅ-kōlam, n. <>id.+. Sand containing copper-ore; செம்பு மணல். (w.) |
செங்கோலறுகு | ceṅ-kōl-aṟuku, n. <>id.+. A species of hurrialli grass; அறுகுவகை. (பு.வெ.10, முல்லைப்.3, உரை.) |
செங்கோலோச்சு - தல் | ceṅ-kōl-ōccu-, v. intr. <>id.+. To rule righteously, as wielding the sceptre properly; நீதிதவறாது அரசுபுரிதல். செல்வவேந்தன் செங்கோ லோச்சி (பெருங்.வத்தவ.14, 185). |
செங்கோற்கடவுள் | ceṅ-kōṟ-kaṭavuḷ, n. <>id.+. Yama, as the god dispensing impartial justice; (நீதிசெலுத்துந் தேவன்) யமன். (திவா.) |
செங்கோன்மை | ceṅ-kōṉmai, n. <>id.+. Righteous rule; அரசநீதி. (குறள், அதி.55.) |
செச்சை 1 | ceccai, n. <>id.+. 1. Redness; சிவப்பு செச்சை வாய்திறந்து (திருவிளை. வலை. 24). 2. Scarlet ixora, m.sh., Ixora coccinea; 3. Red basil; |