Word |
English & Tamil Meaning |
---|---|
செங்காய்ப்புண் | ceṅ-kāy-p-puṇ, n. <>செங்காய்+. Unripe boil; பழுக்காத புண். Loc. |
செங்காய்வேளை | ceṅ-kāy-vēḷai, n. <>id.+. A herb; பூடுவகை. (யாழ்.அக.) |
செங்கார் | ceṅ-kār, n. <>செம்-மை+. A kind of dark-red paddy growing in rainy season; மழைக்காலத்து விளையும் மங்கிய செந்நிறமுள்ள நெல்வகை. (சங்.அக.) |
செங்காரனி | ceṅ-kāraṉi, n. <>id.+கார். Dark-red animal, as cow; கருஞ்சிவலையான பசுமுதலிய விலங்கு. (J.) |
செங்காரி | ceṅ-kāri, n. <>id.+கார்-. See செங்காரனி. (w.) . |
செங்காரி - த்தல் | ceṅkāri-, 11 v. intr. <>id.+. Loc. 1. To flush or redden, as face with anger or exposure to scorching heat; கோபம் வெயில் கடுமை இவற்றால் முகஞ்சிவந்துகாட்டுதல். 2. To redden without forming ears, as paddy. crop for want of seasonal rain; |
செங்காரை | ceṅ-kārai, n. <>id.+. Bridefish. See கன்மீன். (M. M. 105.) . |
செங்காலி | ceṅ-kāli, n. <>id.+. See செங்கருங்காலி. பாங்குறு செங்காலி கருங்காலி (சிலப்.3, 26, உரை). . |
செங்காவி | ceṅ-kāvi, n. <>id.+. 1. Purple Indian water-lily. See செங்கழநீர், 1. (அக. நி.) . 2. [T. ceṅgāvi.] Saffron ochre; |
செங்கானாரை | ceṅ-kāṉārai, n. <>id.+கால்+நாரை. Pelican ibis, Tantalus leucocephalus, as having red legs; சிவந்தகாலையுடைய நாரைவகை. செங்கானாரை செல்வன காண்மின் (பெருங்.உஞ்சைக்.40. 23). |
செங்கிடை | ceṅ-kiṭai, n. <>id.+. Prickly sesban, m.sh., Sesbania aculeata; ஒருவகை முட்செடி. நீலச்சுருளுஞ் செங்கிடையுங் கொண்டு (கம்பரா.மிதிலை.14). |
செங்கிடைச்சி | ceṅ-kiṭaicci, n. <>id.+. See செங்கிடை. (சங்.அக.) . |
செங்கிரந்தி | ceṅ-kiranti, n. <>id.+. 1. Venereal herpes; ஒருவகை மேகக்கட்டி. (மு. அ.) 2. Erysipelas; |
செங்கிளுவை | ceṅ-kiḷuvai, n. <>id.+. 1. Whistling peal. See கீச்சுத்தாரா. (M. M. 338.) . 2. A kind of jujube; |
செங்கீரை | ceṅ-kīrai, n. <>id.+. 1. Cockscomb greens, Amaranthus atropurpurea; ஒருவகைக் கீரை. (தைலவ.தைல.135.) 2. See செங்கீரைப்பருவம். (இலக். லி. 806.) |
செங்கீரைப்பருவம் | ceṅ-kīrai-p-paruvam, n. <>செங்கீரை+. section of piḷḷai-t-tamiḻ describing the stage of childhood in which the child lifts up its head and nods it in about the fifth month from its birth, one of ten; பிள்ளைத்தமிழ்ப்பருவம் பத்தனுள், குழந்தை பிறந்த ஐந்தாமாதத்தில் தன் தலையை நிமிர்த்து இங்குமங்கும் அசைத்தாடுவதைச் சிறப்பித்துக்கூறும் பகுதி. |
செங்குங்கிலியம் | ceṅ-kuṅkiliyam, n. <>செம்-மை+. Red resin; செந்நிறமான குங்கிலிய வகை. (w.) |
செங்குங்குமம் | ceṅ-kuṅkumam, n. <>id.+. Red sanders; See செஞ்சந்தனம். (பிங்.) . |
செங்குட்டுவன் | ceṅ-kuṭṭuvaṉ, n. A famous cēra king, brother of Iḷaṅkō-v-aṭikaḷ; இளங்கோவடிகட்குத் தமையனும் பெரும்புகழ் பெற்றவனுமான சேரவரசன். (பதிற்றுப்.5. பதி.) |
செங்குடை | ceṅ-kuṭai, n. <>செம்-மை+. [K. keṇgode.] Red umbrella; செந்நிறமுள்ள குடை. (பிங்.) |
செங்குணக்கு | ceṅ-kuṇakku, n. <>id.+. Due east; நேர்கிழக்கு. காவிரிப்பாவை செங்குணக்கொழுகி. (மணி.பதி.13). |
செங்குத்தாய்விழு - தல் | ceṅkuttāy-viḻu-, v. intr. <>செங்குத்து+ஆ-+. To fall headlong; தலைகுப்புறவிழுதல். Colloq. |
செங்குத்தான் | ceṅkuttāṉ, n. <>Malay. sumpitan. Malay blow-pipe, used for shooting pigeons; உருண்டையடிக்குங் குழல். Muham. |
செங்குத்து | ceṅ-kuttu, n. <>செம்-மை+. [M. ceṅkuttu.] Perpendicularity, steepness; steep side of a mountain, precipice; நிறுதிட்டம். Colloq. |
செங்குந்தம் 1 | ceṅ-kuntam, n. <>id.+ kunda. Tubercle on the cornea of the eye; கண்ணில்விழுங் குந்தநோய். (w.) |
செங்குந்தம் 2 | ceṅ-kuntam, n. <>id.+kunta. Spear red with blood; இரத்தத்தாற் சிவந்த ஈட்டி. (ஈட்டியெழுபது.) |
செங்குந்தர் | ceṅ-kuntar, n. <>செங்குந்தம் Persons of Kaikkōḷa caste, as the spearmen of ancient times; (செந்நிறமான ஈட்டியை யுடையவர்) கைக்கோளர். (திவா.) |
செங்குமிழ் | ceṅ-kumiḷ, n. <>செம்-மை+. small cashmere tree, l.sh., Gmelina asiatica; குமிழ்மரவகை. (சூடா.) |
செங்குமுதம் | ceṅ-kumutam, n. <>id.+ kumunda. 1. Red Indian water-lily. See செவ்வாம்பல். செய்யிற் கொய்யுஞ் செங்குமுதம் (கம்பரா. பூக்கொய். 33). . See செங்குந்தம். (சீவரட்.) |