Word |
English & Tamil Meaning |
---|---|
செங்கண்ணிக்கார் | ceṅ-kaṇṇi-k-kār, n. <>செங்கண்ணி+. A kind of paddy; கார்நெல்வகை. (A.) |
செங்கண்ணிப்பாரை | ceṅ-kaṇṇi-p-pārai, n. <>id.+. See செங்கண்ணி, 1. (w.) . |
செங்கண்மா 1 | ceṅkaṇ-mā, n. <>id.+. A town in south Arcot district, the capital of Naṉṉaṉ, an ancient Tamil chieftain; இப்போது தென்னா£க்காடு ஜில்லாவைச் சேர்ந்துள்ள நன்னனுடைய தலைநகரம். செங்கண்மாத்து நன்னன்சேய் நன்னனை (மலைபடு.பக்.503, உரையின் இறுதி). |
செங்கண்மா 2 | ceṅ-kaṇ-mā, n. <>செங்கண்+. Bear, as red-eyed beast; (சிவப்பான கண்ணுடைய விலங்கு) கரடி. (உரி.நி.) |
செங்கண்மாரி | ceṅ-kaṇ-māri, n. perh. id.+மாறு-. Jaundice; காமாலை. (J.) |
செங்கண்மால் | ceṅ-kaṇ-māl, n. <>id.+. Viṣṇu, as having red eyes; (சிவந்த கண்களுடையவன்) திருமால். திருமகள்போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான். (திவ்.பெரியாழ். 3, 8, 4). |
செங்கணான் | ceṅ-kaṇāṉ, n. <>id. See செங்கண்மால். சிறியதோர் முறுவலுந் தெரியச் செங்கணான் (கம்பரா. கும்பகர்ணன். 310). . A chola king. See கோச்செங்கணான். செங்கணான் கோச்சோழன் சேர்ந்த கோயில் (திவ். பெரியதி. 6, 6, 4). |
செங்கணிக்குறுவை | ceṅkaṇi-k-kuṟuvai, n. prob. செங்கண்ணி+. A kind of coarse paddy cultivated throughout the year, maturing in three or four months; மூன்று அல்லது நான்கு மாதத்திற் பயிராகும் குறுவை நெல்வகை. |
செங்கத்தரி | ceṅ-kattari, n. <>செம்-மை+. Orbicular-leaved caper, m.sh., Capparis pedunculosa; செடிவகை. (L.) |
செங்கத்தாரி | ceṅ-kattāri, n. <>id.+. False peacock's foot tree. See மயிலடிக்குருந்து. (w.) |
செங்கதாரி | ceṅ-katāri, n. <>id.+. See செங்கத்தாரி. (w.) . |
செங்கதிர் | ce-katir, n. <>id.+. [K. ceṅkadira.] The sun, as bright-rayed; (சிவந்த கிரண முடையவன்) சூரியன். (திவா.) |
செங்கதிர்நாள் | ceṅ-katir-nāḷ, n. <>செங்கதிர்+. The 12th nakṣatra, as having sun for its presiding deity; (சூரியனை அதிதேவதையாகக் கொண்டது) உத்திரநாள். (சூடா.) |
செங்கதிர்பிறந்தநாள் | ceṅ-katir-piṟantanāḷ, n. <>id.+. See செங்கதிநாள். (சூடா.) . |
செங்கதிரோன் | ceṅ-katirōṉ, n. <>id.+. [M. ceṅkatirōṉ.] See செங்கதிர். செங்கதிரோன் மகன் செருக்கி. (கம்பரா.வாலிவதை.55). . |
செங்கம் | ceṅkam, n. Common caper, See குழலாதொண்டை. (L.) . |
செங்கமட்டை | ceṅka-maṭṭai, n. <>செங்கல்+. Brick-bats; செங்கல்லின் துண்டு. Tinn. |
செங்கமலக்காமாலை | ceṅ-kamala-k-kāmā-lai, n. <>செம்-மை+. A kind of jaundice; காமாலை வகை. (சீவரட்.134.) |
செங்கமலநெல் | ceṅ-kamala-nel, n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
செங்கமலம் | ceṅ-kamalam, n. <>id.+. Red lotus; செந்தாமரை. செங்கனிவாய் செங்கமலம் (திவ்.திருவாய்.2, 5, 1). |
செங்கமலவல்லி | ceṅ-kamala-valli, n. <>id.+. Lakṣmī as the creeper dwelling on red lotus; (செந்தாமரைமலரில் வசிக்குங் கொடி) இலக்குமி. (அக.நி.) |
செங்கமலை | ceṅ-kamalai, n. <>id.+. See செங்கமலவல்லி. (w.) . |
செங்கயல் | ceṅ-kayal, n. <>id.+. A kind of fish; மீன்வகை. செங்கயல் பாய்ந்து பிறழ்வன கண்டாங்கு. (மணி.4, 22). |
செங்கரடு | ceṅ-karaṭu, n. <>id.+. Red hill; செம்மண்குன்று. (w.) |
செங்கரந்தை | ceṅ-karantai, n. <>id.+. Red basil; பூடுவகை. (சங்.அக.) |
செங்கரப்பன் | ceṅ-karappaṉ, n. <>id.+. [M. ceṅkarappaṉ.] Red gum, Strophulus intertinctus; எயிற்றுப்புண். (சங்.அக.) |
செங்கரப்பான் | ceṅ-karappāṉ, n. <>id.+. See செங்கரப்பன். (சங்.அக.) . |
செங்கரா | ceṅ-karā, n. <>id.+. 1. Sea-fish, yellowish-red, Synagris japonicus; மஞ்சள் கலந்த செந்நிறமுள்ள கடல்மீன்வகை. (சங்.அக.) 2. Red rock-cod, dark reddish-brown, Lutjanus sambra; |
செங்கரிப்பான் | ceṅ-karippāṉ, n. <>id.+. See கையாந்தகரை. (பாலவா.692.) . |
செங்கருங்காலி | ceṅ-karuṅkāli, n. <>id.+. Red catechu, m.tr., Acaria catechu-sundra; மரவகை. (குறிஞ்சிப்.78, உரை.) |
செங்கரும்பு | ceṅ-karumpu, n. ,id.+. Red sugar-cane; செந்நிறமுள்ள கரும்புவகை. (பதார்த்த.178.) |