Word |
English & Tamil Meaning |
---|---|
செக்குவாணிகர் | cekku-vāṉikar, n. <>செக்கு+. Caste of oilmongers; எண்ணெய்விற்கும் சாதியினர். (I. M. P. Cg. 564.) |
செக்கைப்பிடியாயுதம் | cekkai-p-piṭi-y-āyutam, n. Flagner's iron; சிற்பவேலைக்குரிய ஆயுத வகை. (C. E. M.) |
செகச்சாலம் | cekac-cālam, n <>jagaj-jāla. Magic, illusion; மாயவித்தை. (w.) |
செகச்சோதி | ceka-c-cōti, n. <>jagaj-jyōtis. World-illuminating light; See சகசோதி. . |
செகசாலம் | ceka-cālam, n. See செகச்சாலம். Loc. . |
செகசோதி | ceka-cōti, n. See செகச்சோதி. (சங்.அக.) . |
செகத்குரு | cekat-kuru, n. <>jagat+. 1. Universal guru; உலக குரு. 2. Title of the head of saṅkarācārya mutt; 3. Title of kammāḻar caste; |
செகதலம் | ceka-talam, n. <>id.+tala. The world; உலகம். (w.) |
செகநாதன் | ceka-nātaṉ, n. <>id.+. See சகந்நாதன். . |
செகம் | cekam, n. <>jagat. The world; உலகம். செகத்தை யெல்லாம். (தாயு.தந்தைதாய்.6). |
செகராசசேகரம் | ceka-rāca-cēkaram, n. A treatise on astrology; ஒர் சோதிடநூல். (சங்.அக.) |
செகரிகம் | cekarikam, n. <>šaikharika. Dogprick. See நாயுருவி. (மலை.) . |
செகற்குரு | cekaṟ-kuru, n. See செகத்குரு. செகற்குருவாங் கொல்லன் கவியை (தனிப்பா.i, 170, 22). . |
செகன்மோகினி | cekaṉ-mōkiṉi, n. <>jagat+mōhinī. Beautiful woman, as fascinating all the world; உலகனைத்தையும் மயக்கும் பேரழகி. (w.) |
செகனவாதம் | cekaṉa-vātam, n. <>jagha-na-vāta. A disease due to flatulence; ஊழற்சதை மிகுதியால் உண்டாம் நோய்வகை. (w.) |
செகில் 1 | cekil, n. perh. சே-. Upper par of the shoulders; தோளின் மேலிடம். நாடு செகிற் கொடு நாடொறும் வளர்ப்ப. (பொருந.138). |
செகில் 2 | cekil, n. <>செம்-மை. Redness; சிவப்பு. செகிலேற்றின் சுடருக் குளைந்து (திருவிருத்.69). |
செகிள் | cekiḷ, n. perh. செகு-. 1. Skin or rind of fruit; கனியின்தோல். (பிங்.) 2. Fish of scales; 3. Bran of ragi; |
செகு - த்தல் | ceku-, 11 v. tr. prob. jah. 1. To destroy, kill; கொல்லுதல். (பிங்.) 2. To conquer; |
செகு | ceku-, n. <>U.cak. Detached fields of a village; a patch of rent-free land or any separate farm; தொடர்ந்திராமல் துண்டுதுண்டாக இருக்கும் கிராமநிலம் அல்லது மானிய நிலம். (R. T.) |
செகுடன் | cekuṭaṉ, n. Corr. of செவிடன். See செவிடன். . |
செகுடு | cekuṭu, n. Corr. of செவிடு. See செவிடு. . |
செங்கட்டி | ceṇ-kaṭṭi, n. <>செம்-மை+. 1. Ochre; காவிக்கல். (யாழ். அக.) 2. Vermilion; 3. Brick-bat; |
செங்கடப்பாரை | ceṅ-kaṭappārai, n. <>id.+. Large sea-fish, silvery, Caranx carangus; கடலில் வாழும் வெள்ளிய பெருமீன்வகை. |
செங்கடம்பு | ceṅ-kaṭampu, n. <>id.+. Small Indian oak, m.tr., Barringtonia acutangula; கடம்பமரவகை. (திருமுரு.10, உரை.) |
செங்கடல் | ceṅ-kaṭal, n. <>id.+. The Red sea; அரேபியாதேசத்திற்கு மேல்பக்கமுள்ள கடல். Mod. |
செங்கடுக்காய் | ceṅ-kaṭukkāy, u. <>id.+. Red species of chebulic myrobalan; செந்நிறமுள்ள கடுக்காய்வகை. (பதார்த்த.972.) |
செங்கடுகு | ceṅ-kaṭuku, n. <>id.+. Indian mustard; s. sh., Brassica nigra; செடிவகை. (சங்.அக.) |
செங்கண் | ceṇ-kan n. <>id.+. [K. keṅkaṇ.] Bright glowing eyes; சிவந்து விளங்கும் விழி. செயிர்தீர் செங்கட் செல்லநிற் புகழ (பரிபா.4. 10). 2. Sea-fish, rosy, attaining 4 in. in length, cirrhitichthys aureus; |
செங்கண்ணன் | ceṅ-kaṇṇaṉ n. <>id.+. A kind of rat, as red-eyed; சிவந்த கண்களுடைய எலிவகை. (w.) |
செங்கண்ணி | cen-kaṇṇani, n. <>id.+. Young cockup, grey, Lates calcarifer, as having eyes remarkably reddish and transparent; சிவந்த கண்களையுடைய கடல்மீன்வகை. 2. A king of compā paddy; |