Word |
English & Tamil Meaning |
---|---|
செட்டிறை | ceṭṭiṟai, n. <>செட்டு+. See செட்டியிறை. (Insc.) . |
செட்டு | ceṭṭu, n. <>செட்டி cf. šrēṣṭhi-tā. [M. ceṭṭu.] 1. Trade, traffic; வியாபாரம். (யாழ். அக.) 2. Economy, thrift; 3. Miserliness, stinginess; |
செட்டுக்கட்டு | ceṭṭu-k-kaṭṭu, n. <>செட்டு+. Carefulness; thrift; சிக்கனம். Colloq. |
செட்டுக்காரன் | ceṭṭu-k-kāraṉ, n. <>id.+. 1. Thrifty person, one careful in expenditure; அளவாய்ச் செலவிடுவோன். Colloq. 2. Niggard, hard dealer; |
செட்டுப்பொட்டா - தல் | ceṭṭu-p-poṭṭā-, v. intr. <>id.+. To fail, as business; வியாபாரஞ் சிதைதல். அவன் வியாபாரம் செட்டுப்பொட்டாய் விட்டது. (w.) |
செட்டை 1 | ceṭṭai, n. <>T. ceṭṭupa. 1. Wing, feather, plumage; சிறகு. (யாழ். அக.) 2. Fin; 3. Shoulder blade; |
செட்டை 2 | ceṭṭai, n. <>சிட்டை. Short lace-border in cloth; See சிட்டை. (w.) . |
செடகன் | ceṭakaṉ, n. <>cēṭaka. (யாழ். அக.) 1. Servant, attendant; வேலைக்காரன். 2. Slave; |
செடல் | ceṭal, n. See செடில். (w.) . |
செடன் | ceṭaṉ, n. <>cēṭa. See செடகன். (யாழ்.அக.) . |
செடி | ceṭi, n. 1. [T. ceṭṭu, K. gida, M. cedi.] Shrub; பூடு 2. Shrubbery, bush; 3. Denseness; |
செடி - த்தல் | ceṭi-, 11 v. intr. <>செடி. To grow bushy, shoot out, as sprays, foliage; கொடிதழைகள் அடர்தல். (J.) |
செடி 1 | ceṭi, n. [T. ccdda.] 1. Sin; பாவம். செடியேறு தீமைகள் (திருவாச. 40, 2). 2. Vice, evil; 3. Troublc, distress; 4. [Tu. sedi.] Bad odour, stench; 5. A disease of children, believed to be caused by the approach of aborted women; 6. Meanness; 7. [T. cedu.] That which is decayed, faded, spoiled, as food. flower, etc.; |
செடி 2 | ceṭi, n. cf. dyuti. Light, splendour; ஒளி. (பிங்) செடிச்சிறு செம்பொற்கிண்ணம் (இரகு.தேனுவ.112). |
செடிக்கள்ளி | ceṭi-k-kaḷḷi, n. <>செடி+. Square spurge, dist. fr. koṭi-k-kaḷḷi. See சதுரக்கள்ளி. Loc. . |
செடிக்காடு | ceṭi-k-kāṭu, n. <>id.+. Low thicket, jungle; புதர். Colloq. |
செடிக்குடிபுக்கி | ceṭi-k-kuṭi-pukki, n. <>id.+. Bee; நாகரவண்டு. (மூ.அ.) |
செடிங்காடு | ceṭi-ṅ-kāṇu, n. <>id.+. See செடிக்காடு. (w.) . |
செடிச்சி | ceṭicci, n. <>செடி. [T. cedipa.] Bad woman, strumpet; இழிந்தவள். (J.) செடிச்சிகள் மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே (தேவா.991, 7). |
செடிசீ - த்தல் | ceṭi-cī-, v. intr. <>செடி+. To clear jungle; காடுவெட்டுதல். செடிசீத்துக் குடியேற்றின படைவீடுகளை. (ஈடு, 1, 7, 4). |
செடியன் | ceṭiyaṉ, n. <>செடி. Bad, vicious fellow; இழிந்தோன். (யாழ்.அக.) |
செடில் | ceṭil, n. <>T. sidi. [K. sidi.] A mechanism consisting of a standing post with a long sweep at its top, on one end of which a person, under a vow, is suspended by a hook fastened into the integuments of his back and raised high in the air, is swung around; பிரார்த்தனைக்காக முதுகின் தோலிடைக் கொக்கியைச் செலுத்தி அந்தக் கொக்கியை அதற்கென நாட்டபª¢¢பற்ற நீண்ட கழையில் மாட்டி ஒருவனைத் தூக்கியாட்டுங்கருவி. Sm. |
செடிலாட்டம் | ceṭil-āṭṭam, n. <>செடில்+. Hook-swinging in honour of Māriyammaṉ; மாரியம்மன் பிரார்த்தனைக்காகச் செடிலில் தொங்கியாடும் ஆட்டம். (w.) |
செடிலூசல் | ceṭil-ūcal, n. <>id.+. See செடிலாட்டம். (w.) . |
செண்டலரி | ceṇtalari, n. <>செண்டு+. Double-flowered oleander, Nerium adorum; அடுக்கலரி. |
செண்டா | ceṇṭā, n. <>U. jhaṇdā. Flag; கொடி. |
செண்டாடு - தல் | ceṇṭāṭu-, v. <>செண்டு+. [T. cendādu, K. seṇdādisu, Tu. ceṇdāduni.] intr. To play ball; to demolish, ruin; பந்தாடுதல். தக்கன்பெருவேள்வி செண்டாடுதல் புரிந்தான். (தேவா.908, 9). |