Word |
English & Tamil Meaning |
---|---|
செண்டாயுதன் | ceṇṭāyutaṉ, n. <>id.+. Aiyaṉār, as bearing the weapon ceṇṭu; (செண்டாயுதம் உடையோன்) ஐயனார். (பிங்.) |
செண்டு 1 | ceṇṭu, n. A kind of bouquet பூச்செண்டு. செண்டாடல் பாடி (திருவாச.9. 18). 2. [T. K. Tu. ceṇdu.] Ball used in games; 3. Horse-whip; 4. Place fpr training, exercising or running horses, etc; race-course; 5. Terrace for ball-game; 6. [M. ceṇdu,] Ball of thread 7. Ball of rags used in torch; |
செண்டு 2 | ceṇṭu, n. cf. caṇda. Sharpness; கூர்மை. (அக. நி.) |
செண்டுகோல் | ceṇṭu-kōl, n. <>செண்டு+. A kind of bat used in ball-game; பந்தடிக்குங் கோல். சுரிகையுந் தெறிவில்லுஞ் செண்டுகோலும் (திவ்.பெரியாழ்.3, 4, 3). |
செண்டுமல்லிகை | ceṇṭu--Mallikai, n. <>id.+. [M. ceṇdumallika, Tu. ceṇdumallige.] Arabian jasmine. See குடமல்லிகை. (w.) . |
செண்டுவெளி | ceṇṭu-veḷi, n. <>id.+. Open place adjacent to a palace, used for training and riding horses; அரண்மனையைச் சார்ந்துள்ள வையாளிவீதி. வெம்பரியூர் செண்டுவெளி பார்த்து (தெய்வீகவுலா.23). |
செண்டேறு - தல் | ceṇṭēṟu-, v. intr. <>id.+. To promenade; சாரிகை புறப்படுதல். அழகு செண்டேறக் கடவதாயிறே யிருப்பது (திவ்.திருநெடுந்.6, பக், 50). |
செண்டை 1 | ceṇṭai, n. [M. ceṇṭa, Tu. ceṇde.] A kind of large drum; ஒருவகைக் கொட்டுவாத்தியம். திமிலை செண்டை குறடு (கம்பரா.பிரமாத்.5). |
செண்டை 2 | ceṇṭai, n. <>T. tjaṇṭa. [K. jaṇṭi.] Pair, set; இரட்டை. Loc. |
செண்டைவரிசை | ceṇṭai-varicai, n. <>செண்டை+. (Mus.) Serial combination of the notes of the scale, sung as exercise; இசைச்சுரவரிசை. |
செண்ணம் | ceṇṇam, n. cf. சன்னம். 1. Fine, delicate work; நுண்டொழில். செண்ணவஞ்சிலம் பேறுதுக ளவித்து (சீவக. 1333). 2. Beautiful form; |
செண்ணிகைக்கோதை | ceṇṇikai-k-kōtai, n. prob. செண்ணு-. A kind of garland; பூமாலை வகை. செண்ணிகைக்கோதை கதுப்போ டியல (பரிபா.21, 56). |
செண்ணு - தல் | ceṇṇu-, 5 v. tr. To decorate, dress up; அலங்கரித்தல். (அகநா.59, உரை.) |
செண்பகம் 1 | ceṇpakam, n. <>campaka. Champak, 1. tr., Michelia champaca; வண்டுணாமலர். பெருஞ் செண்பகமும் பிண்டியும் பிரம்பும் பெருங்.உஞ்சைக்.50, 25). |
செண்பகம் 2 | ceṇpakam, n. Crow pheasant. See செம்போத்து. . |
செண்பகவருக்கை | ceṇpaka-varukkai, n. <>id.+. A species of jack tree; பலாவகை. (யாழ்.அக.) |
செத்தல் | cettal, n. <>சா-. 1. Dying; சாகை. (யாழ்.அக.) 2. Dry, over-ripe coconut on the tree; 3. Shrivelled palmyra or other fruit; dried chillies, plantain trees, vegetables or grass; 4. Emaciated person; lean, skinny animal; 5. Leanness; |
செத்தலி | cettali, n. <>செத்தல். Lanky or skinny woman; எலும்புந்தோலுமான பெண். (J.) |
செத்தவீடு | cetta-vīṭu, n. <>சா-+. Mourning house; இழவு வீடு. Colloq. |
செத்து - தல் | cettu-, 5 v. tr. cf. child. [T. cekky, K. kettu, M. cettuka.] To cut with adze, chisel, pare off; செதுக்குதல். மனத்தையுங் குழையச்செத்து மாண்பினன் (சீவக. 1578). |
செத்து 1 | cettu, n. <>செத்து-. Cutting, chiselling; செதுக்குகை. வாய்ச்சியினது வாயைச் சேர்த்தி ஒரு மயிர்க்கு ஒரு செத்தாகச் செத்தினாலும் (சீவக. 2525, உரை). |
செத்து 2 | cettu, pple. cf. cit. 1. Having thought; கருதி. அரவுநீ ருணல்செத்து (கலித். 45). 2. Having resembled; |
செத்துபனை | cettu-paṉai, n. <>செத்து-+. Toddy-yielding palmyra; கள்ளிறக்கும் பனை. Nā. |
செத்துபாட்டம் | cettu-pāṭṭam, n. <>id.+. Dues paid for tapping palmyra; பனையிற் கள்ளிறக்கக் கொடுக்கும் வரி. Nā. |
செத்துவிருப்பாநெல் | cettuviruppā-nel, n. A kind of paddy; நெல்வகை. (A.) |