Word |
English & Tamil Meaning |
---|---|
செத்தெழுத்து | cetteḻuttu, n. <>செத்து+. Consonant; ஒற்றெழுத்து. (w.) |
செத்தை | cettai, n. <>செற்றை. 1. [T. cetta, K. sette, M. ceṟṟa.] dry rubbish; dried vegetable matter, as grass, leaves, etc.; குப்பை. செத்தையேன் சிதம்பநாயேன் (தேவா.996, 1). 2. Hay, straw; 3. Hedge or fence of palm-leaves; 4. Putrefied flesh; 5. Sea-fish, silvery-grey, pimelepterus cinerascens; |
செத்தைகட்டு - தல் | cettai-kaṭṭu-, v. intr. <>செத்தை+. To cover fruit with olas, screening it from coveting or evil eyes; பழத்துக்கு ஓலை மறைவு கட்டுதல். (J.) |
செத்தைகுத்து - தல் | cettai-kuttu-, v. intr. <>id.+. To root out parasitic plants on walls; மதிலில் முளைக்குஞ் செடிகளைக் களைதல். நித்தியப்படி திருமதில் கோபுரங்களிலே செத்தைகுத்திவைக்கிறதும் (கோயிலொ. 63). |
செத்தைமேய் - தல் | cettai-mēy-, v. tr. <>id.+ வேய்-. To cover roof with dried leaves, etc.; கூரையைக் காய்ந்த தழை முதலியவற்றால் மூடுதல். (w.) |
செத்தைவேர் | cettai-vēr, n. <>id.+. A kind of weed growing in paddy-fields; வயலில் முளைக்குங் களைவகை. Nā. |
செத்தோர்ப்புணர் - த்தல் | cettōr-p-puṇar-, v. intr. <>id.+. To restore to life, resuscitate; இறந்தோரை உயிர்பெற்றெழச்செய்தல். செத்தோர்ப் புணர்க்கும் விச்சையொடு (பெருங்.மகத.4. 91). |
செதில் | cetil, n. <>செது-. 1. Fish-scale; மீனின் மேலிடமுள்ள பிராலுறுப்பு. பலகடலுஞ் செதிலடங்க . . . மீன்வடி வெடுத்தாய் (அழகர்கலம்.) Outer bark of trees; |
செதிள் | cetil, n. <>id. [M. cedal.] 1. See செதில், . 2. Dust; 3. See செதில், 2. (தொல். பொ. 643.) 4. Skin; |
செதிளெடு - த்தல் | cetiḷ-eṭu-, v. tr. <>செதிள்+. 1. To skin off; தோலையுரித்தல். அங்கேபோனால் உன் காலைச் செதிளெடுத்து விடுவேன். 2. To remove utterly; |
செது - த்தல் | cetu-, 11 v. intr. 1. To get blunt; to lose lustre; ஓளி முதலியன மழுங்குதல். செதுக்கணார (புறநா. 261, 9). 2. To shrink; 3. To be weak; |
செதுக்கடவேலை | cetukkaṭa-vēlai, n. <>செதுக்கு-+. Work of inlaying gem in gold jewels by setting gold leaf on it and chiselling; ஆபரணங்களில் மணிபதிக்குந் தொழில். |
செதுக்கணார் - தல் | cetu-k-kaṇ-ār-, v. intr. <>செது-+கண்+ஆர்-. To be excessive; கைம் மிஞ்சுதல். (புறநா.261, 9, உரை.) |
செதுக்கி | cetukki, n. <>செதுக்கு-. Tool for cutting grass. See செதுக்குப்பாரை. (w.) . |
செதுக்கு 1 - தல் | cetukku-, 5 v. [M. cetukku.] tr. 1. To cut off a surface, as in cutting grass; to pare, shave off; புல்முதலியன செதுக்குதல். 2. To plane, hew with an adze, chisel; |
செதுக்கு 2 | cetukku, n. <>செதுக்கு-. 1. [T. cekku.] Paring, cutting, chiselling; செதுக்குகை. 2. ([M. cetukku.] That which is faded, dried, as flowers; 3. Mud, mire; 4. Goblin; 5. Monkey; |
செதுக்குப்பாரை | cetukku-p-pārai, n. <>id.+. Tool for cutting grass, soil, etc.; புல் மண் முதலியன செதுக்குங் கருவி. (w.) |
செதுக்குவேலை | cetukku-vēlai, n. <>id.+. See செதுக்கடவேலை. Colloq. . |
செதுக்குளி | cetukkuḷi, n. <>id.+உளி. (w.) 1. Carpenter's chisel; தச்சனுளி. 2. Goldsmith's chisel, used in enchasing; |
செதுக்கை | cetukkai, n. prob. செது-. Scar, cicatrice; தழும்பு. (பிங்.) |
செதுகு 1 - தல் | cetuku-, 5 v. intr. prob. id. To err, as in aim; to go wrong; தவறுதல். செதுகாப்படை தொடுப்பேன் (கம்பரா. நிகும்ப. 130). |
செதுகு 2 | cetuku, n. <>செதுகு-. 1. Rubbish, chaff; கூளம். குலால னானவன் மண்ணும் நீரும் செதுகுங் கூட்டி (ஈடு, 6, 9, 1). 2. Dried leaves; 3. Evil; |
செதுகை | cetukai, n. <>id. Evil; தீமை. செதுகைப் பெருந்தானவர் (கம்பரா.நாகபா. 22). |
செதும்பல் | cetumpal, n. See செதும்பு, 1. செதும்பற்றாமரைச் செவ்விதழ் போல பெருங்.உஞ்சைக்.40, 323). . |
செதும்பு 1 - தல் | cetumpu-, 5 v. intr. To become damp and moist, as from excessive sprinkling of water; to be soaked; ஈரம் உறைத்தல். செதும்ப நீர்தெளி. Loc. |