Word |
English & Tamil Meaning |
---|---|
செதும்பு 2 | cetumpu, n. <>செதும்பு-. 1. Mud, mire; சேறு. செருத்தற் றீம்பால் செதும்பு படப் பிலிற்றி (பெருங்.உஞ்சைக்.49, 112). 2. Thin current of water, as of rivers in summer; |
செதுமகவு | cetu-makavu, n. prob. செது-+. Still-born child; சாபிள்ளை. செதுமகப் பலவும் பெற்று (சீவக.1124). |
செதுமொழி | cetu-moḻi, n. <>id.+. Evil words; பொல்லாச்சொல். செதுமொழி சீத்த செவி (கலித்.68). |
செதுவல் | cetuval, n. <>id. Withering, drying; பட்டுப்போகை. செதுவன் மரத்திற் சேக்கை யாதலின் (பெருங்.மகத.15, 20). |
செந்தட்டி | cen-taṭṭu, n. Climbing nettle. See செந்தொட்டி.1. (சங்.அக.) . |
செந்தட்டு | cen-taṭṭu, n. <>செம்-மை+. (J.) 1. Parrying; தன்மேல் விழும் அடியைத்தடுக்கை. 2. Scheme; knavish contrivance to secure an object, as evading a creditor or taxgatherer; |
செந்தண்டீன்(னு) - தல் | centaṇṭīṉ-, v. intr. <>செந்தண்டு+. To put forth blighted ears; நோயுற்ற கதிரை ஈனுதல். (J.) |
செந்தண்டு | cen-taṇṭu, n. <>செம்-மை+. 1. See செந்தண்டுக்கீரை. . 2. Red spikes of blighted paddy; 3. Coral; |
செந்தண்டுக்கீரை | cen-taṇṭu-k-kīrai, n. <>id.+. Red spinach, Amaranthus atropurpureus; செந்நிறமுள்ள கீரைவகை. (w.) |
செந்தணக்கு | cen-taṇakku, n. <>id.+, (L.) 1. Whirling nut. See தணக்கு. . 2. False tragacanth, 1. tr., sterculia urens; 3. White catamaran tree. See வெண்டாளி. |
செந்தணல் | cen-taṇal, n. <>id.+. [K. kendaṇalu.] Glowing red-hot cinder; கனிந்து கொண்டிருக்கும் அழல். Colloq. |
செந்தணற்கொடி | cen-taṇaṟ-koṭi, n. <>id.+. See செந்தழற்கொடி (w.) . |
செந்தம் | centam, n. Style plant, Launea pinnatifida; எழுத்தாணி யென்னும் பூடு. (மலை.) |
செந்தமிழ் | cen-tamiḻ, n. <>செம்-மை+. [M. centamiḻ.] Refined, standard Tamil, free from all corruptive elements, opp. to koṭu-n-tamiḻ; கலப்பற்ற தூய தமிழ். செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல்.சொல்.398). |
செந்தமிழ்நாடு | cen-tamiḻ-nāṭu, n. <>id.+. The country of the standard Tamil, said to be bounded on the south by the Vaikai-yāṟu, on the north by the Maruta-yāṟu, on the east by Maruvūr, and on the west by Karuvūr; வைகையாற்றின் வடக்கும் மருதயாற்றின் தெற்கும் மருவூரின் மேற்கும் கருவூரின் கிழக்கும் ஆகிய செந்தமிழ் வழங்கும் நிலம். (தொல் சொல்.400, உரை.) |
செந்தமிழ்நிலம் | cen-tamiḻ-nilam, n. <>id.+. See செந்தமிழ்நாடு. செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி (தொல்.சொல்.398). . |
செந்தமிழிலக்கணம் | cen-tamiḻ-ilakkaṇam, n. <>id.+. A grammar of classical Tamil by Beschi; வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட செந்தமிழ்மொழியின் இலக்கணம். |
செந்தயிர் | cen-tayir, n. <>id. Reddish curds; செந்நிறமுள்ள் தயிர்க்கட்டி. வெண்டயிருஞ செந்தயிரும் விராய் (கலித்.506). |
செந்தரா | cen-tarā, n. <>id.+. A kind of bitter climber; கசப்புள்ள மருந்துக்கொடிவகை. (பதார்த்த.581.) |
செந்தருப்பை | cen-taruppai, n. <>id.+. A kind of poisonous grass; நச்சுப்புல்வகை. (மலை.) |
செந்தரை | cen-tarai, n. See கரைவிளங்கு. (L.) . |
செந்தலி - த்தல் | cen-tali-, 11 v. intr. <>செம்-மை+தளிர்-. To be rich, fertile, as soil; செழிப்பாதல். (திவ்.திருவாய்.6, 8, 4, பன்னீ.) |
செந்தலிப்பு | centalippu, n. <>செந்தலி-. Fertility, prosperity; செழிப்பு. அவனுடைய செந்தலிப்பேயிறே அத்தேசத்திற்குஞ் செந்தலிப்பு. (திவ்.திருநெடுந்.12, 105, வ்யா.). |
செந்தலை | cen-talai, n. The fraction 1/8, a mercantile slang; அரைக்கால். கருந்தலை செந்தலை தங்கான் றிரிக்கால் (தனிப்பா. i, 87, 171). |
செந்தலைப்புலி | cen-talai-p-puli, n. <>செம்-மை+. Police constable, as a tiger with red turban, used in contempt; (சிவந்த தலைப்பாகையுடைய புலி) போல¦சுச் சேவகன். Mod. |
செந்தலைமுத்தி | cen-talai-mutti, n. <>id.+. A kind of rat; எலிவகை. (w.) |
செந்தலைவிரியன் | cen-talai-viriyaṉ, n. <>id.+. Russell's viper, Vipera russellii; விஷப்பாம்புவகை. (யாழ்.அக.) |