Word |
English & Tamil Meaning |
---|---|
தடவு 3 | taṭavu, n. <>தடை. Prison; சிறைச்சாலை. Nā. |
தடவுத்தாழி | taṭavu-t-tāḻi, n. <>தடவு2 +. Big jar; பெருஞ்சாடி. தடவுத்தாழி நெட்டுறியின் (அழகர்.பிள்.). |
தடவுநிலை | taṭacu-nilai, n. <>id. +. Indra's paradise; சுவர்க்கம். கடவுள் கண்ணிய தடவுநிலைக் கோட்டம் (ஞானா. 17, 44). |
தடவுபருத்தி | taṭavu-parutti, n. <>தடவு- +. Scarcity of cotton; பருத்தியினருமை. Loc. |
தடவுவாய் | taṭavu-vāy, n. <>தட+. Mountain pool; மலைச்சுனை. தடவுவாய்க் கலித்த மாயிதழ்க் குவளை (புறநா.105). |
தடவை | taṭavai, n. <>T. tadava. 1. Time, turn ; முறை. 2. Instalment; |
தடறு | taṭaṟu, n. prob. தட. 1. Sheath, scabbard, case; ஆயுதவுறை. தடற்றிடங் கொள் வாள் (களவழி. 18). 2. A kind of drum; |
தடஸ்தம் 1 | taṭastam, n. See தடத்தம். . |
தடஸ்தம் 2 | taṭastam, n. <>தடை. Hindrance, obstacle; objection; தடை. Nā. |
தடஸ்தர் | taṭastar, n. <>taṭa-stha. Neutral persons; umpires; மத்தியஸ்தர்கள். Nā. |
தடா | taṭā, n. <>தட. 1. Pot; பானை. (திவ.) 2. Big pot; 3. A kind of earthen grate; 4. Largeness, greatness; |
தடாககருமம் | taṭāka-karumam, n. <>taṭāka +. cf. Going to stools; குளத்துக்குப்போதல். மலங்கழிக்கை. (பஞ்சதந். அசம்பிரேஷிய.) |
தடாகப்பிரதிஷ்டை | taṭāka-p-piratiṣṭai, n. <>id. +. Sinking or digging tanks, one of capta-cantāṉam , q.v.; சப்தசந்தானத்துள் ஒன்றாகிய குளம்வெட்டுகை. |
தடாகம் | taṭākam, n. <>taṭāka. Pond, pool, tank; குளம். (பிங்.) சங்கொலியுண்டாக்குந் தடாகமே (பணவிடு.268). |
தடாகயோகம் | taṭāka-yōkam, n. <>id. +. (Astrol.) Inauspicious yōga when the 7 planets appear promiscuously either in the second, fifth and eighth houses or in the third, sixth and ninth houses from the ascendant, indicative of miserliness; சன்மலக்கினத்திலிருந்து 2, 5, 8 ஆம் வீடுகளிலேனும் 3, 6, 9 ஆம் வீடுகளிலேனும் ஏழுகிரகங்கள் கூடியிருந்து பெருஞ்செல்வமுள்ளவனாயினும் உலோபியாவானென்பதைக் குறிக்கும் அவயோகம். (சாதகசிந்.2036.) |
தடாகவாதாரம் | taṭāka-v-ātāram, n. <>id. +. Land irrigated by a tank or lake; ஏரிப்பாய்ச்சலுள்ள பூமி. |
தடாதகை | taṭā-takai, n. <>தடு- + ஆ neg. +. Mīṉāṭci, the Goddess of Madura, as endowed with irresistible valour; [தடுத்தற்கரிய தகையுடையாள்] மீனாட்சிதேவி. (திருவாலவா.3, 9.) |
தடாதடி | taṭātaṭi, n. Disturbance, confusion; குழப்பம். (யாழ். அக.) |
தடாதடிக்காரன் | taṭātaṭi-k-kāraṉ, n. <>தடாதடி+. One who uses unlawful force; நியாயமின்றிப் பலவந்தஞ் செய்வோன். (W.) |
தடாதிவங்குசம் | taṭātivaṅkucam, n. A mode of bird's flight; பறவைக்கதிகளுள் ஒன்று. (காசிக. திரிலோ. 6.) |
தடாபுடாவெனல் | taṭā-puṭā-v-eṉal, n. Onom. expr. of (a) blustering, scolding or abusing; கோபித்துப் பேசுங்குறிப்பு: (b) tumbling down; (c) pompous manner ; |
தடாம் | taṭām, n. <>தட. Curve, bend; வளைவு. தடாம் பிறைமருப்பு. (சீவக. 806). |
தடாரம் | taṭāram, n. 1. (Mus.) A time measure of double beating; ஈரொத்துத்தாளம். (சிலப். 6, 35, உரை.) 2. Measles; |
தடாரி 1 - த்தல் | taṭāri-, 11 v. tr. [K. taṭāyisu.] 1. To bore, pierce through; ஊடுருவுதல்.தடாரிக்கு தந்தம்பு (தனிப்பா. 380, 26). 2. [T.daṭāyicu.] To give a good scolding; |
தடாரி 2 | taṭāri, n. 1. Drum shaped like an hour-glass; உடுக்கை. கைக்கச டிருந்தவென் கண்ணகன் றடாரி (பொருந. 70). 2. A drum or tabor of the agricultural tract; 3. A kind of drum; 4. Drum; |
தடாவு - தல் | taṭāvu-, 5 v. intr. <>தட. To bend, curve; வளைதல். தடாவிய வம்பும் (திவ். இயற். திருவிருத். 6). |
தடி 1 - தல் | taṭi-, 4 v. tr. 1. To hew down, cut down, cut off; வெட்டுதல். வாளோச்சிமிகத் தடிந்தாள் (பு. வெ. 5, 8). 2. To kill, destroy; 3. To reduce, diminish; |