Word |
English & Tamil Meaning |
---|---|
அங்கிட்டோமம் | aṅkiṭṭōmam n. <> agniṣṭōma. Variety of the jyōtiṣṭōma See அக்கினிட்டோமம். அங்கிட்டோமங் கோமேத மிராச சூயம் (உத்தரரா. திக்கு. 117). |
அங்கிடுதத்தி | aṅkiṭu-tatti n. <>அங்கு+ இடு.+. One of vagrant habits; நிலைகெட்டவன். (யாழ். அக.) |
அங்கிடுதொடுப்பி | aṅkiṭu-toṭuppi n. <> id.+.[T.aṅgudu-tudipi.] Slanderer, talebearer; குறளை கூறுவோன். அங்கிடுதொடுப்பிக்கு அங்கிரண்டு குட்டு இங்கிரண்டு சொட்டு. |
அங்கித்தம்பனை | aṅki-t-tampaṉai n. <> agni.+. Art of suspending the action of fire by magic; அக்கினித்தம்பனம். (திருவாலவா, 38, 23.) |
அங்கிதம் | aṅkitam n. <>aṅkita. 1. Sign; அடையாளம். அங்கிதம் பிறவுமே லறைய நின்றவே (கந்தபு. இந்திரபுரி. 37). 2. Scar; |
அங்கிதிசை | aṅki-ticai n. <>agni+. The SE. quarter, as under the guardianship of Agni; தென்கிழக்கு. (திவா.) |
அங்கிநாள் | aṅki-nāḷ n. <>id.+. 1 The third nakṣatra. See கார்த்திகை. (பிங்.) 2. The thirteenth nakṣatra. See அத்தம். |
அங்கியங்கடவுள் | aṅki-y-aṅ-kaṭavuḷ n. <>id.+. Agni; அக்கினிதேவன். அங்கியங் கடவுள் அறிகரி யாக (தொல். பொ.142, உரை.) |
அங்கியற்பொருள் | aṅkiyaṟ-poruḷ n. <>aṅga+ இயல்+. Natural products of each of the five tracts of land; ஐந்துநிலக் கருப்பொருள். (வீரசோ. பொருட் 11, உரை). |
அங்கியாதானம் | aṅki-y-ātāṉam n. <>agni+ādhāna. Initiatory ceremony of placing the sacred fire on the alter and consecrating it; யாகத்திற்காக அக்கினியைச் சேர்க்குங் கிரியை. (திருக்காளத். பு. 29, 33.) |
அங்கிரசு | aṅkiracu n. <>Aṅgiras. Name of a sage; ஒரு முனிவர். (மச்சபு. இருடிமான். 57.) |
அங்கிரம் | aṅkiram n. <>id. A secondary Purāṇa, one of 18 upa-purāṇam q.v.; ஓர் உப புராணம். |
அங்கிரமாதிபாஷாணம் | aṅkiramāti-pāṣāṇam n. A mineral poison; பிறவிப்பாஷாண வகை. |
அங்கிரன் | aṅkiraṉ n. See அங்கிரசு. (W.) |
அங்கிரா | aṅkirā n. See அங்கிரசு. (காஞ்சிப்பு. சத்ததா.2.) |
அங்கிரி 1 | aṅkiri n. <>aṅghri. Foot; பாதம். (பிங்.) |
அங்கிரி 2 | aṅkiri n. <> aṅghri-pa. Tree, as drinking water through its roots; மரம், (பிங்.) |
அங்கிலேயர் | aṅkilēyar n. <>E. Angles. The English. . |
அங்கீகரணம் | aṅkīkaraṇam n. <>aṅgīkarana. Assenting, accepting; உடன்படுகை. |
அங்கீகரி - த்தல் | aṅkīkari- 11 v.tr. <>aṅgī-kar. To accept, receive, approve; ஏற்றுக்கொள்ளுதல். சித்தம்வைத் திடவுமங் கீகரித் திடுமகா தேவதேவா (அறப். சத. 100). |
அங்கீகாரம் | aṅkīkāram n. aṅgī-kāra. 1. Acceptance, approval; உடன்பாடு. 2. Hospitality; |
அங்கீகிருதம் | aṅkīkirutam n. <> aṅgī-krta. That which is agreed to, accepted; ஏற்றுக்கொள்ளப்பட்டது. (சங். அக.) |
அங்கு | aṅku adv. <>அ. [M. annu.] There, yonder; அவ்விடம் |
அங்குசதாரி | aṅkucatāri n. <>aṅgusadhārin. 1. Gaṇēša; விநாயகன் (W.) 2. Yellow arsenic, arsenic sulphide. See அரிதாரம். |
அங்குசபாசதரன் | aṅkuca-pāca-taraṉ n. <>aṅguša+. Gaṇēša, as having a goad and a noose in his hands; விநாயகன். (சூடா.) |
அங்குசபாசமேந்தி | aṅkuca-pācam-ēnti n. See அங்குசபாசதரன். (W.) |
அங்குசபாணி | aṅkuca-pāṇi n. <>id.+. 1. Gaṇēša, as having a goad in his hand; விநாயகன். (W.) 2. Kāḷī; |
அங்குசபாதி | aṅkuca-pāti n. <>hamsapādikā. Species of Desmodium. See சிறுபுள்ளடி (மலை.) |
அங்குசபாஷாணம் | aṅkuca-pāṣāṇam n. A mineral poison, சரகாண்டபாஷாணம். (மு.அ.) |
அங்குசபிசாரி | aṅkuca-picāri n. Horse-gram; கொள். (W.) |
அங்குசம் 1 | aṅkucam n. cf. amsumatphala. Plantain. See வாழை. (மலை) |
அங்குசம் 2 | aṅkucam n. <>aṅkuša. 1. Hooked instrument, especially elephant goad; யானைத்தோட்டி. (கந்தபு. விடைபெ. 37.) |
அங்குசவி | aṅkucavi n. Horse gram. See கொள். (W.) |
அங்குசோலி | aṅkucōli n. Species of grass. See அறுகு. (மூ.அ.) |
அங்குட்டம் | aṅkuṭṭam n. <>aṅgustha. 1. Thumb, great toe; பெருவிரல். தாளங்குட்டத்தைத் திகழிரதத்தி னூன்றி (வரத. பாகவத. பற்கு.20). 2. Measure of a thumb; |