Word |
English & Tamil Meaning |
---|---|
அங்கம் 2 | aṅkam n. <>aṅka. 1. Mark, sign; அடையாளம். 2. Symmetry, beauty, as of the body; 3. Place; 4. Act of a drama; 5. Drama which has only virtue for its theme; 6. Species of drama with commonplace characters, the pathetic being the prevailing sentiment, one of ten rūpakam, q.v.; 7. Battle, fight; |
அங்கம் 3 | aṅkam n. cf. paryaṅka. Bed, couch; கட்டில். அணையங்க மீதே (திருப்பு. 125). |
அங்கம்மா | aṅkammā n. [T.aṅkamma.] Name of a form of Kāḷī. See அங்காளம்மை. . |
அங்கமணி | aṅka-maṇi n. <>aṅga+. [K.aṅgamaṇi.] Dowry which a married girl takes with her; சீதனம். இதுக்கு அங்கமணி செய்யமாவதே (திவ்.திருமாலை,37,வ்யா.121). |
அங்கமாலை | aṅka-mālai n. <>aṅga+. 1. Poem describing the members of the body, in veṇpā or veḷi-viruttam metre; பிரபந்த வகை. (இலக்.வி. 835.) 2. Necklace of bones worn by Siva; |
அங்கயற்கண்ணி | aṅ-kayaṟ-kaṇṇi n. <>அம்+. Mīnākṣī, goddess of the Madura temple, as fish-eyed; மீனாட்சி. அங்கயற்கண்ணி தன்னொடு மமர்ந்த வாலவாய் (தேவா.868,1). |
அங்கயோகம் | aṅka-yōkam n. <>aṅga+. (Astrol.) Situation of the planet Jupiter in one of four positions; உதயம்,கேந்திரம், மூலத்திரிகோணம், or உச்சம்; யோகவகை. (சங்.அக.) |
அங்கர் | aṅkar n. <>aṅga. Inhabitants of Aṅga-dēša, the country about Benares; அங்கதேசத்தார். அங்கர் மாகத ராரியர் (திருவிளை.திருமண. 74). |
அங்கர்கோமான் | aṅkar-kōmāṉ n. <>id.+. Karṇa, as king of Aṅga-dēša; கன்னன். (சூடா.) |
அங்கர்யாரி | aṅkar-yāri n. <>E.anchor+cf.T.dāra. (Naut.) Cattackle for drawing up an anchor; நங்கூரந் தூக்கியெடுக்கும் கப்பிக்கயிறு. |
அங்கரக்கா | aṅkarakkā n. <>U.aṅgarkhā <>aṅga-rakṣā. Long coat worn by men, tunic; நீண்ட சட்டை. |
அங்கரங்கவைபவம் | aṅkaraṅka-vaipavam n. <>T.aṅgaraṅga+. All kinds of enjoyment; சகல அனுபோகங்களும். ஸ்வாமிக்கு அங்கரங்க வைபவத்துக்கு விடுவித்த கிராமம் (S.I.I. i, 71). |
அங்கரங்கவைபோகம் | aṅkaraṅka-vaipōkam n. See அங்கரங்க வைபவம். Colloq. . |
அங்கரட்சிணி | aṅka-raṭciṇi n. <>aṅga+rakṣiṇī, Coat of mail; போர்க்கவசம். (W.) |
அங்கராகம் | aṅka-rākam n. <>aṅga+rāga. Cosmetic for the body, scented cosmetic; உடம்பிற் பூசப்படும் பரிமளதிரவியம். அங்கராக மணியார மார்ப (பாரத.மணி. 109). |
அங்கலாய் - த்தல் | aṅkalāy- prob. அகம்+கலாய்-. 11 v.intr. [T.aṅgalārcu, M. aṅkalāykka.] 1. To lament, grieve, sorrow; துக்கித்தல். அங்கலாய்ப்பாளே (இராமநா.ஆரணி. 26). 2. To be envious, jealous; To covet, desire greatly; |
அங்கலாய்ப்பு | aṅkalāyppu n. <>அங்கலாய்-. 1. Disquiet, mental worry; கலக்கம். Loc. 2. Becoming disgusted; |
அங்கவடி | aṅkavaṭi n. prob. <>aṅga+padī. [K.aṅgavadi.] Stirrup; குதிரை யங்கவடி. (பிங்.) |
அங்கவஸ்திரம் | aṅka-vastiram n. <>aṅga+. Upper cloth; மேலாடை. Colloq. |
அங்கவீனன் | aṅka-v-īṉaṉ n. <>id.+. hīna. One who has bodily defects; உறுப்புக்குறைந்தவன். (W.) |
அங்கன் | aṅkaṉ n. <>aṅga. Son, as born from the father's body; புதல்வன். (திவ்.இயற். 3,65.) |
அங்கனம் | aṅkaṉam n. Chebulic myrobalan. See கடுக்காய். (மலை.) |
அங்கனி | aṅkaṉi n.cf. aṅganā. See கற்றாழை. (மலை.) |
அங்கனை | aṅkaṉai n. <>aṅganā. Woman; பெண். (திவா.) |