Word |
English & Tamil Meaning |
---|---|
அகுவைக்கட்டி | akuvai-k-kaṭṭi n. Veneral tumor in the groin, bubo; அரை யாப்பு. (சங்.அக.) |
அகை 1 - தல் | akai- 4 v.intr. 1. To flourish; செழித்தல். கயமகைய வயனிறைக்கும் (மதுரைக்.92). 2. To sprout; 3. To burn; 4. To suffer; 5. To delay; 6. To be crumpled, broken; |
அகை 2 - த்தல் | akai- 11 v.intr. caus. of அகை-. 1. To sprout; கிளைத்தல். குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த (புறநா. 159). 2. To rise; 3. To proceed at intervals; 1. To trouble, oppress; 2. To drive, cause to go, send forth; 3. To beat; 4. To break; 5. To cut into pieces; 6. To raise; |
அகை 3 | akai n. <>அகை2-. Component part; கூறுபாடு. அகையார்ந் திலங்கும் (சீவக. 2694). |
அகைப்பு | akaippu n. <>id. 1. Rising, elevation; எழுச்சி. 2. Result of effort, effect of will; 3. Esteem; 4. Moving with intervals of stopping; |
அகைப்புவண்ணம் | akaippu-vaṇṇam n. <>id.+. (Pros.) Rhythm produced by varying groups of syllables, as short after long; ஒருவழி நெடிலும் ஒருவழிக்குறிலும் பயின்று விட்டுவிட்டுச் செல்லுஞ் சந்தம். (தொல்.பொ.541.) |
அகோ | akō int. <>ahō. An exclamation of wonder, grief, contempt; ஆச்சரியம், துக்கம், இகழ்ச்சி என்றிவற்றை யுணர்த்தும் குறிப்புமொழி. மண்டலத்தின் மிசையொருவன் செய்த வித்தை யகோவெனவும் (தாயு.மண்டல.1). |
அகோதாரை | akōtārai n. prob. ahōdhārā. Pouring in torrents, as rain; மிகப்பொழிகை. (W.) |
அகோபிலம் | akōpilam n. <>Ahō-bila. Name of a Vaiṣṇava shrine in Karnūl; சிங்கவேள் குன்றம் என்னுந் திருப்பதி. சொலகோபில நரசிங்கம் (திருச்செந்.பு. 18,43) |
அகோரசிவாசாரியர் | akōra-civācāriyar n. <>a-ghōra+ Name of a spiritual preceptor, author of Saiva book of ritual; சைவபத்ததி இயற்றியவருள் ஒருவர். |
அகோரம் | akōram n. <>a-ghōra. 1. Fierceness, formidableness; உக்கிரம். (திருநெல்.பு.சுவேத. 88) 2. Face of Siva which is turned southward, one of five civaṉ-mukam, q.v.; 3. A Saiva mantra; |
அகோரன் | akōraṉ n. <>id. Siva, as formidable; சிவன். (சூத.எக்கி.பூ. 33,2.) |
அகோராத்திரம் | akōrāttiram n. <>ahōrātra. Day and night; இரவும் பகலும். |
அகோரி | akōri n. Species of Hugonia. See மோதிரக்கண்ணி. (L.) |
அகௌரவம் | a-kauravam n. <>a-gaurava. Degradation, dishonour; அவமரியாதை. அங்கேபோய் அவன் அகௌரவமடைந்தான். |
அங்கக்களரி | aṅka-k-kaḷari n. <>aṅka+. Honours to liberal donors, in a temple; கோயிலிற் றருமஞ் செய்தோர்க்குச் செய்யும் மரியாதை. Loc. |
அங்கக்காரன் | aṅka-k-kāraṉ n. <>aṅga+. 1. Dandy, fop; அழகுபடுத்திக் கொள்வோன். (சம்.அக.) 2. Masquerader; |
அங்கக்கிரியை | aṅka-k-kiriyai n. <>id.+. (Nāṭya.) Gesticulation in dancing; மெய்யாற் செய்யுங் கூத்துத்தொழில். (சிலப். 3,12,உரை.) |
அங்ககணிதம் | aṅka-kaṇitam n. <>aṅka+. Arithmetic; எண்கணக்கு. |
அங்ககாரம் | aṅka-kāram n. <>aṅga+. A mode of dancing; நாட்டிய வகை. (திருவிளை.கான்மா.9.) |
அங்ககீனம் | aṅkakīṉam n. <>id.+. hīna. Bodily defect, deformity; உறுப்புக்குறைவு. |
அங்கசங்கம் | aṅka-caṅkam n. redupl. of aṅga. Ostentation, foppery; பகட்டு. அவன் அங்கசங்கமாயுள்ளவன். (Loc.) |
அங்கசன் | aṅkacaṉ n. <>aṅga-ja. Kāma, as born in the mind; மன்மதன். (பிங்.) |
அங்கசாதனம் | aṅka-aātaṉam n. <>aṅka+ Sign, mark; அடையாளம். Colloq. (W.) |
அங்கசாதனம்பிடி - த்தல் | aṅka-cātaṉampiṭi-. v. intr. <>id.+ To find out anything by signs or circumstances, fixing suspicion upon one; துப்புக் கண்டுபிடித்தல். (w.) |
அங்கசாலைக்காரன் | aṅka-cālaikkāraṉ n. <>aṅga+. Village servant who, by order of the headman, assembles the villagers and procures things wanted; கிராமப்பணி செய்வோன். (R.) |