Word |
English & Tamil Meaning |
---|---|
அகாரணம் | a-kāraṇam n. <>a-kārana. Absence of cause; காரணமின்மை. அகாரணத்தெதிர்த்தீர் (காஞ்சிப்பு.தக்கீச.12). |
அகாரணன் | a-kāraṇaṉ n. <>id. God, as uncaused; கடவுள். |
அகாரம் | akāram n. <>agāra. House; வீடு. (பிங்.) |
அகாரியம் | a-kāriyam n. <>a-kārya. Improper act, unworthy deed, criminal or sinful action; தகாத செய்கை, நாவகாரியஞ் சொல்லிலாதவர் (திவ்.பெரியாழ்.4,4,1). |
அகாலபோசனம் | akāla-pōcaṉam n. <>a-kāla+. Untimely meal; காலந்தவறி யுண்னும் உணவு. (பதார்த்த. 1335.) |
அகாலம் | a-kālam n. <>akāla. Inauspicious or unseasonable time; காலமல்லாத காலம். (ஞானவா.பிரகலாத.61.) |
அகாலமரணம் | akāla-maraṇam n. <>id.+. Untimely death; காலமல்லாத காலத்து நேரும் மரணம். |
அகாலமிருத்து | akāla-miruttu n. <>id.+. See அகாலமரணம். . |
அகி 1 | aki n. <>ahi. Snake; பாம்பு. கடியகிப்பிணி தீர்ந்ததன்பின் (சேதுபு. இராமனருச்.30). |
அகி 2 | aki n. cf. ayas. Iron; இரும்பு. (பிங்.) |
அகிஞ்சனன் | akicaṉaṉ n. <>a-kicana. Destitute person; தரித்திரன். (பிங்.) |
அகிஞ்சை | akicai n. <>a-himsā. Harmlessness, abstaining from killing or giving pain; துனபபஞ்செய்யாமை. (சங்.அக.) |
அகிதம் | akitam n. <>a-hita. 1. That which is unfit, unsuitable; தகாதது. (தாயு.எங்குநிறை.1.) 2. Evil, harm; 3. Obstruction; |
அகிதலம் | aki-talam n. <>ahi+. Serpent world in the nether regions; நாகலோகம். அகிதலவரவினது (இரகு.யாகப். 79). |
அகிதன் | akitaṉ n. <>a-hita. Foe, enemy; பகைவன். (யாழ்.அக.) |
அகிமரால் | akimarāl n. <>ahimāra. Panicled babul. See வெள்வேல். (மலை.) |
அகிர்ப்புத்தினி | akir-p-puttiṉi n. <>ahir-budhnya. (Astrol.) The third of 15 divisions of night; இரவு 15 முகூர்த்தத்துள் மூன்றாவது. (விதான.குணா.73,உரை.) |
அகிருத்தியம் | a-kiruttiyam n. <>a-krtya. That which ought not to be done, crime; செய்யத்தகாத செயல். |
அகில் | akil n. <>agaru. [M,akil, Heb.ahalim,Gr.agallochon.] 1. Eagle-wood, l.tr., Aquilaria agallocha; ஒருவகை வாசனை மரம். 2. The drug agar, obtained from the trunk and branches of eagle-wood when they become gorged with a dark resinous aromatic juice, one of six tūpa-varkkam, q.v.; 3. Blinding-tree. See தில்லை. (L.) 4. Chittagong wood, l.tr., Chickrassia tabularis; |
அகிலம் | akilam n. <>a-khila. 1. The whole, all; முழுவதும். (திவா.) 2. Universe; 3. Earth; 4. Water; |
அகிற்குடம் | akiṟ-kuṭam n. <>agaru+. Vessel bearing agar incense; தூபக்குடம். அகிற்குடம் பரப்பி (சீவக.2391). |
அகிற்கூட்டு | akiṟ-kūṭṭu n. <>id.+. Perfume compounded of camphor, agar, sandal, honey, and spices; ஒருவகை வாசனைக் கலவை. உந்துசந் தனங்கர்ப்பூர முடனெரி காசு செந்தே, னந்தவேலங்க ளென்ப வகிற்கூட்டு (சூடா.12,36). |
அகீர்த்தி | akīrtti n. <>a-kīrti. Ill-fame, disgrace; அபகீர்த்தி. |
அகுசலவேதனை | a-kucala-vētaṉai n. <>a-kusala+. (Buddh.) Experience of sorrow; துக்கவுணர்ச்சி. |
அகுட்டம் | akuṭṭam n. cf. krṣṇa. Black pepper. See மிளகு. (W.) |
அகுடம் | akuṭam n. cf. kaṭu. Black hellebore. See கடுகுரோகணி. (மலை.) |
அகுணம் | akuṇam n. <>a-guṇa. 1. Want of attributes, as a characteristic of the Deity; நீர்க்குணம். 2. Bad quality, defect; |
அகுணியகில் | akuṇiyakil n. Cup-calyxed white cedar. See செம்பில். (L.) |
அகுதார் | aku-tār n. <>U. Haq-dār. Holder of a right, one in whom any property, perquisite or privilege is vested; உரிமையாளி. |
அகுதி | akuti n. <>a-gati. Destitute, helpless person; கதியிலி. அகுதியிவ டலையின்விதி, யானாலும் விலகரிது (திருப்பு,142). Vul. |
அகும்பை | akumpai n. Species of Trichodesma. See கவிழ்தும்பை. (மலை.) |
அகுலி | akuli n. See நறுவிலி. (மலை.) |