Word |
English & Tamil Meaning |
|---|---|
| நாயகப்பத்தி | nāyaka-p-patti, n. <>id. +. The stage where acting takes place; நாடகமாடும் தலைமையிடம் தூண்களின்) நிழல் நாயகப் பத்தியின்கண்ணும் அவையின்கண்ணும் படாதபடி (சிலப். 3, 108, உரை) |
| நாயகப்பானை | nāyaka-p-pāṉai, n <>id. +. The big pot use for poṅkal at a temple; கோயிலிற் பொங்கலிடும் பெரிய பானை. (W.) |
| நாயகம் | nāyakam, n. <> nāyaka. 1. Headship, superiority, supremacy, pre-eminence; தலைமை. மூவுலகுக்குந் தரு மொருநாயகமே (திவ். திருவாய். 3, 10, 11). 2. Greatness, honour, esteem; 3. The choicest or the most prized of a class of things; 4. See நாயகமணி. நாயகத்தைத்தொட்டு நவில்க (சைவச.பொது. 139). 5. Plant, s. sh., Ruellia patual; |
| நாயகம்பண்ணு - தல் | nāyakam-paṇṇu-, v. intr. <> நாயகம் +. To rule, exercise sovereignty; to impose authority; முதன்மை செலுத்துதல். (யாழ்.அக.) |
| நாயகமணி | nāyaka-maṇi, n. <>nāyaka+. 1. A large bead at the centre of a necklace; மணி மாலையின் நடுக்கோக்கும் பெருமணி. (சைவச. பொது 139.) 2. Central gem in an ornament; |
| நாயகமுத்து | nāyaka-muttu, n. <>id.+. A big pearl at the centre of a necklace; மாலையின்நடுவில் அமைந்த பெருமுத்து. துளையிடாத நாயகமுத்தென்றுமாம் (சீவக. 2184, உரை). |
| நாயகமேனி | nāyaka-mēṉi, n. <>id. + perh. மணி. A kind of emerald; மரகதப்பச்சை. (யாழ். அக.) |
| நாயகவளந்து | nāyaka-vaḷantu, n. <> நாயகம்+. See நாயகப்பானை (யாழ். அக.) . |
| நாயகன் | nāyakaṉ, n. <> nāyaka. 1. Lord, master, chief; தலைவன். பூதநாயகன் (கம்பரா. அங்கத. 21). 2. Husband; 3. King; 4. The Supreme Being; 5. Leader, conductor; 6. Head of 20 elephants and 20 horses; 7. A person appointed to the headship of ten villages; 8. Hero of a poem or story; |
| நாயகாதிபன் | nāyakātipaṉ, n. <> id. + adhipa. King; அரசன். (யாழ். அக.) |
| நாயகி | nāyakī n. <>nāyakī. 1. Lady, mistress; தலைவி. 2. Wife; 3. Pārvatī; 4. (Mus.) A kind of tune; 5. Heroine, as of a story; |
| நாயகை | nāyakai, n. <> nāyikā. A kind of musk, one of five kastūri, q.v., கஸ்தூரிவகை. (பதார்த்த. 10810.) |
| நாயடியேன் | nāy-aṭiyēṉ, n. <>நாய்+. 1. A term of humility meaning 'this dog is your slave; 'நாய்போல் அடிமைப்பட்ட யான்' என்ற பொருளில் வரும் ஒரு பணிவுமொழி. நாயடியேன் பாழ்த்த பிறப்பறுத் திடுவான் (திருவாச, 5, 13). |
| நாயப் | nāyap, n. <>U.nāib. Deputy subordinate official, lieutenant; உதவியதிகாரி. |
| நாயப்சிரஸ்ததார் | nāyap-cirastatār, n. <>id.+. Deputy Sheristadar; உபசிரஸ்ததார். |
| நாயர் | nāyar, n. <>M.nāyar. A Caste of Hindus in Malabar; மலையாளருள் ஒரு சாதியார். |
| நாயரஞ்சி | nāyaraci, n. <>நாய். See நாயுருவி. (மலை.) . |
| நாயறல் | nāyaṟal, n. Flat fish. See எருமை நாக்கி |
| நாயன் | nāyan, n. <>nāya. 1. The Supreme Being; கடவுள். 2. King; 3. Master, lord; |
| நாயன்தே | nāyaṉtē, n. cf. நயிந்தை A term of address meaning 'my lord; 'சுவாமி ' யென்று பொருள்படுந் தொடர். நாயன்தே இவன் திருவரைக்கு ஈடாம்படி வாட்டின படி (ஈடு, 4,3,5). |
| நாயன்மார் | nāyaṉmār, n. <>நாயன். 1. Lords, masters; தலைவர். (W.) 2. Gods; 3. Canonized šaiva Saints whose history is narrated in eriyapurānam; |
| நாயனகாரன் | nāyaṉa-kāraṉ, n. <>நாயனம் +. Player on clarionet; நாகசுரம் வாசிப்போன். Colloq. |
