Word |
English & Tamil Meaning |
|---|---|
| நார்க்கதுவு - தல் | nār-k-katuvu-, v. intr. <>id.+. To peel off bark from palmyra leafstalks; கத்தியாற் பட்டைசீவி நாரெடுத்தல். (J.) |
| நார்க்கயிறு | nār-k-kayiṟu, n. <>id.+. Coir rope; சொச்சைக்கயிறு. |
| நார்ச்சிலந்தி | nār-c-cilanti, n. <>id. +. Guinea-worm, Filaria medinensis; புழுவகை. Loc. |
| நார்ச்சிலை | nār-c-cīlai, n. <>id. +. 1. See நார்மடி. (W.) . 2. Bark of trees; |
| நார்ப்பட்டடை | nār-p-paṭṭaṭai, n. <>id. +. Fibre-extracting machine; நாருரிக்கும் எந்திரம். Loc. |
| நார்ப்பட்டு | nār-p-paṭṭu, n. <>id. +. [M. nārppaṭṭu.] 1. See நார்மடி. . 2. Gunny cloth; |
| நார்மட்டை | nār-maṭṭai, n. <>id. +. Stalk of palmyra leaf fit for nār; நார் உரிக்காத்தகுதியான பனைமட்டை; |
| நார்மடி | nār-maṭi, n. <>id.+. [K. nārmadi.] Cloth made of fibre, resembling silk; பட்டாடைபோல்வதும் நாராற்செய்ததுமான ஆடைவகை. (பதார்த்த. 1323.) |
| நாரகம் | nārakam, n. <>naraka. Hell; நரகம். (யாழ்.அக.) |
| நாரகர் | nārakar, n. <>nāraka. Sinners, as fit for hell; நாரகத்துக்குரிய பாவிகள். கடவுளைக் கயந்த நெஞ்சா நாரகர் (சிவதரு. பாவ.8). |
| நாரங்கம் | nāraṅkam, n. <>nāraṅga. See நாரத்தை. (சூடா.) . |
| நாரங்கி 1 | nāraṅki, n. <>id. See நாரங்கம். Loc. . |
| நாரங்கி 2 | nāraṅki, n. See நாராங்கி. Loc. . |
| நாரசிங்கம் | nāra-ciṅkam, n. <>Nārasimha. 1 Secondary Purāṇa, one of upapurāṇam, q.v.; உபபுராணத் தொன்று. (பிங்.) 2. A Compound medicine; |
| நாரசிங்கன் | nāra-ciṅkaṉ, n. <>id. Viṣṇu, in His Man-lion incarnation; மானிடமும் சிங்கமுமான உருவங்கொண்டவதரித்த திருமால். (பிங்.) |
| நாரணவன் | nāraṅavaṉ, n. (J.) 1. A kind of maggot in rams, under the horns; செம்மறியாட்டின் சொம்படியில் உண்டாம் கிருமிவகை. 2. A disease in cattle; |
| நாரணன் | nāraṇaṉ, n. <>Nārāyaṇa. Viṣṇu; திருமால். நாரணனை நாபதியை (திவ். இயற். நான்மு. 67). |
| நாரணா | nāraṇā, n. Sola pith. See நெட்டி. (மலை.) |
| நாரணி | nāraṇi, n. <>Nārāyaṇī. Durgā; துர்க்கை. (பிங்.) |
| நாரணிச்சட்டி | nāraṇi-c-caṭṭi, n. A kind of broad mud-vessel, used as a lamp on tiru-k-kārttikai day; திருக்கார்த்திகையன்று கோயிற்சந்நிதியில் எரிக்கும் விளக்குச்சட்டி. Nā. |
| நாரணியவன் | nāraṇiyavaṉ, n. <>நாரணி. šiva, as the Lord of Nāraṇi; [நாரணியை உடையவன்] சிவபிரான். அந்தி வணங்கொண்ட மேனிய னாநந்த னாரணியவன் (மருதூரந். 41). |
| நாரத்தம் | nārattam, n. (W.) 1. Sweet-flag, See வசம்பு. 2. Cf நலத்தம். Spikenard herb. |
| நாரத்தம்புல் | nārattam-pul, n. <>நாரத்தம்+. Lemon-grass, Audropogon schoenanthus; புல்வகை. (W.) |
| நாரத்தை | nārattai, n. cf. nāraṅga. 1. Orange, Citrus aurantium; மரவகை. (பதார்த்த. 746.) 2. Seville orange. 3. Loose-skinned orange, s.tr., Citrus Aurantium nobilis; 4. Indian wild-lime. |
| நாரதகீதக்கேள்வி | nāratakītakkēḷvi,. n. Nāradašikṣā, a Sanskrit work; நாரதசிட்சை யென்னும் வடநூல். நாரதகீதக் கேள்வி நுனித்து (பெருங். வத்தவ. 3, 58). |
| நாரதசரிதை | nārata-caritai, n. <>nārada+. An ancient work, not extant; இறந்துபட்ட தொரு தமிழ்நூல். (புறத்திரட்டு.) |
| நாரதப்பிரியம் | nārata-p-piriyam, n. <>Nārada-priya. Taṇikai hill; தணிகைமலை. மகதியாழ் முனிக்குறு பிரியம் விரவியாசிறப்பா னாரதப் பிரியம் (தணிகைப்பு. புராணவர.60). |
| நாரதபரிவிராசகம் | nārata-parivirācakam, n. <>Nārada-parivrājaka. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபதிடதங்களூள் ஒன்று. |
| நாரதம் | nāratam, n. <>nāra-da. 1. See நாரதீயம். . 2. A large lute; 3. Cloud; |
| நாரதராட்டம் | nāratar-āṭṭam, n. <>நாரதர்+. Sowing discord by tale-bearing; புறங்கூறி ஒருவருக்கொருவர் பகையுண்டாக்குகை. (W.) |
| நாரதன் | nārataṉ, n. <>Nāra-da. 1. Nārada, a celebrated sage and son of Brahmā; பிரம புத்திரராகிய ஒரு பிரபலமுனிவர். நாரதன் வீணை (சிலப்.6,18). 2. A Buddha; 3. Mischief-maker; tale-bearer; meddler; |
