Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சலாங்கலதானம் | paca-lāṅkala-tāṉām, n. <>id. +. A gift of five ploughs with lands to Brahmins ; ஐந்து ஏர்களை நிலத்துடன் அந்தணர்க்கு உதவுந் தானம். பஞ்சலாங்கலதானத்தின் பகுதியை (கூர்மபு, தானமுரை.64). |
| பஞ்சலி - த்தல் | pacali-, 11 v. intr. To be upset mentally ; மனந்தடுமாறுதல். மதுமயக்கத்தாற் பஞ்சலித்து (சிலப், 10, 131, உரை). |
| பஞ்சலிங்கம் | . n. <>pacan +. The five kinds of liṅgas or emblems of šiva worshipped in temples, viz., pirutivi-liṇkam, appu-liṅkam, tēyu-liṅkam, vāyu-liṅkam, ākāca-liṅkam பிருதிவிலிங்கம், அப்புலிங்கம், தேயுலிங்கம், வாயுலிங்கம், ஆகாசலிங்கம் என்ற ஐந்து சிவலிங்கங்கள். |
| பஞ்சலிப்பு | pacalippu, n. <>பஞ்சலி-. 1. Adverse circumstances; hardships of famine ; பஞ்சத்தின் வருத்தம். 2. Complaint of indigence; |
| பஞ்சலை | pacalai, n. 1.A river-fish, silvery, attaining at least a foot in length, Barbus sarana ; குறைந்தது ஒரடிவளர்வதும் வெண்ணிறமுள்ளதுமானஆற்றுமீன்வகை. 2. A fresh water fish, dark silvery, Barbus chrysopoma ; |
| பஞ்சலோகம் | paca-lōkam, n. <>pacan +. 1.The five kinds of metal, poṉ, irumpu, cempu, īyam, veḷḷi ; பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்ற ஐவகைத் தாதுக்கள் (பிங்.) 2. Amalgam of the five metals ; |
| பஞ்சலோபி | paca-lōpi, n. <>paca +. Great miser ; மிக்கலோபி.பஞ்சலோபித்தனம்.(W.) |
| பஞ்சவட்டந்தடி | pacavaṭṭan-taṭi, n. <>பஞ்சுகொட்டு-+. Bow for ginning cotton ; பஞ்சுகொட்டும் வில். (யாழ்.அக.) |
| பஞ்சவடம் | paca-vaṭam, n. Sacred thread worn by dvijas; பூணூல். (யாழ்.அக.) |
| பஞ்சவடி 1 | pacavaṭī, n. <>paca-vaṭī. The sacred grove of five banyans of the banks of the Godāvari, where Sitā was abducted by Rāvaṇa; கோதாவரிக்கரையிலுள்ளதும், ஐந்து ஆலமரங்கள் சேர்ந்திருக்கப்பெற்றதும் சிதாபிராட்டியை இராவணன் கவர்ந்துசென்ற இடமுமான தலம். பாங்கருளதாலுறையுள் பஞ்சவடி மஞ்ச (கம்பரா. அகத்.57). |
| பஞ்சவடி 2 | pacavaṭi, n. <>paca-vaṭa. Sacred thread of hair ; மயிர்க்கயிற்றாலாகிய பூணூல். பஞ்சவடி மார்பினானை (தேவா.228, 5). |
| பஞ்சவத்திரம் | paca-vattirram , n. <>pacavaktra. Lion, as broad-faced ; [அகன்றமுகமுடையது] சிங்கம். |
| பஞ்சவத்திரன் | paca-vattiraṉ, n. <>paca-vaktra. šiva, as five-faced; [ஐம்முகன்] சிவன் . (யாழ்.அக.) |
| பஞ்சவமுது | paca-v-amutu, n. <>பஞ்ச +. See பஞ்சாமிர்தம். (s.I.I,v,86.) . |
| பஞ்சவர் | pacavar, n. <>id. See பாண்டவர் பஞ்சவர்க்குத் து£து நடந்தானை (சிலப்.17, மடந்தாழு.). . |
| பஞ்சவர்ணக்கிளி | paca-varṇa-k-kiḷi,. n. <>பஞ்சவர்ணம்+. Macaw, a species of parrot, Trichoglossus , as having five colours ; ஐவர்ணமுடைய கிளிவகை. கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளிக்கூட்டமும் (குற்றா.குற.87, 3). |
| பஞ்சவர்ணம் | paca-varṇam, n. <>pacan +. The five colours, white, black, red, yellow, green ; வெள்ளை, கறுப்பு, சிவப்பு,மஞ்சள்,பச்சை என்ற ஐவகை நிறம். |
| பஞ்சவர்தூதன் | pacavar-tūtaṉ, n. <>பஞ்சவர்+. Kṟṣṇa , as the ambassador of the pāṇdavas ; [பாண்டவருடைய தூதாள்] கண்ணபிரான். பஞ்சவர்தூதனாய்ப் பாரதங் கைசெய்து (திவ் பெரியாழ்.1. 8, 3). |
| பஞ்சவலக்கம் | Pacavalakkam, n. See பஞ்சவற்கலம்.(சங்.அக.) . |
| பஞ்சவற்கம் | paca-vaṟkam, n. See பஞ்சவற்கலம். (பதார்த்த.510) . . |
| பஞ்சவற்கலம் | pacavaṟkalam, n. <>pacan +. Bark of the five trees atti, aracu, āl, pūvaracu, vēl; அத்தி, அரசு, ஆல் பூவரசு, வேல் என்பவற்றின் பட்டை. (மலை.) |
| பஞ்சவன் | pacavaṉ, n.<>id. The pāṇdya ; பாண்டியன.பழியொடு படராப் பஞ்சவ வாழி (சிலப்.20,33).(பிங்.) |
| பஞ்சவன்னக்கிளி | paca-vaṉṉa-k-kiḷi, n. <>பஞ்சவன்னம்+. See பஞ்சவர்ணக்கிளி. (யாழ்.அக.) . |
| பஞ்சவன்னம் | paca-vaṉṉam, n. See பஞ்சவர்ணம். . |
| பஞ்சவாசம் | paca-vācam, n. <>pacan+. The five aromatics, viz., ilavaṅkam, ēlam, karppūram, cāti-k-kāy, takkōlam; இலவங்கம், ஏலம், கர்ப்பூரம்., சாதிக்காய், தக்கோலம் என்ற ஐவகை வாசனைத்திரவியங்கள். (சிலப்.5. 26, உரை.) |
| பஞ்சவாத்தியம் | paca-vāttiyam, n. <>id. +. See பஞ்சமாசத்தக்கருவி. . |
