Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சவாதனம் | paca-v-ātaṉam, n. <>id. +. The five kinds of sitting posture assumed in worship, viz., aṉantācaṉam, kūrmācaṉam, ciṅkācaṉam, patumācaṉam, yōkācaṉam; அனந்தாசனம், கூர்மாசனம், சிங்காசனம், பதுமாசனம். யோகாசனம் என்று ஐவகையான ஆசனங்கள். (சி.சி.பர. மாயா.15.) |
| பஞ்சவாயுக்கள் | paca-vāyukkaḷ, n, <>id. +. 1. See பஞ்சப்பிராணன். (சங். அக.) . 2. The five vital airs of the body, viz., kirukaraṉ, kūrmaṉ, taṉacayaṉ, tēvatattaṉ, nākaṉ; |
| பஞ்சவாரவூரிடுவரி | paca-vāra-v-ūr-iṭu-vari, n. prob. id.+. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Tj. 94.) |
| பஞ்சவாரியம் | paca-vāriyam, n. <>id. +. A village committee entrusted with collection of village dues; கிராமவரிகளை வசூலிக்கும் அதிகாரக் கூட்டத்தார். (I. M. P. Tj. 83.) |
| பஞ்சவிஞ்சதி | paca-vicati, n. <>pacavimšati. Twenty-five; இருபத்தைந்து இருவகைப் பஞ்ச விஞ்சதி தெரியின் (ஞானா. 8, 5). |
| பஞ்சவிடயம் | paca-viṭayam, n. <>pacan +. The objects of the five senses, viz., iracam, uruvam, kantam, cattam, paricam; இரசம், உருவம் கந்தம் சத்தம் , பரிசம் என்ற ஐம்புலன். (சங்.அக.) |
| பஞ்சவிருத்தி | paca-virutti, n. <>id. + vrddhi. The twenty-five Reals. See தத்துவம், 4. (பு. வெ. 8, 33, உரை.) |
| பஞ்சவில்வம் | paca-vilvam, n. <>id. +. The five trees, viz., vilvam, nocci, māvilaṅkai, muṭkiḷuvai, viḷā; வில்வம், நொச்சி, மாவிலங்கை முட்கிளுவை, விளா என்ற ஐம்மரங்கள் வில்வநொச்சி மாவிலங்கை முட்கிளுவை வெள்ளில் பஞ்சவில்வமென்பார் (சிவராத். பு. சிவமான்.37). |
| பஞ்சவுப்பு | paca-v-uppu, n. <>id. +. See பஞ்சலவணம். (பதார்த்த. 1098.) . |
| பஞ்சவெச்சம் | paca-v-eccam, n. <>id. + எச்சம்2. See பஞ்சமகாயாகம். (யாழ்.அக.) . |
| பஞ்சறை | pacaṟai, n. <>பஞ்சு+அறை-.cf. பஞ்சட்டை. Weak condition; தளர்நிலை . Loc. |
| பஞ்சறைக்கிழவன் | pacaṟai-k-kiḻavaṉ, n. <>பஞ்சறை+. A decrepit, old man; தளர்ந்த கிழவன். (யாழ். அக.) |
| பஞ்சனம் | pacaṉam, n. <>bhajana. Destroying; hurting; breaking; அழிக்கை. (யாழ்.அக.) |
| பஞ்சனி | pacaṉi, n. <>pacanī. A chequered cloth for playing at draughts; சொக்கட்டான் மனை (யாழ்.அக.) |
| பஞ்சஸ்கந்தம் | paca-skantam, n. <>pacan+skandha. (Buddh.) See பஞ்சகந்தம் (மணி 30, 33, அரும்.) . |
| பஞ்சஸம்ஸ்காரம் | paca-samskāram, n. <>id. +. The five ceremonies of consecration, viz., tāpam, puṇṭaram, tāciya-nāmam, mantirōpatēcam, tiruvārātaṉam; தாபம், புண்டரம், தாசியநாமம், மந்திரோபதேசம், திருவாரதனம் என்ற ஐவகை ஸம்ஸ்காரங்கள். Vaiṣṇ. |
| பஞ்சா | pacā, n. <>U. pajā. 1. Clutch, grasp of the hand; கைப்பிடி. 2. Hand with the five fingers extended; 3. Figure of the hand carried as an emblem by Shiah Muslims in moharrum festivals; |
| பஞ்சாக்கரப்பஃறொடை | pacākkara-p-paḵṟotai, n. <>பஞ்சாக்கரம்+. A šaiva Siddhānta treatise by Piṉvēlappa-tēcikar, one of paṇṭāra-cāttiram, q.v.; பண்டாரசாத்திரத்துள் பின்வேலப்பதேசிகர் இயற்றிய நூல். |
| பஞ்சாக்கரம் | pacākkaram, n. <>pacākṣara. See பஞ்சாட்சரம். எந்தைபிரான் பஞ்சாக்கரம் போல் (திருவாலவா. திருநகரச்.3). . |
| பஞ்சாக்கினி | pacākkiṉi, n. <>pacāgni. 1. The five fires amidst which an ascetic practises self-mortification, four fires at the four points of the compass the fifth being the sun; தவஞ்செய்வோன்தன்னைச்சுற்றி நாலுதிசைகளிலும் மூட்டிய நாலு அக்கினியும் மேலேகாய்கிற் சூரியனும் ஆகிய ஐவகை அக்கினி. பஞ்சாக்கினி முதலியவற்றினின்று அரிய தவசுகளைச்செய்தும் (சி.சி.8, 11, மறைஞா). 2. The five mystic fires of the body, viz., irākam, vekuḷi, kāmam, caṭam, tīpaṉam; 3. The five kinds of fires, viz., utarākkiṉi, cūriya-tāpākkiṉi, tavākkiṉi, nitāka-kālākkiṉi, iravi-kāntākkiṉi; 4. The five kinds of stomachics viz., cukku, tippali, miḷaku, cīrakam, ēlam; |
| பஞ்சாக்கினிக்கொடி | Pacākkiṉi-k-koṭi, n. <>பஞ்சாக்கினி+. The five creepers, viz., vēli-p-parutti, kāṭṭu-k-karuṇai, maral, puḷi வேலிப்பருத்தி, காட்டுக்கருணை, மரல், புளிநறளை, நறளைக்கிழங்கு என்ற ஐவகைக் கொடிகள்.(சங்.அக.) |
