Word |
English & Tamil Meaning |
|---|---|
| பாசவர் 1 | pācavar n. <>பசு-மை Dealers in betel leaves ; வெற்றிலை யிடுவோர். பாசவர் வாசவர் மைந்நிண விலைஞரோடு (சிலப், 5, 26). |
| பாசவர் 2 | pācavar n. <>pašu. 1. Dealers in mutton; ஆட்டிறைச்சி விற்கும் வாணிகர். பாசவ ரூனத் தழித்த வானிணக் கொழுங்குறை (பதிற்றுப்.21, 9). 2. Dealers in meat; |
| பாசவர் 3 | pācavar n. <>பாசம். Those who manufacture and sell ropes; கயிறு திரித்து விற்போர் (சிலப்.5 26, உரை.) |
| பாசவல் | pācaval n. <>பசு-மை+அவல். 1. A preparation of rice obtained by pestling fried paddy; செல்வி யவல். பாசல் முக்கி (புறநா. 63). 2. Green field; |
| பாசவிமோசனம் | pāca-vimōcaṉam n. <>பாசம்+. Release of the soul from worldly bonds; மலபந்த நீங்குகை. (W.) |
| பாசவினை | pāca-vi¢ṉai n. <>id.+. Karma, causing bondage of souls; பந்தத்திற்கேதுவாகிய வினை. பாசவினையைப் பறித்து நின்று (திருவாச. 9, 4, ). |
| பாசவீடு | pāca-vīṭu n. <>id.+. See பாசநீக்கம். பாசவீடும் சிவப்பேறுமென (சி.போ.பா. 10, பக். 399). . |
| பாசவைராக்கியம் | pāca-vairākkiyam n. <>id.+. Determined hatred of worldly attachment; பிரபஞ்ச வெறுப்பு. (யாழ்.அக.) |
| பாசறவு 1 | pācaṟavu n. <>பாசு2+. Absence of worldly attachment; பற்றறுகை. (ஈடு, 5,3,1.) |
| பாசறவு 2 | pācaṟavu n. <>பாசு+அறு-. Loss of colour or complexion; நிறத்தினழிவு. பாசறவெய்தி (திவ். திருவாய். 5, 3, 1). 2. Sorrow; |
| பாசறை 1 | pācaṟai n. <>id.+அறை. 1. Encampment or tent of an invading army; warcamp; பகைமேற்சென்ற படை தங்குமிடம். மாறுகொள்வேந்தர் பாசறையோர்க்கே (பதிற்றுப். 83, 9). 2. Bushy cave, cavern; 3. A kind of tree; 4. A piece of board for smoothing plaster; |
| பாசறை 2 | pācaṟai n. <>id+அறு-. Suffering, distress, affliction; துன்பம். (திவா.) |
| பாசறைநிலை | pācaṟai-nilai n. <>பாசறை+. Theme of a victorious king continuing in war-camp even after the surrender of his enemies; பகைவேந்தர் பணிந்தொடுங்கவும் வெற்றி வேந்தன் அவரிடத்தைவிட்டு நீங்கானாய்ப் பாசறையில் தங்குதலைக் கூறும் புறத்துறை. (பு.வெ.3, 21.) |
| பாசறைமுல்லை | pācaṟai-mullai n. <>id.+. (Puṟap.) A theme in which a hero thinks of his beloved when absent from her in war-camp; பாசறையில் தலைமகன் தன் தலைவியை நினைக்கும் புறத்துறை (தொல்.பொ.76, உரை.) |
| பாசன் | pācaṉ n. <>pāša. 1. The soul, as subject to births and mundane attachments. சீவான்மா. (சது.) 2. Yama; 3. Varuṇa; 4. šiva; |
| பாசனக்கால் | pācaṇa-k-kāl n. <>பாசனம்+. Irrigation channel; நிலங்களுக்குப் பாயும் நீர்க்கால். Loc. |
| பாசனபேதி | pācaṉapēti n. See பாசாணபேதி. (சங். அக.) . |
| பாசனம் 1 | pācaṉam n. perh. பாய்ச்சு-. 1. Flood; வெள்ளம். இடும்பை யென்னும் பாசனத்தழுந்துகின்றேன் (தேவா. 955, 9). 2. Irrigation; 3. [T. pāšanamu, K. bāsu.] Diarrhoea; |
| பாசனம் 2 | pācaṉam n. <>bhājana. 1. Vessel; பாத்திரம். மணிப்பாசனத தேந்தி (பெரியபு. ஏயர்கோ.35). 2. Dish or plate for eating; 3. Mud vessel; 4. Boat; 5. Support, basis; 6. Receptacle; 7. Relations, kindred; 8. Share; 9. (Arith.) Division; 10. Deliverance; |
| பாசனம் 3 | pācaṉam n. <>pācana. (யாழ். அக.) 1. Fire; நெருப்பு. 2. A medicine; 3. Sourness; |
| பாசாங்கடி - த்தல் | pācāṅkaṭi- v. intr. <>பாசாங்கு+. To dissemble, feign innocence; போலியாக நடித்தல். Colloq. |
| பாசாங்கு | pācāṅku n. 1. Dissimulation, hypocrisy, pretence, humbug; போலிநடிப்பு. (W.) 2. Trickery, deception; |
| பாசாங்குக்கள்ளி | pācāṅku-k-kaḷḷi n. <>பாசாங்கு+. See பாசாங்குக்காரி. (W.) . |
