Word |
English & Tamil Meaning |
---|---|
இடைமை | iṭai-mai n. <>id. Medial consonants of the Tamil alphabet; இடையின் வெழுத்துக்கள். ஆவியிடைமை யிடமிடறாகும் (நன்.75). |
இடையர் | iṭaiyar n. <>id. Literally people inhabiting the middle region, applied specially to herdsmen as those who graze their cattle in regions known as mullai or forest pasture lying midway between hilly tracts or kuṟici and the plains or marutam; இடைச்சாதியார். (திவ்.பெரியதி.11,8,6). |
இடையல் | iṭaiyal n. <>id. Garment, cloth worn round the waist; துகில் (திவா.). |
இடையறவு | iṭai-y-aṟavu n. <>id.+ அறு-. Interval, break; இடைவிடுகை. இடையறவின் றிமைப்பளவும் (சூளா.துற.221). |
இடையறு - தல் | iṭai-y-aṟu- v.intr. <>id.+. To be interrupted; to cease in the middle; தடைப்படுதல். இன்ப மிடையறா தீண்டும் (குறள்.369). |
இடையாகெதுகை | iṭai-y-āketukai n. <>id.+ ஆகு+. (Pros.) A variety of initial etukai where only the second letter in each line of the verse is the same, as அகர முதல வெழுத்தெல்லா மாதி, பகவன் முதற்றே யுலகு; அடிதோறும் இரண்டாமெழுத்தொன்றே யொன்றிவரத் தொடுப்பது. (காரிகை.ஒழிபி.6, உரை). |
இடையாட்டம் | iṭai-y-āṭṭam n. <>id.+. Matter, affair, business; விஷயம். பரிச்சேதிக்கப் போகாதாயிற்றுத் தோஷப்பரப்பு இவ்விடையாட்டத்து என்றபடி (ஈடு, 1, 2, 2). |
இடையாயார் | iṭai-y-āyār n. <>id.+ ஆ-. Middle class; those belonging to the intermediate grade in any broad classification; மத்திமர். இடையாயார் தெங்கினனையர் (நாலடி.216). |
இடையிடு - தல் | iṭai-y-iṭu- v. <>id.+. intr. 1. To intervene, happen or occur in the middle; இடையில் நிகழ்தல்.தலைமகள் காரணமாக இடையிடும் இடையீடில்லை. (இறை.33, உரை). 2. To be omitted in the middle; 1. To place between, interpose; 2. To obstruct, as a passage; |
இடையிடை | iṭai-y-iṭai adv. <>id.+. At frequent intervals; ஊடேயூடே. இடையிடையடிக்கும் (கல்லா.7). |
இடையினம் | iṭai-y-iṉam n. <>id.+. Medial consonants of the Tamil alphabet; இடையெழுத்து. (நன்.70). |
இடையினமோனை | iṭai-y-iṉa-mōṉai n. <>id.+. (Pros.) Variety of consonantal assonance at the beginning of lines in which a medial consonant other than the one which has already appeared at the commencement of the line comes as mōnai; இடையினத்துள் யகரவகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருவது. (காரிகை.ஒழிபி.6, உரை). |
இடையினவெதுகை | iṭai-y-iṉa-v-etukai n. <>id.+. (Pros.) Variety of initial etukai where the second letter of each line other than the first is any medial consonant, except that which is already the second letter of the first line; இடையினத்துள் வந்தவெழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழுத்தாய் நிற்கவரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை). |
இடையீட்டெதுகை | iṭai-y-īṭṭetukai n. <>இடையீடு-+எதுகை. (Pros.) The initial etukai in every alternate line in a verse; ஒவ்வோரடி இடையிட்டு வரும் எதுகை. (காரிகை.ஒழிபி.6, உரை). |
இடையீடு | iṭai-y-īṭu n. <>இடை1+இடு-. 1. That which occurs or happens in the middle; இடையில் தோன்றுவது. 2. Obstacle, impediment; 3. Difference; 4. Answer to a query; 5. Interruption; |
இடையுவா | iṭai-y-uvā n. <>id.+. Full moon, as coming in the middle of the lunar month; பௌர்ணிமை. (திவ்.நாய்ச்.7, 3). |
இடையூறு | iṭai-y-ūṟu n. <>id.+ உறு-. Impediment, obstruction, hindrance; விக்கினம். (திருவிளை.விடையில.10). |
இடையெண் | iṭai-y-eṇ n. <>id.+. (Pros.) Variety of verse of a class known as ampōtaraṅkam consisting of trimetric lines; முச்சீர் ஓரடியாய்வரும் அபோதரங்க வகை. (காரிகை.செய்.10, உரை). |
இடையெழுஞ்சனி | iṭai-y-eḻu-caṉi n. <>id.+. (Astrol.) Middle asterism of the fifth sign of the zodiac wherein Saturn is reputed to exert a malignant influence; பூரநாள். (பிங்.) |
இடையெழுத்து | iṭai-y-eḻuttu n. <>id.+. The six consonants of the Tamil alphabet, viz., ய், ர், ல், வ், ழ், ள், classified as medial consonants as dist. fr. valleḻuttu and melleḻuttu. . |
இடையொடிவு | iṭai-y-oṭivu n. <>id.+ ஒடி-. Any destruction before the final dissolution of the world; அவாந்தர சங்காரம். (ஈடு, 1,3,3). |