Word |
English & Tamil Meaning |
---|---|
இணக்கு 2 | iṇakku n. <>இணக்கு-. 1. Union, harmony; இசைவு. இணக்குறுமென் னேழைமைதான் (தாயு.பராபர.273). 2. Comparison, match; |
இணக்கோலை | iṇakkōlai n. <>id.+ ஓலை. Deed of cession, of reconciliation, of agreement; உடன்படிக்கைப்பத்திரம். (W.) |
இணங்கர் | iṇaṅkar n. <>இணங்கு-. Match, comparison; ஒப்பு. கற்பிற் கிணங்க ரின்மையான் (கம்பரா.மீட்சிப்.147). |
இணங்கல் | iṇaṅkal n. <>id. 1. Consent, assent; உடன்பாடு. 2. The number 8; |
இணங்கலர் | iṇaṅkalar n. <>id.+ அல் neg. +அர். Enemies, as those who are not in agreement; பகைவர். |
இணங்கன் | iṇaṅkaṉ n. <>id. 1. Friend, man in agreement with another; நண்பன். வணங்குவோ ரிணங்கன் வந்தான் (திருவாலவா.28. 27). 2. Saltpetre; |
இணங்கார் | iṇaṅkār n. <>id.+ ஆ neg. +ஆர். Enemies, as those who are not in agreement; பகைவர். |
இணங்கி | iṇaṅki n. <>id. Girl's companion; lady's maid; தோழி. (பிங்). |
இணங்கு 1 - தல் | iṇaṅku- 5 v.intr. [M. iṇaṅgu.] To consent, comply with; மனம் பொருந்துதல். இச்சையாயின வேழையர்க்கே செய்தங்கிணங்கியே திரிவேனை (திருவாச.41, 9). |
இணங்கு 2 | iṇaṅku n. <>இணங்கு-. 1. Union, friendship; இணக்கம். உள்ளப்பெறாரிணங்கை யொழிவேனோ (திருப்பு.288). 2. Match, fitmate; 3. Devil; |
இணர் 1 - தல் | iṇar- 5 v.intr. To be dense; நெருங்குதல். இணரிய ஞாட்பினுள் (களவழி.34). |
இணர் 2 | iṇar n. <>இணர்-. [M. iṇar.] 1. Cluster of flowers; பூங்கொத்து. மெல்லிணர்க்கண்ணி (புறநா.24. 8). 2. Blossom, full-blown flower; 3. Flower petal; 4. Pollen; 5. Flame; 6. Bunch of fruit; 7. Order; arrangement, as of troops; 8. Continuance; 9. Sylhet orange. See கிச்சிலி. 10. Mango-tree. See மாமரம். |
இணரோங்கு - தல் | iṇar-ōṅku- v. intr. <>இணர்+. To prosper from generation to generation; பரம்பரையாக உயர்தல். இணரோங்கி வந்தாரை (பழ.72). |
இணாட்டு | iṇāṭṭu n. 1. Gill of fish; மீன் செதிள். (J.) 2. Small bit of palm leaf; |
இணாப்பு 1 - தல் | iṇāppu- 5 v.tr.cf. அணாப்பு-. To deceive, cheat; ஏய்த்தல். (J.) |
இணாப்பு 2 | iṇāppu n. <>இணாப்பு-. Deceit, cheating, fraud, guile; ஏய்ப்பு. (J.) |
இணுக்கு 1 - தல் | iṇukku- 5 v.tr. <>இணுங்கு-. See இணுங்கு. இலைகளை இணுக்கிக்கொண்டுவந்தான். |
இணுக்கு 2 | iṇukku n. prob. இணுக்கு-. 1. A little quantity, as a handful of leaves from a plant; கைப்பிடியளவு. 2. A stalk with leaves. 3. Twig, as formed on branches; 4. Fork or joining of a twig to its larger twig or branch; |
இணுங்கு - தல் | iṇuṅku- 5 v.tr. To pull off, as a leaf from a twig; to pluck, as a flower from a tree; பறித்தல். (சீவக.1241, உரை). |
இணை 1 - தல் | iṇai- 4 v.intr 1. To join, unite; சேர்தல். இணைந்துடன்வருவ திணைக்கை (சிலப்.3, 18, உரை). 2. To agree, acquiesce; to be suited; 3. To be like; to resemble; to be analogous; |
இணை 2 | iṇai n. <>இணை1-. [T. ena, K. eṇe, M. iṇa, Tu. iṇe.] 1. Union, conjunction; இசைவு. 2. Likeness, similitude, resemblance, analogy; 3. Two things of a kind; pair, couple, brace; 4. Aid, help, support; 5. Woman's locks; 6. Limit, boundary; 7. See இணைத்தொடை. |
இணை 3 - த்தல் | iṇai- 11 v.tr. caus. of இணை1-. [M. iṇe.] 1. To join, connect, unite; சேர்த்தல். 2. To fasten together; to tie, as a garland; |
இணைக்கயல் | iṇai-k-kayal n. <>இணை+. 1. Brace of carp in gold or silver, an auspicious object carried before kings or other great personages; one of aṭṭa-maṅkalam, q.v.; அட்டமங்கலங்களு ளொன்று (திவா.) 2. Two lines on the palm of the hand resembling a fish, and considered to augur prosperity; |