Word |
English & Tamil Meaning |
---|---|
இணைக்குறளாசிரியப்பா | iṇai-k-kuṟaḷ-āciriya-p-pā n. <>id.+. (Pros.) Variety of akaval verse wherein two or more lines contain a less number of feet than either the first or the last line; ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவல். (காரிகை.செய்.8. உரை). |
இணைக்கை | iṇai-k-kai n. <>id.+. (Nāṭya.) Gesture involving the use of both the hands in one of 15 different attitudes, viz., அஞ்சலி, புட்பாஞ்சலி, பதுமாஞ்சலி, கபோதம், கர்க்கடகம், சுவத்திகம், கடகாவருத்தம், நிடதம், தோரம், உற்சங்கம், புட்பபுடம், மகரம், சயந்தம், அபயவத்தம், வருத்தமானம், and dist. fr. iNai இரண்டு கைகளாற் புரியும் அபிநயம். (சிலப்.3. 18, உரை). |
இணைக்கொடைப்பொருள் | iṇai-k-koṭai-p-poruḷ n. <>id.+. Gifts made to a married couple on auspicious and festive occasions by relatives and others; சுபகாலத்தில் தம்பதிகளுக்கு உற்றார் முதலியோர் கொடுக்கும் பொருள். (சங்.அக). |
இணைக்கோணம் | iṇai-k-kōṇam n. <>id.+. ghōṇa. Pointed-leaved hogweed. See மூக்கிரட்டை. (இராசவைத்.40). |
இணைத்தொடை | iṇai-t-toṭai n. <>id.+. (Pros.) Concatenation in which there is metrical assonance as between the first two feet of a line of four feet; அளவடியுள் முதலிருசீர்க்கண்ணும் மோனை முதலாயினவரத் தொடுப்பது. (இலக்.வி.723, உரை). |
இணைப்பு | iṇaippu n. <>இணை3-. 1. Union, connection; இசைப்பு. 2. Equality; |
இணைபிரியாமை | iṇai-piriyāmai n. <>இணை+பிரி-. Indissoluble union, such as close friendship or boon companionship; விட்டுப்பிரியாதிருக்கை. |
இணைமட்டப்பலகை | iṇai-maṭṭa-p-palakai n. <>id.+. Parallel ruler; இரட்டைக்கோடு காட்டுங்கருவி. (C.E.M.) |
இணைமணிமாலை | iṇai-maṇi-mālai n. <>id.+. Poem of 100 stanzas in antāti form, consisting of pairs of stanzas, either veṇpa and akaval or veṇpa and kaṭṭaḷai-k-kalittuṟai; பிரபந்த வகை. (இலக்.வி.818). |
இணைமுரண் | iṇai-muraṇ n. <>id.+. (Pros.) Metrical succession of feet in which there is antithesis in the first two feet of a line; ஓரடியின் முதலிருசீரும் முரண்பட இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை). |
இணைமோனை | iṇai-mōṉai n. <>id.+. (Pros.) Alliteration in which the first two feet of a line of verse begin with the same or similar sounds; ஓரடியின் முதலிருசீரினும் மோனை இயைந்துவருந் தொடை (காரிகை.உறுப்.16, உரை). |
இணையடி - த்தல் | iṇai-y-aṭi- v.intr. <>id.+. Knock-knee; முட்டுக்கால் தட்டுதல். Loc. |
இணையணை | iṇai-y-aṇai n. <>id.+. Matresses spread one over another for comfort; பலவனா அணை. இனையணை மேம்படத் திருந்துதுயில் (சிலப்.4. 67). |
இணையளபெடை | iṇai-y-aḷapeṭai n. <>id.+. (Pros.) Variety of rhyme in which the first two feet of a line in a stanza have protracted vowel-sounds; முதலிருசீரினும். அளபெடை வருந்தொடை. (காரிகை.உருப்.16. உரை). |
இணையாவினைக்கை | iṇaiyā-viṉai-k-kai n. <>இணை1-+. (Nāṭya.) Gesture with one hand, of which 33 varieties are mentioned, viz., பதாகை, திரிபதாகை, கத்தரிகை, தூபம், அராளம், இளம்பிறை, சுகதுண்டம், முட்டி, கடகம், சூசி, கமலகோசிகம், காங்கூலம், கபித்தம், விற்பிடி, குடங்கை, அலாபத்திரம், பிரமரம், தாம்பிரசூடம், பிசாசம், முகுளம், பிண்டி, தெரிநிலை, மெய்ந்நிலை, உன்னம், மண்டலம், சதுரம், மான்றலை, சங்கு, வண்டு, |
இணையியைபு | iṇai-y-iyaipu n. <>இணை+. (Pros.) Rhyming of the last two feet of a line of verse; ஓரடியின் ஈற்றுச்சீரிரண்டும் இணைந்து வருந்தொடை. (காரிகை.உறுப்.16, உரை). |
இணையெதுகை | iṇai-y-etukai n. <>id.+. (Pros.) Form of rhyme in which the first two feet of a line of verse rhyme with each other; ஓரடியின் முதலிருசீரினும் எதுகையியைந்துவருந் தொடை. (காரிகை.உறுப்.16, உரை). |
இணைவன் | iṇaivaṉ n. <>id. One who is closely related to or intimately associated with; இணைந்திருப்பவன். இணைவனா மெப்பொருட்கும் (திரு.திருவாய்.2,8,1). |
இணைவிழைச்சி | iṇai-viḻaicci n. See இணைவிழைச்சு. இணைவிழைச்சு தீதென்ப (இறை.1, உரை.பக்.9). |
இணைவிழைச்சு | iṇai-viḻaiccu n. <>இணை1-+. Sexual copulation; புணர்ச்சி. |
இத்தத்து | ittattu n. <>Arab. iddat. See இத்தா. Muham. . |
இத்தனை | i-t-taṉai adj. <>இ3+. 1. So much; இவ்வளவு. இத்தனை காலமும் போய்க்கிறிப் பட்டேன் (திவ்.பெரியாழ்.5,3,8). 2. A few; |
இத்தா | ittā n. <>Arab. iddat. Period of seclusion incumbent on a Muhammadan woman in consequence of the dissolution of her marriage either by divorce or by the death of her husband; வெளியில் வாராமை. புருஷன் இறந்தால் மனைவி நான்குமாதம் பத்துநாள் இத்தா விருக்கவேண்டும். Muham. |