Word |
English & Tamil Meaning |
---|---|
இராக்குருடு | irā-k-kuruṭu n. <>id.+. Night-blindness; nyctalopia; மாலைக்கண். |
இராகங்கல - த்தல் | irākaṅ-kala- v.intr. <>rāga+. (Mus.) One melody-type running into another, considered a defect in singing; ஓர் இராகம் மற்றொன்றோடு சேர்தல். |
இராகதத்துவம் | irāka-tattuvam n. <>id.+. (Saiva.) One of cuttācutta tattuvam. See அராகதத்துவம். . |
இராகப்புள் | irāka-p-puḷ n. <>id.+. Sweet-singing bird; சின்னரம். (பிங்.) |
இராகம் | irākam n. <>rAga. 1. Desire, passion love; ஆசை. நல்லிராக மிஞ்ச (பாரத. சம்பவ. 94.) 2. (Saiva.) See இராகதத்துவம். 3. Bloom, colour, tint; 4. Redness; 5. Music; 6. (Mus.) Specific melody-types of which those mentioned in standard works number 32, viz., மேகரஞ்சி, குறிஞ்சி, பூபாளம், கைசிகம், வராளி, மலகரி, பல்லதி, இந்தோளம், படமஞ்சரி, நாராயணி, நாட்டை, வசந்தம், பௌளி, ஸ்ரீராகம், பங்கரளம், கூர்ச்சரி, கௌளி, காந்தாரி, காம்« |
இராகமாலிகை | irāka-mālikai n. <>id.+ mālikā. Song whose several parts are adapted to be sung in different melody-types; இசைப்பாட்டுவகை. |
இராகமெடு - த்தல் | irākam-eṭu- v.intr. <>id.+. To pitch a melody-type; ஆலாபனஞ்செய்தல். (W.) |
இராகவன் | irākavaṉ n. <>Rāghava. Rāma, a lineal descendant of Raghu; இராமன். (திவ். பெருமாள். 8,1.) |
இராகவி | irākavi n. A small plant. See ஆனைநெருஞ்சி. (மலை.) |
இராகவிண்ணாடகம் | irākaviṇṇāṭakam n. Indian laburnum. See சரக்கொன்றை. (மலை.) |
இராகவிராகம் | irāka-virākam n. <>rāga+vi-rāga. Desire and aversion; வேண்டுதல் வேண்டாமை. |
இராகவேகம் | irāka-vēkam n. <>id.+. Increasing of desire; ஆசைமிகுகை. (பு. வெ. 12, பெண், 5, உரை.) |
இராகி 1 | irāki n. Soldering powder; பற்றாசு. (பி.வி. 30, உரை.) |
இராகி 2 | irāki n. [T.K.M. Tu. rāgi.] cf. rājikā. Ragi, cereal, Bleusine coracana; கேழ்வரகு. |
இராகு 1 | irāku n. <>rāhu. RAhu, the ascending node of the moon regarded as one of the nine planets, and believed to have the form of a monstrous serpent or dragon which, with KEtu, the descending node, is supposed to seize the sun and the moon and thus cause the eclipses, Caput d நவக்கிரகங்களு ளொன்று. |
இராகு 2 | irāku n. cf. rāhu-ratna. Sardonyx, Rāhu's gem; கோமேதகம். (W.) |
இராகுகாலம் | irāku-kālam n. <>rAhu+. A shifting period of 1 1/2 hours on every day of the week, considered to be inauspicious, being the time under the influence of Rāhu; இராகுவுக்குரியவேளை. |
இராகுமண்டலம் | irāku-maṇṭalam n. <>id.+. Shadow of the earth; பூமியின்சாயை. மருவுபூமியின் சாயலா மிராகுமண்டலம் (கூர்மபு. மண்டலவளவை. 10). |
இராகூச்சிட்டம் | irākūcciṭṭam n. <>rāhūcchiṣṭa. Wild leek, Allium ampeloprasum; வெண்காயவகை. (மலை.) |
இராச்சியபரிபாலனம் | irācciya-paripālaṉam n. <>rājya+. Administration of a kingdom or state; அரசாட்சி. |
இராச்சியபாரம் | irācciya-pāram n. <>id.+. Burden or responsibilities of government; அரசாளும் பொறுப்பு. |
இராச்சியம் | irācciyam n. <>rājya. 1. Kingdom, state, realm; அரசாளுந்தேசம். இராச்சியமு மாங்கொழிய (திவ். பெரியாழ். 4,8,4). 2. World; 3.Rule, reign; |
இராச்சியலக்ஷ்மி | irācciya-lakṣmi n. <>id.+. Sovereign power, personified as a goddess; அரசுச்செல்வம். |
இராச்சொல்லாதது | irā-c-collātatu n. <>இரா+. 1. Needle, a thing which should not be mentioned at night; ஊசி. 2. Sweet flag, Acorus calamus, of the same category; |
இராச்சொல்லாதவன் | irā-c-collātavaṉ n. <>id.+. cf. divā-kīrtya. Barber, a name to be uttered only by day and not to be mentioned at night; அம்பட்டன். |
இராசக்கிருகம் | irāca-k-kirukam n. <>rājan+grha. Royal palace; அரண்மனை. |
இராசகரம் | irāca-karam n. <>id.+id. King's palace; அரண்மனை. Loc. |
இராசகற்பனை | irāca-kaṟpaṉai n. <>id.+. Royal command, order of a king or other ruling power; அரசனாணை. (W.) |
இராசகன்னி | irāca-kaṉṉi n. <>id.+. King's daughter, princess; அரசிளம்பெண். |